.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் முழுநேர நான்காம் அணி மாணவர்களாகிய நாம் உள்ளகப் பயிற்சிக்காக கொழும்பு செல்லவேண்டி இருந்தது.செல்லும் நாளுக்கு ஒரு வாரத்திற்க்கு முதலே ஆயத்தங்கள் செய்யத்தொடங்கிவிட்டோம்.
செப்ரெம்பர் மாதம் 6ஆம் திகதி.அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் மாணவர்கள் அனைவரும் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி
நிலையத்தில் கூடினோம்.எம்மை வழியனுப்பி வைப்பதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பேராசிரியர் ஞானகுமாரன்
அவர்கள் வந்திருந்தார்.அவரது வாழ்த்துரை மற்றும் கருத்துக்கள் மற்றும் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் இயக்குனர்
திரு.தே.தேவானந் அவர்களின் அறிவுரைகள் வழங்கினார்கள்.
இரவு 7.30 மணியளவில் யாழிலிருந்து கொழும்பை நோக்கிப் புறப்பட்டோம். செப்ரெம்பர் 07 கொழும்பில் கண்விழித்தோம்.எமக்கென முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்ட கொழும்பு தழிழ்ச்சங்க விடுதியினுட் சென்று காலை 8.00 மணிக்கு மீண்டும் பேரூந்தினுள் ஏறினோம்.அவ்வாறு எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.ஏனெனில் பாராளுமன்றம் செல்ல வேண்டும்.
தூக்கம் ஒருபுறம் விடாமற் துரத்த பாராளுமன்றத்தை பார்க்கும் ஆவல் எனக்குள்.
நேர பிரயாணத்திற்குப் பின் பாராளுமன்றம் அமைந்துள்ள பிரதேசத்தை அடைந்தோம்.பாராளுமன்ற வாயிலில் பல அறிவுரைகள் எமக்கு வழங்கப்பட்டன.பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் இடத்தில் ,கதைக்கக்கூடாது போன்றவை அவற்றில் சில. சற்றே உள்நுழைந்தால் நான்கு இடங்களில் பொலிஸாரின் உடற்சோதனை.இந்த அளவிற்கு உடற்சோதனை எங்குமிருக்காது.எல்லாவற்றையும் எதிர்கொண்டு கூட்டம் இடம்பெறும் கூடத்தினை அடைந்தோம். முதன் முதலில் பாராளுமன்றத்திற்கு சென்ற எனக்க வியப்பாக இருந்தது. பாராளுமன்றம் தொடர்பான சகல விடயங்களையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.சர்ச்சைக்குரிய அரசியல்வாதி மேர்வின் சில்வாவின் சண்டையை நேரிற் பார்வையிட்டது மறக்க முடியாத நிகழ்வு.
இந்த வயதில் பாராளுமன்றத்திற்கு சென்று அங்கு இடம் பெற்ற அமர்வில் கலந்து கொண்டது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்
மொழிபெயர்ப்பாளரது உதவியுடன் அனைத்து விளக்கங்களையும் பெறக் கூடியதாக இருந்தது. எந்தெந்த ஆசனங்களில் எங்கெங்கு யார் இருப்பார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். மூன்று மாதங்களுக்கொரு தடவை ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தர வேண்டும் என்ற தகவலையும் சொன்னார். நாம் சென்றிருந்த சமயத்தில் சபை கூடவில்லை என்றாலும் மதியம் அவை கூடுமென்று தகவல் தந்தார்கள். வந்தது தான் வந்து விட்டோம்; அதையும் பார்த்து விடலாம் என்ற ஆர்வத்துடன் கேட்க அனுமதியும் கிடைத்தது. முன்பு ஆட்சி புரிந்தவர்களது சிம்மாசனங்கள் தொப்பி என்பவற்றை பார்க்கவும் முடிந்தது..இப்போது ஒரு புதிய ஆசை..
மறுநாள் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிற்கு சென்றோம். அங்கு நடை பெற்ற மாநாட்டின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. பல ஊடகவியலாளர்களின் அறிமுகத்தை அங்கு பெற்றுக் கொண்டேன்.அதே நாளில் மாலை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கொழும்பு இதழியல் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து “போருக்குப் பின்னரும் முன்னருமான செய்தி சேகரிப்பின் தன்மை”என்ற தலைப்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றியமை மற்றுமொரு சிறந்த அனுபவமாகும்.
சிங்கள,ஆங்கில ஊடக மாணவர்களின் சந்திப்புக் கிடைத்தமை எமது கல்விசார் நடவடிக்கைகளிற்கு பெரிதும் உதவுமென நம்புகின்றேன்.சென்றவுடன் என்னுடன் பேசி அறிமுகம் செய்து கொண்டனர்.
அவர்களுடன் நட்பு ரீதியான பல விளையாட்டுச் நிகழ்வுகளில் ஈடுபட்டோம்.மிகவும் சுவாரஸ்யமான நிகழ்வாக அமைந்தது.சொல்லப் போனால் அங்கும் பல மறக்க முடியாத அநுபவங்கள் உள்ளன.
சென்ற இடங்களுள் மனதைக் கவர்ந்தது கொழும்பு நூதன சாலை.அங்கிருந்த வரலாற்றுச் சான்றுகளான .பண்டைய காலத்து நாணயங்கள், மன்னர்கள் அணிந்த ஆபரணங்கள், உடைகள் ,ஆயுதங்கள் ,பாவித்த வேறு பல பொருட்கள அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன
றி சக்தி வு.ஏஇ ஆ.வு.ஏ ருபவாஹினி கலையகங்களை நேரடியாக பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ளுpநடட அயளவநச எனும் ஆ.வு.ஏ நிகழ்ச்சியின் ஒளிப்பதிவினை நேரடியாகக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. தொலைக்காட்சி நிகழ்வினை நேரடியாகக் காண முடிந்தமை மகிழ்சியாக இருந்தது;
வீரகேசரி போன்ற பத்திரிகை நிறுவனங்களுக்கு சென்றோம். பத்திரிகை அச்சிடல் விநியோகம் தொடர்பாக மேலதிக அறிவினைப் பெற முடிந்தது. கொழும்பில் நின்ற எட்டு நாட்களும் பயன்மிக்கதாக அமைந்தது
ஆக்கம்-நிருஷாந்
மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...
Friday, January 13, 2012
Subscribe to:
Post Comments (Atom)