Thursday, January 12, 2012

அனாததரவற்று விடப்பட்டிருக்கும் மக்களது அல்லல் வாழ்க்கை

0 comments





ஓவ்வொரு மக்களுடைய வாழ்க்கை கோலங்களும் வேறுபட்டவையாகவும் மாறுபட்டவையாகவும் காணப்படுகின்றன. இந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள மக்களது வாழ்க்கை கோலங்களும் இதற்க்கு வதி விலக்கல்ல. நாம் இதுவரை காலமும் இங்கிருந்து கொண்டு அங்குள்ள மக்களது லௌளீகமான வாழ்க்கை பக்கங்களையே ஊடகங்கள் ஊடாக பார்த்து வந்தோம். நேரடியாக அங்கு சென்று அம் மக்களது இருள் படந்த வாழ்க்கை பக்கங்களை நேரடியாக சென்று பார்த்த போது எனது மனதில் மறக்க முடியாத கனத்த அனுபவத்தை ஏற்படுத்தி விட்டது.







        அரண்மனை போன்ற வீடுகளில் சந்தோசமாக வாழ்ந்து வருகின்ற ஒரு பகுதி மக்களும் சந்ததி சந்ததியாக வீடு என்றால் எப்படி இருக்கும் என்று உணர்வு பூர்வமாக அறிய முடியாதவர்களும், தமது பரம்பரை முழுவதுமே  ஆடம்பரமாகவும், சந்தோசமாகவும் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் சொத்து சேர்க்கும் ஒரு பகுதியும் இப்போதய்க்கு ஒரு வேளைக்கான உணவு மட்டும் கிடைத்து விட்டால் போதும் என அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் ஒரு பகுதி மக்கள் என பல முகங்களாக இங்குள்ளவர்களது வாழ்க்கை அமைந்துள்ளது.








 காலை வேளையில் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை நகர வீதிகள், கடற்கரைகள், ,பூங்காக்கள்,புகையிரத   இரவு வேளையில் பல உறவுகளை உறங்க வைப்பதற்கான உறைவிடமாக உள்ளது. சூரியனது அஸ்தமனத்தின் பிற்பாடு இவ் இடங்களில் நடந்து செல்ல முடியாதவாறு உறங்குகின்ற இவர்களில் குழந்தைகள், பெண்கள், பெரியோர்கள் என்று வேறுபாடு எதுவுமே கிடையாது. எல்லோருக்குமே தமது வீடுகள் மாளிகைளாக காணப்படுகின்ற போதும் இவர்களுக்கு மட்டும்  மாளிகையாக இவ் வீதிகளே உள்ளது. ஏனெனில் இவர்கள் இளைப்பாறுவதற்க்கும் உறங்குவதற்க்கு மட்டும் அல்லாது இன்று உயிர் ;வாழ்ந்து கொண்டிருப்பதற்க்;கும் இவ் வீதிகளே இன்று அடைக்கலம் கொடுத்துள்ளது.

         இங்கு உள்ள சிறுவர்களோ படிப்பின்றி சிறு வயதிலேயே வேலைக்கு அமர்த்தப்படுகின்ற அதே வேளை பிறந்து குறுகிய காலப்பகுதியில் ஆநாதரவாக விடப்படுகின்ற சம்பவங்களும் இங்கேயே அதிகளவில் இடம்பெறுகின்றது. இவர்கள் தமது பசிப்பிணியை போக்க குப்பை மேடுகளில் கழிவாக போடப்படும் உணவுகளையே உண்கின்றனர். இதனை எடுக்கும் போது கூட நீயா? நானா? என்று போட்டி போடும் இந்தக் காட்சியை எமது நிலையில் இருந்து சிந்தித்து பார்க்கவே முடியவில்லை. இங்கு உள்ள சிலர்  குழந்தைகளையே மூலதனமாக கொண்டு தமது ஒருவேளை உணவை கூட மீட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர்கள் பிறந்து 3மாதமே ஆகாத நிலையில் வெய்யிலையோ மழையினையோ பொருட்படுத்தாமல் குழந்தைகளை கொண்டு சென்று பிச்சை எடுக்கின்றார்கள்.
 எல்லா இடங்களிலும் கழிவக ற்றும் இடங்கள் துப்பரவாக இருக்க வேண்டும் என்று சுகாதார சபை விழிப்புணர்வு செய்கின்ற போதும் இவர்களை ஒரு கணம் கூட திரும்பிப் பார்ப்பதில்லை. ஏனெனில் இவர்கள் கடற்கரை களிலேயே தமது கழிவுகளை அகற்றுகின்ற அதே வேளை இவ் இடங்களிலேயே தினமும் குளிக்கின்றார்கள். மேலும் 4அடி நீள அகலங்க ளையே கொண்ட குப்பத்து வீடுகளில் வசிப்ப பார்களது ஒரு குடும்பத்தில் எட்டு அல்லது பத்து பேர் வரை வசித்து வருவதனால் இடப் பிரச்சனையே இங்கும் தலைதூக்கி உள்ளது. இதனால் இவர்கள் கூட இவ் இடங்களையே நாட வேண்டிய நிலை உள்ளது.; மேலும் இங்கு ஊடகங்களோ பிரபலங்களினது ஒவ்வொரு அசைவுகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருக் கின்ற அதே வேளை வாழ்வாதாரம் இன்றி இருக்கின்ற மக்களது பிரச்சனைகளை ஒரு கணம் கூட  திரும்பிப் பார்ப்பதில்லை. நிச்சயம் நமக்கு கூட ஒரு விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இம் மக்களை பார்க்கின்ற போதே எமது வாழ்க்கையினது அருமை பெரு மைகள் எல்லாம் எமக்கு புரிகின்றது.




மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply