Friday, January 13, 2012

எங்கள் காணியை எம்மிடமே கொடுங்கள்.

0 comments
இலங்கையின் வடக்குக்கும் தெற்குக்குமான போக்குவரத்து பாதையாக அமைந்துள்ள யு9பாதை யுத்தத்தினால் பல தடவைகள் தடைப்;பட்டபோதும். இன்று எத்தகைய தடையின்றி புதுப்பொலிவுடன் தனது பயணச் சேவையினை வழங்கிக்கொண்டு இருக்கின்றது. இலங்கையில் வடக்கே யாழ்ப்பாணத்தில் இருந்து தெற்கே சுமார் 77கிலோமீற்றரில் அமைத்துள்ள ஓர் அழகிய கிராமம்தான் முருகண்டி. இவ் முருகண்டியில் இந்துபுரம், வசந்தபுரம் என பல சிற்றூர்கள் காணப்படுகின்றது. இதில் இந்துபுரம் கிராமமே இன்னும் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளது.  முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறப்புமிகு கிரமங்களில் முருகண்டியும் ஒன்றாகும். இதன் பிரதான சிறப்பு மத்தியில் அமைந்துள்ள பிள்ளையார் கோயிலாகும். இனமத பேதமின்றி அனைவருக்கும் அருள் பாலிக்கும் முருகண்டி பிள்ளையாரையே தமது குலதெய்வமாக கொண்ட இக்கிராம மக்களின் துயரை யார் தீர்த்து வைப்பாரோ?



இறுதி யுத்தத்தின் போது வெளியேற்றப்பட்டு மக்களை பல்வேறு பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். பின்பு ஒவ்வொரு இடமாக தமது சொந்த இடத்துக்கு படிப்படியாக மீளக்குடியமர்த்தப்பட்டக் கொண்டிருக்கும் போது முகாமில் உள்ள அனைத்து மக்களின்  மனங்களிலும் “எங்களை எப்ப ஏத்துவாங்களோ எங்களை எப்பதான்…………..” என முகாம்களில் உள்ள மக்கள் மனம் அங்களாய்த்துக்கொண்டு இருக்கும் இவ் மீளக்குடியேற்றம் சிலருக்கு விரைவாக நடந்து முடிய முருகண்டி இந்துபுர மக்களுக்கு இப்பபும் ஓர் எதிர்பார்ப்பாகவே உள்ளது. எப்ப எங்கள் காணிக்கு ஏற்றவங்கள் என இந்துபுரம் கிராமத்தை சேர்ந்த 115 குடும்பங்களும் எதிர்பார்த்துக்கொண்டே உள்ளன. இவ் 115 குடும்பங்களில் 23 குடும்பங்கள் ஆனந்தகுமாரசமி இடைத்தங்கல் முகாமிலும் 23 குடும்பங்கள் கதிர்காமர் இடைத்தங்கல் முகாமிலும் மீதமுள்ள குடும்பங்கள் உறவினர் வீடுகளிலும் தங்கிஉள்ளார்கள்.
இக்கிராம மக்கள் தமது உடல் உழைப்பினால் தோட்டங்கள் வைத்தும், வியாபாரங்கள் செய்தும் தமது வாழ்க்கையினை வாழ்ந்து வந்தார்கள். இக்கிராமத்துக்கு என முன்பள்ளி, பொதுநோக்க மண்டபம், உபதபால்கந்தோர், பொதுமயாணம், பல சிறிய கோயில்கள் என ஓர் கிராமத்தில் இருக்க வேண்டிய சகல அடிப்படை வசதிகளும் முன்னர் இருந்தன இன்று எமது காணிகளை எம்மிடமே தாருங்கள் என இரந்து கேட்கும் இவர்களின் கோரிக்கைகளை யார்தான் தீர்த்து வைப்பார்களோ?
இக்கிராம மக்களின் உண்மைக்கதையினை கேட்டால் ஒவ்வொரு மனிதனும் இரத்தக்கண்ணீர் வடிப்பான் அண்மையில் இக்கிராம வாசிகள் சிலரை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் ஒவ்வொருவருடைய தவிப்பும் எமது உள்ளத்தை நெருடியது. அந்த வகையில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவருடன் உரையாடும் போது சொன்னார். ஆவரின் பெயரை குறிப்பிட நான் விரும்பவில்லை “தம்பி எல்லாத்தையும் இழந்து விட்டோம் எமக்கென இருந்த இந்த நிலம் ஒன்றுதான் அதனையும் இழந்தால் நாங்கள் உயிர் வாழ்வதே அர்த்தமில்லை…” என்றார். எனெனின் இவ் காணியை விட அவருக்கு எங்கும் இருப்பதற்கு காணியில்லை இவருடைய காணி வீதிக்கு அருகில் உள்ளது. இவர் காணியில் பல தென்னை மரங்கள் உள்ளபட பயன்தரும் பல மரங்களும் காணப்படுகின்றன. மனைவியும் மூன்று பிள்ளைகளும் இடைத்தங்கல் முகாமிலேயே விட்டுவிட்டு உழைப்பதற்காக முருகண்டியில் வந்து வேலைசெய்கிறேன். எனக்கு இங்கொரு செலவு, அங்கொரு செலவு உழைப்பது எல்லாம் செலவாகவே போகிறது. எமது சொந்த இடத்தில் இருந்தால் எல்லாம் மிஞ்சம் தானே என தன்னுடைய மன ஆதங்கத்தினை எம்மிடம் பகிர்ந்து கெர்ணடார்.
முகாம்களில் அதிகமான மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்று குறிப்பிட்ட சில மக்களே தங்கி உள்ளனர். இவர்களில் படிக்கும் பருவத்தினரும் இருக்கின்றார்கள.; தற்போது முகாம்களில் படிப்பு எப்படி என கேட்டபோது “ எல்லாத்தையும் இழந்து விட்டோம் இனியாவது பிள்ளைகளை படிக்கவைத்து நல்ல நிலைக்கு கொண்டு வருவோம் என்றால் முகாம் படிப்பு அதனை பாழாக்கிவிட்டது. அங்க ஒழுங்கான படிப்பு இல்லை. பெடியல் போவாங்கள் பிறகு வருவாங்கள் என்னடா என்று கேட்டால் ரீச்சர் வரல என்பாங்கள் பத்தாக்குறைக்கு இரண்டு இடைவேளைகள், ரீச்சர்மாரும் வெளியில் இருந்து தான் வருகிறார்கள.; அவர்கள் வரவே 10.00 மணியாகிவிடும் பின்பு 01.00 மணிக்கே வெளிய பேயிடுவார்கள். ரீச்சர் மாருக்கும் முகாமில படிப்பிக்கறதுக்கு விருப்பமும் இல்லை பெடியலுக்கு ஓரே விளையாட்டு தான். என்ர மகள் நல்ல படித்த பிள்ளை இந்த வருடம் ழுஃடு எடுக்கிறாள். நல்ல படிப்பித்திருந்தால் நல்ல பெறுபேறு எடுத்திருப்பாள்” என தனது ஆதங்கத்தினை தெரிவித்தார்.
மழைவிட்டும் தூவாணம் ஓயவில்லை என்பார்கள். அது போன்றே போர் ஓய்ந்து நாட்டில் சமாதானம் ஏற்பட்டு விட்டதாகக் கூறப்படும் இந்த வேளையிலும் தமது செந்த வீடுகளுக்கு, சொந்த ஊருக்கு தமிழ் மக்கள் செல்ல முடியாத அவலம் தொடர்கிறது.
சில இடங்களுக்குப் மக்கள் மீளகுடியேற்ற அனுமதிக்கப்பட்டாலும் பல இடங்கள் இன்றும் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையின்  கீழ் படையினரின் தளங்களாகவே உள்ளன.
அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் அடிப்படைத் தேவைகள் அறவே இல்லை என்ற நிலை.
இவ்வாறே உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வைக்குள் இன்னும் முடங்கிக் கிடத்திறது முருகண்டி இந்துபுரம் கிராமம்.






மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply