Friday, January 13, 2012

சிற்பக்கலையிலும் ஓவியக்கலையிலும் பிரமிக்க வைக்கின்றன

0 comments
தமிழ் நாட்டில் பார்த்த உடனேயே எம்மை பாதித்த விடயம் சேரி குடியிருப்புக்களும் அங்குள்ள மக்களின் வாழ்வியல் முறைகளுமே, குப்பைகளுக்கும் கூலங்களுக்கும் மத்தியில் குடியிருப்புக்களும், கல்வியில் முன்னேறியும் கலாச்சாரத்தை பேணாமல் இருக்கும் மக்களும் என தொடர்சியான வேதனைக்குரிய விடயங்கள் எம்முன் வேதனையை ஏற்படுத்தியது.மற்றும் சென்னை பல்கலை மாணவர்களுடனும், தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களுடனும் நம் ஈழப்பிரச்சனை பற்றிகலந்துரையாடியபோது அவர்களின் கருத்துக்களும், எண்ணங்களும் எம்மில் புதுவிதமான உணர்வுகளை ஏற்படுத்தியது.




வெளிநாட்டு மாணவர்களுடனான கல்விச்சுற்றுலா இதுவே முதல்தடவை என்பதால் அதுவும் எனக்கு புதியதொரு மாற்றத்தையும் அனுபவத்தையும் கொடுத்தது. அதிலும் ஊட்டிப்பயணம் என்பது என்றும் மறக்க முடியாத வித்தியாசமான உணர்வுகளை ஏற்படுத்தியது எனறே சொல்லலாம் செல்லும் பாதை எங்கும் பச்சை பசேல் என்று காட்சி கழிக்க மலையில் ஏற ஏற காலநிலை மாற்றமும் அங்கு தேயிலை தோட்டங்களும், அங்கு கொழுந்து கொய்யும் பெண்களும் என புதிய தொரு உலகில் இருப்பதால் நாம் உயர்ந்து கொள்ள எம் பயணப்பாதை தொடாந்தது. அக்கிராம பழங்கிழ மக்களை சந்தித்ததும், அவர்களின் வாழ்வியல் முறைகள் பற்றி தெரிந்து கொண்டதும், வாழ்வின் புதிய விடயங்களாகவே அமைந்தது.
நாம் இந்தியாவில் உள்ள எத்தனையோ தலங்களுக்கு சென்றிருக்கின்றோம் அங்குள்ள ஒவ்வொரு கோயில்களுமே சிற்பக்கலையிலும் ஓவியக்கலையிலும் பிரமிக்க வைக்கின்றன. கோயில்களில் உள்ள வீதிகளின் பிரமாண்டம் அங்குள்ள தூண்களின் அமைப்புக்கள், அற்புதமான விடயங்கள், கேணிகள், கோபுரங்களின் அமைப்புக்கள், கோபுரத்தின் உயரம் கோயிலில் உள்ள பல்யாண மண்டபத்தின் அமைப்பு அதில் உள்ள கண்களில் செதுக்கப்பட்ட உயிர்ஊட்டமுள்ள சிற்பங்கள் எல்லாம் அன்றைய அரசர்களின் கலை அனுபவத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. பல ஆயிரம் ஆண்டுகளாகியும் இக்கோயில்கள் அழிவடையாது இருக்கின்றது என்பது வியப்பூட்டுவதாகவே அமைந்திருந்தது. மற்றும் யானை வலம் வருதல், ஆசிர்வாதம் செய்தல், நந்தியின் காதில் நாம் வேண்டுவதை சொல்;லுதல் என புதிய புதிய நம்பிக்கைக்குரிய விடயங்கள் பற்றி தெரிந்து கொண்டதும் புதிய உணர்வினை ஏற்படுத்தியது.

இவை அனைத்தையும் விட எங்களின் இந்த பயணத்தை முழுமையாக வெற்றி பெறச் செய்ததும், அயல் நாட்டில் வேறு ஒரு உறவுகளுடன் நிற்கிறோம் என்று ஒரு கணமும் நினைக்க வைக்காமல் சொந்த உறவுகளுடனும் தாய்நாட்டில் நிற்பது போன்ற உணர்வினை எமக்குள் ஏற்படுத்தி எம்மை உபசரித்த எம் இனிய தமிழ்நாட்டு சொந்தங்களான சென்னை பல்கலைக்கழக கிதமியல் மட்டும் தொடர்பியல் துறை தலைவர் ரவிந்திரன் அவர்களையும், சென்னை பல்கலை மாணவர்களான எம் அன்புக்குரிய நண்பர் குழாமையும் என்றும் எம்மால் மறக்குமுடியாது, இவர்கள் எமக்காக உழைத்தவர்கள் அவர்களிடம் நாம் பெற்ற கடனான என்றும் தீரக்க முடியாது.இன்றும் எத்தனையோ உணர்வுகளை இப்பயணம் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். உண்மையில் எந்த துறையில் கால்பதித்தான் இந்தவயதில் இவ்வளவு புதிய அனுபவங்களை பெற்று இருக்க முடியாது  இவ் ஊடுகக் கல்வி எம்முள் எவ்வளவு உயரிய எண்ணங்களை தோற்றுவித்திருக்கிறது. வுhழ்க்கையின் போரட்டத்தில் எதிர்பராத சந்தாப்பங்களில் எதிர்பராத தருணத்தில் பலபல புதிய அனுபவங்கள் புதிய சந்திப்புக்கள் இடம்பெறும். ஓவ்வொரு விடயத்திலிருந்தும் நாம் பற்பல புதிய அனுபவங்களை பெற்று கொள்கின்றோம்.

