Friday, January 13, 2012

மழையினால் அவதியுறும் காக்கை தீவு மக்கள்

0 comments
கடற்தொழிலினை நம்பி வாழ்க்கையினை நடத்தும் காக்கை தீவு மக்கள் இன்று மழையினால் பெரும் சிரமத்தினையே எதிர்நோக்கும் நிலை காணப்படுகின்றது. இப்பிரதேசமானது துஃ133 கிராம சேவையாளர் பிரிவை கொண்டமைந்தது. மொத்தமாக 86 கிராமங்களைக் கொண்டுள்ளது.
மழைகாலம் என்றால் சாதாரணமாகவே எல்லோருடைய அன்றாட செயற்பாடுகளும் பாதிப்பிற்கு உள்ளாவது வழமை. அதிலும் கடற்கரையினை அண்டிய பிரதேசங்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் சந்தர்ப்பம் உண்டு.
அந்த வகையில் மீனவகிராமமான காக்கை தீவு மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள்.  இது தொடர்பாக பாக்கியநாதன் சந்திரன் என்ற மீனவ தொழிலாளி தெரிவிக்கையில், “மழை பெய்தால் வீட்டிலே இருக்க முடியாது. வீட்டிற்குள் வெள்ளம் வந்து விடும். இதனால்  இங்குள்ள மக்கள் நோய்த்தாக்கங்களுக்கும்  உள்ளாகின்றனர்.  தொழிலுக்கும் போக முடியாமல்  நாளாந்த வருமானம் கிடைக்காமல் போகின்றது இவ்வருமானத்தை நம்பியே  எமது நாளாந்த செலவுகள் இருக்கின்றது. எமக்கு தெரிந்ததோ இந்த தொழில் மட்டும் தான். இப்படித்தான் எங்கட நிலைமை எல்லாம் இருக்கு” என்று சலிப்போடு தெரிவித்தார்.
மேலும்;  இப்பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் சிநு குளம் ஒன்றும் அமைந்துள்ளது. இங்கு மழை நேரத்தில் குளமானது நிறம்பி காணப்படுகின்றது.  அத்துடன் மழை வெள்ளம்  அதிகரிக்கும் பொழுது இந்நீர்ரானது வெளியேறி  கடலுன்  கலக்கமுடியாத நிலையும்  காணப்படுகின்றது. இதனால் அதற்கு அருகில் அருக்கும் வீடுகளில் நீரானது உட்புகுவாதால் இப்பகுதியில  வசிக்கும்  மக்கள்  பெரும் சிரமத்தினை  எதிர் நோக்குகின்றனர். இதற்காக  அமைக்கப்பட்ட  அணைக்கட்டும்  சரியான  முறையில்  அமைக்கப்படாததே இந்நிலைமைக்கு காரணமாக  காணப்படுகின்றது. யசாக் நிறுவனம் 10 லட்சம் செலவில் 2008 ஆண்டு குளத்தின் ஒரு பகுதி கட்டை அமைத்தது தந்தது. சிறுவர் பாதுகாப்பு நிதியம் 50லட்சம் செலவில் 2004 ஆண்டு வாய்கால் கட்டி தந்தார்கள். ஆனாலும் மழை காலங்களில் வெள்ளத்தண்ணீர் வீடுகளுக்குச் போவதும் நாங்க இடம் பெயர்வதும் தொடந்து கொன்டே தான் இருக்குது.
இவ்வாறு மழைகாலங்களில் காக்கை தீவு மக்கள் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.






ஆக்கம் - ஜெ.மரீன்



மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply