Friday, January 13, 2012

என்றும் நினைவில் நிற்கும் விமானப்பயணம்

0 comments
மனிதன் என்பது வெறுமனே வளர்ச்சியோடு சம்மந்தப்பட்டதொன்றல்ல அவன் பிறந்ததில் இருந்து ஒவ்வொறு வளர்ச்சிப்படி நிலைகளையும் தாண்டும் போது அவ்வளர்ச்சிப்படி நிலைகளையும் தாண்டும் போது அவ்வளர்ச்சி விருத்தியைத் தாண்டக்கூடியவகையில் அவனது செயற்hடுகள் அமையவேண்டும் என்பதே ஓவ்வொரு தாயினதும் எதிர்பாப்பும் .


எனவே இந்த வளர்ச்சி விருத்தி எப்போதாவது ஏற்படலாம் என விட்டுவிட முடியாது. அந்தந்த வயதினில் ஏற்பட்டால்தான் அதற்குரிய மதிப்பும் திறனும் கிடைக்கின்றது. மனிதனின் வாழ்க்கைப்படிகளில் பலவற்றைக் காண்பதுக்கு ஏறுவதும் இறங்குவதும் போல ஓரு பயணம் என்றால் அவ்பயணத்தில் பலவற்றைக் கண்டுகொள்ள முடியும். அந்த கணடு;கொள்ளலில் சில ஏற்கனவே தெரிந்த விடயம் இன்னும் சில தெரியாதவை அதிலும் மறக்கமுடியாத சம்பவங்கள் என்று மூன்று வகையான கண்டுகொள்ளளை நாம் காண்கின்றோம். அந்தவகையில் நாம் கடந்தமாதம் 17 ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடககற்கை நிலையத்தினால் இந்தியாவுக்கான கல்வி சுற்றுலாவொன்றை மேற்கொண்டோம். அதிலே பல அனுபவஙகளை பெற்றுக்கொண்டாலும் இதில் விமான நிலைத்தில் ஏற்பட்ட அனுபவங்களை சற்று கீழே தருகின்றேன.;


மிக்;,கிபீர்,கெலிகெப்ரர்,வண்டு, சுப்பர்சொனிக்,ஏறோப்பிளேன் ஆகிய சொற்களை விடுதலைப்புலிகளின் போர் நடவடிக்கை காலகட்டத்தில் தளபதிகள் வாயிலாகவும்; ஈழநாதம் பத்திரிகைவாயிலாகவும் அறிந்துகொண்டு கற்பனை மட்டும் செய்துகொண்ட எனக்கு இன்று நிஜமாகவே காணும் வாய்ப்பு ஏற்பட்டது.


      நாம் கொழும்பு விமானநிலையத்துக்கு செல்வதற்கு ஆயத்தமாக எமது கடவூச்சீட்டினை கொடுத்து எமது பொதிகளையெல்லாம் கடமையில் நின்ற உத்தியோகத்தரால் பரிசோதித்த பிற்பாடு எமக்கான விண்ணப்பப்படிவத்தை பூரணப்படுத்தி கொடுத்துவிட்டு எமக்கு குறிக்கப்பட்ட விமானநிலையத்தில் ஏறுவதற்காக செல்கையில் விமான வாயிளில் நின்று பெண்ணொருவர் எம்மை தமது கரங்கள் கூப்பி வரவேற்றார் அதனைத்தொடர்ந்து எமக்குரிய ஆசனத்தில் அமர்ந்தேன.; அப்போது யாவருமே புதுமுகம் இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை அருகில் இருந்த ஓரு சகோதரனைப்பாத்தேன். அவர் என்ன செய்கிறாறோ அதனைப்போன்று நானும் இடுப்புப்பட்டியை மாட்டிடேன். அடுத்தது என்ன செய்வது என்று மனம் திக்குமுக்காடியது. பின்னர் விமானம் மெல்ல மெல்ல உயர எனக்கு மனதில் பயமாக இருந்தது எப்படா இறங்குவம் என்று இருந்தது ஓரு மாதிரி விமானநிலையமும் வந்துசேர்ந்தது.


இப்படியாக எனக்கு புதிய விடயங்களாக அன்று இருந்தாலும் இன்று இவை என்வாழ்வில் அனுபவமாக கைகொடுக்கின்து. மொத்தத்தில் பில்கேட்ஸ் சொல்லுவது போன்று “நல்ல முடிவுகள் அனுபவத்தில் இருந்து பிறக்கின்றன ஆனால் அனுபவமோ நல்லதான முடிவுகளில் இருந்து கிடைக்கின்றன.
இப்படியாக ஒவ்வொரு சம்பவங்களும் புதிய அனுபவங்களாக இருந்தது இப்படிப்பட்ட மறக்க முடியாத பயணமாக இது அமைந்தது.





மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply