Monday, October 1, 2012

யாழ்ப்பாணதில் மிகவும் தரமான ஊடகப்பயிற்சி; வழங்கப்படுகிறது.

0 comments



(கடந்த செப்ரெம்பர் 27,28ம் திகதிகளில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற ;ஈழத்தவர்கள் குறுந்திரைப்பட விழா’  ஆரம்ப நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கலந்து கொண்ட வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை ஆற்றிய உரை  இங்கு தரப்படுகின்றது.)


யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் பயிற்சி மையத்தை உருவாக்கியவர்கள் வடஇலங்கைப் பத்திரிகையாளர் சங்கத்தினர. அதன் தலைவராக இருக்கின்ற திரு கதிரகாமத்தம்பி மேற்கொண்ட கடுமையான  முயற்சியின் பயனாகவே இந்த நிறவனம் யுனெஸ்கோ நிறுவனத்தின் உதவியுடன் உருவாகியது. அப்போது நான் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக இருந்தேன். எனது காலத்தில் தான் இந்த நிறுவனம் உருவாகியது. இந்த நிறுவனத்தின் உருவாக்கத்துக்கு மூல காரணமாக இருந்த வட இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தை நாம் எப்போதும் மறந்து விடக் கூடாது. இதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

2003ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை உருவாக்குவதற்கு தேவையான உதவிகளை செய்தது. அப்போது டென்மார்க் நிதிவழங்கியது. பின்னர் நோட்டிக் நாடுகளான சுவீடன் , நோர்வே நாடுகள் இதில் இணைந்து நிதி வழங்கின. இதனை நடத்துவதற்கு யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் முன்வந்ததது. இதற்காக மலாயன் பென்சனியர்களால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில்  வர்த்தக நிலையங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள மலாயன் பென்சனியேர்ஸ் கட்டடம் பயன் படுத்தப்படுகிறது.

 மறைந்த பேராசிரியர் கைலாசபதியின் தந்தையார் கனகசபாபதியவர்களின் முயற்சியால் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்துக்கு இந்தக் கட்டம் ஒப்படைக்கப்பட்டது. அவர், கடைசியாக இருந்த ஒரு சில மலாயன் பென்சனியர்களில் ஒருவர்;. இந்தக் கட்டடத்தை நல்லதொரு பணிக்காக ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்து யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்துக்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்தக்;கட்டடம் இன்று ஊடகவியலாளர்களை உருவாக்கும் ஒரு முக்கியமான பணிக்காக பயன்படுத்தப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் ஊடகத்துறை பலம்மிக்கதாக மாறி வருகிறது. ஆறு தினசரிப் பத்திரிகைகள் வெளிவருகின்றன, தொலைக்காட்சியொன்று இயங்குகின்றது. இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் கிளையொன்றும் இயங்குகின்றது. ஊடகத்துறையில் பயிற்றப்பட்டவர்களின் தேவை அதிகம் உள்ளது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சிறந்த ஊடகவியலாளர்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாக்கி வருகின்றது.

யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம் கடந்த பத்தாண்டுகளாக இயங்கிவருகின்றது. தற்போது இரண்டாண்டு டிப்ளோமா பயிற்சி  நெறி நடைபெறுகின்றது. இதில் மாணவர்களுக்கு பத்திரிகைத்துறை, ரி.வி, றோடியோ மற்றும் இணையத்தில் பயிற்சியளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் பல ஊடகங்களில் வேலைசெய்கிறார்கள். இவர்களை நான் பல இடங்களிலும் காணக்கிடைக்கிறது. திறம்;படச் செய்கிறார்கள். இவர்களின் கணணி அறிவு கணணிப்பட்டதாரிகளுக்கு நிகராகவுள்ளது. நாங்கள் இதை ஆரம்பித்ததன் நோக்கத்தை நோக்கி இந்த நிறுவனம் செல்கிறது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வெளிநாடுகளுக்கு அனுப்பி ஊடகத்துறையில் மேற்படிப்பை பேற்கொண்டவர்கள் மீண்டும் இங்கு வந்து பல்கலைக்கழகத்திற்கு வேலை செய்கிறார்கள்.

இப்போ யாழ்.பல்கலைக் கழகத்தில் ஊடக பட்டப்படிப்பு கற்கையும், ஊடகவளங்கள் பயிற்சி மையத்தில் டிப்ளோமா கற்கை நெறியும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் சிறந்த களநிலைப்பயிற்சிகள் வளங்கப்படுகின்றன. தனி;யே வகுப்பறைக் கற்கைநெறியாக மட்டுமன்றி தொழில்முறைத் தேர்ச்சியுள்ளவர்களை உருவாக்கும் செயற்பாடுகள் இதன் மூலம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏனக்குப் பிறகு இந்த நிறுவனத்தின் இயக்குனராக இருக்கின்ற தேவானந்த் இதை சிறப்பாக நடத்தி வருகின்றார். இவர் இந்தியா சென்று சென்னைப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பட்ட மேற்படிப்பை மேற்கொண்டது இதற்கு உதவியாகவுள்ளது. தனது அனுபவம் மூலம் மாணவர்களுக்கு பல்வேறு பட்ட அனுபவங்களை இவரால் வழங்க முடிகிறது. இந்த மாணவர்கள் சிறப்பாக இயங்கி வருகிறார்கள். பல இடங்களிலும் இதனை நாம் நேரில் பார்க்கிறோம்.
இந்த மையம் நிதி நிறுவனங்களின் நிதி நிறுத்தப்பட்ட பின்னாலும் பல்கலைக்கழகத்தினால் தொடர்ச்சியாக இயக்கப்படும். இந்த நிறுவனம் ஆரம்பிக்ப்பட்ட போது கொழும்பிலும் இதே போன்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் அங்கு வழங்கப்படுகின்ற பயிற்சிகளை விட இங்கு சிறப்பான பயிற்சி வழங்கப்படுகின்றது. பல்கலைக்கழத்தின் சான்றிதழ் கிடைக்கிறது. எங்களுக்கு ஒரு மாயை இருக்கிறது கொழும்பில் அதிக பணம் கொடுத்து படிப்பது சிறந்தது என்று. அது உண்மையிலேயே தவறானது. நாங்கள் இங்கு குறைந்த பணச் செலவோடு சிறப்பாக கற்ப்பிக்கின்றோம். சிறந்த தகுதியான ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது.
இன்று இங்கிலாந்தில் அதிக சம்பளம் பெறுபவர்கள் பத்திரிகை ஆசிரியர்கள்.அவர்களுக்கு சமூக அந்தஸ்தும் அதிகமாக உள்ளது. அவர்கள் தான் அனைத்தையும் தீர்மானிக்கின்ற சக்தியாக உள்ளார்கள். அந்த நிலைமை இங்கு வரவேண்டும் ,எனவே மாணவர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறந்த பத்திரகையாளர்களாக வரவேண்டும் உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.

வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை
(பேரவை உறுப்பினர், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்) 

Leave a Reply