.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் முழுநேர நான்காம் அணி மாணவர்களாகிய நாம் உள்ளகப் பயிற்சிக்காக கொழும்புக்கு அண்மையில் பயனம் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம்.
ஆதற்காக செப்ரம்பர் மாதம் 06 இரவு 7.30மணிக்கு யாழிலிருந்து ஆசிரியரஇ இயக்குநர் தேவானந் ஆகியோர் தலைமையில் 30 மாணவர்கள் கொழும்பு நோக்கி புறப்பட தயாரானோம.; எம்மை வழியனுப்பி வைப்பதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பேராசிரியர் ஞானகுமாரன்
அவர்கள் வந்திருந்தார்.அவரது வாழ்த்துரை மற்றும் கருத்துக்கள் மற்றும் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் இயக்குனர்
திரு.தே.தேவானந் அவர்களின் அறிவுரைகள் வழங்கினார்கள். செப்ரெம்பர் 07 கொழும்பில் கண்விழித்தோம்.எமக்கென முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்ட கொழும்பு தழிழ்ச்சங்க விடுதியினுட் சென்று காலை 8.00 மணிக்கு மீண்டும் பேரூந்தினுள் ஏறினோம்.
பின் பாராளுமன்றம் நோக்கி புறப்பட்டோம். .பாராளுமன்ற வாயிலில் பல அறிவுரைகள் எமக்கு வழங்கப்பட்டன முதன் முதலில் பாராளுமன்றத்திற்கு சென்ற எமக்கு. பாராளுமன்றம் தொடர்பான சகல விடயங்களையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
இந்த வயதில் பாராளுமன்றத்திற்கு சென்று அங்கு இடம் பெற்ற அமர்வில் கலந்து கொண்டது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்
மொழிபெயர்ப்பாளரது உதவியுடன் அனைத்து விளக்கங்களையும் பெறக கொள்ளக்; கூடியதாக இருந்தது.;. மறுநாள் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவினர் நடத்திய தேசிய ஊடக மாநாட்டிற்கு சென்றோம். இரு நாட்கள் நடந்த மாநாட்டின் இறுதிநாளிலேயே கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. ஒரு ஊடகவியலாளர் பொதுமக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டுமே தவிர மற்றவர்களுக்கல்ல! ஆனால் நடப்பதைப் பார்த்தால் அது சந்தேகம் தான். ஊடகத்திற்கும் ஒழுக்கக்கோவை என்பது தேவையாக இருக்கின்றது. இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் நன்மை கருதி ஒழுக்கக் கோவையில் இருந்து மீறவும் முடியும். அச்சு ஊடகத்திற்கு மட்டுமே ஒழுக்கக்கோவை இருக்கின்றது. இலத்திரனியல் ஊடகத்திற்கும் ஒழுக்கக்கோவையினை உருவாக்குவதற்கு தூண்ட வேண்டும் என்றனர்.
மாலை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கொழும்பு இதழியல் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து கலந்துரையாடலில் பங்குபற்றியமை மற்றுமொரு சிறந்த அனுபவமாகும். சிங்கள,ஆங்கில ஊடக மாணவர்களின் சந்திப்புக் கிடைத்தமை எமது கல்விசார் நடவடிக்கைகளிற்கு பெரிதும் உதவுமென நம்புகின்றேன்.
அவர்களுடன் நட்பு ரீதியான பல விளையாட்டு ; நிகழ்வுகளில் ஈடுபட்டோம்.மிகவும் சுவாரஸ்யமான நிகழ்வாக அமைந்தது. சொல்லப் போனால் அங்கும் பல மறக்க முடியாத அநுபவங்கள் உள்ளன. செப்ரம்பர் 09ஆம் திகதி அரிய மரபுச் சின்னங்களுடன் அன்றைய பொழுது புலர்ந்தது. எம்மில் பதினைந்து பேர் கொண்ட குழு தேசிய அருங்காட்சியகத்திற்குச் சென்றிருந்தோம். மதியம் பன்னிரண்டு மணி வரை அருங்காட்சியகத்திற்குள்ளே சுற்றித் திரிந்து கொண்டிருந்தோம். இலங்கையின் புராதன மரபுச் சின்னங்களில் பெருமளவினை பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. சிறு வயதிலேயே பாடத்திட்டங்களில் படித்த கேள்விப்பட்ட விடயங்களை நேரில் பார்த்து புரியக் கூடியதாக இருந்தது. அடுத்த அனுபவம் களனிப் பல்கலைக் கழக மருத்துவபீடத்திற்கு செல்லும் வாய்ப்பும் அங்கு இடம்பெற்ற மருத்துவ பீட மாணவர்களால் நடாத்தப்பட்ட கண் காட்சியை பார்க்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. அது மட்டுமின்றி அப்பல்கலைக்கழக சிரேஸ்ட உதவிப் பதிவாளர் றெஜினோல்ட் அவர்களை நேர்காணும் வாய்ப்பும் கிடைத்தது. மற்றும் சக்தி ருபவாஹினி கலையகங்களை நேரடியாக பார்க்க கிடைத்தது. தொலைக்காட்சி நிகழ்வினை நேரடியாகக் காண முடிந்தமை மகிழ்சியாக இருந்தது ; வீரகேசரி போன்ற பத்திரிகை நிறுவனங்களுக்கு சென்றோம். பத்திரிகை அச்சிடல் விநியோகம் தொடர்பாக மேலதிக அறிவினைப் பெற முடிந்தது. கொழும்பில் நின்ற எட்டு நாட்களும் பயன்மிக்கதாக அமைந்தது இத்தகைய ஊடகப்பயணத்தில் பல புதிய விடயங்களை அறிந்து கொள்ள முடிந்ததுடன் பல புதிய ஊடக வியலாளர்கள் ஊடகத்துறை நண்பர்களுடன் தொடர்பினை மேற்கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைத்தது. ஊடக வாழ்க்கையில் சிறந்த மறக்க முடியாத அநுபவத்தை இப்பயணம் பெற்றுத் தந்தது…
ஹம்சா.ச
மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...
Friday, January 13, 2012
Subscribe to:
Post Comments (Atom)