     அவ்வாறு எனது தென்னிந்தியா நோக்கிய ஊடகப்பயணத்தில் மறக்க முடியாத ஒரு அனுபவம் நான் சந்தித்த ஒரு நண்பன். ஊண்மையான நட்பு என்பது மற்றொரு மனிதனுக்கு நான் தேவை எனப்படும்போது அழைத இனங்கண்டு அந்த நட்பு வட்டாரத்தினுள் நம்மை நாம் புகுத்தி கொள்வது அவ்வாறே அமைந்தது நமது நட்பு வட்டாரமும் தென்னிந்தியா ஊடகப்பயணத்திலே நாம் களப்பயணத்திற்காக சென்றிருந்தோம். பல மணிநேர பஸ் பிரயாணத்திலே அதில் ஒரு நண்பனின் சந்திப்பு பேருந்தின் இறுதி இருக்கையிலே அமர்ந்த வண்ணம் பேருந்தில் இடம்பெறும் கேளிக்கைகளை கவனியாது. ஒரு முலையினிலே யன்னல் வழியாக வெளி உலகத்தை பார்த்த வண்ணம் இருந்தான். அவனுடன் பேச எத்தணித்தேன். அவனும் எனது வரவை எதிர்பார்த்தது போல் இருந்தது.
இருவரும் உரையாடினோம். இந்தப்பயணத்திலே எனக்கு புதுவித அவன் உரையாடிய விடயங்களாக அமைந்தது. ஆம் அவ்வறான அமைதியான சந்தமான பேச்சுடைய அவன் வேறு யாருமல்ல ராம் என்கின்ற ராம்சுந்தர்தான். இயல்பாகவே அமைதியானவன. ஏல்லோரலும் பாரட்டப்படுபவன். இரமேஸ்வரத்தை பிறப்பிடமாக கொண்ட இவன் சென்னைப்பல்கழைக்கழகத்தில் தொல்லியற்துறையில் கற்று வருகின்றான். இவனது வாழ்க்கையின் இரு புள்ளிகள் இவனது பெற்றோர். துந்தை பெயர் சந்தானகுமார்.இவனது வாழ்ககையில் மிக முக்கியத்துவம் பெற்றவராம். ஏவ்வறெனில் சதாரண தந்தை மகன் போல் இல்லாமல் ஓரு நண்பனாக தான் வாழ்க்கையில் முக்கியத்தும் பெறுகின்றார் எனக்குறிப்பிட்டான்.இரமேஸ்வரத்திலே மீன்பிடி தொழிலையும் வியாபாரத்தையும் தொழிலாக செய்து வருபவராம் இவன் தந்தை. ஏனக்கு எதில் ஈடுபாடு என அறிந்துஅத்துறையிலேயே என்னை ஈடு:பாடுமாறும் எனக்கு ஊக்கத்தை தந்த ஒரு முன்னோடி எனக்குறிப்பிட்டார். இவனுக்கு பெரிதாக கல்வியில் நாட்டம் இல்லையாம். துடுப்பாட்டத்தில் மிகுந்த விருப்பம் உடையவனாம் இவனது விருப்பத்தை அறிந்து இவனது தந்தை அதில் ஈடுபட அனுமத்தித்ததுடன் ஊக்கமும் அளித்துள்ளார் எவ்வறெனில் விடியற்காலை 4.00 எழுந்து இவனை மைதானத்திற்கு வர சொல்லி விட்டு அவர் செ;ன்று வீடுவராம். புpன் இவன் மைதானத்தில் பயிற்சி பெறுவiதை சிறிது நேரம் பார்த்து விட்டே வேலைக்கு பறப்படுவராம் எனக்குறிப்பிட்டான். அது மாத்திரமன்றி எனக்கு சென்னைப்பல்கலைக்கழகத்தில் படி;ப்பதற்கு அனுமத்p கிடைக்காதபோது தனது தந்தை துறை தலைவர் துணை வேந்தர் எல்லோரிடமும் சென்று எனது அனுமத்தியை பெற்று தந்தார். அதை அடுத்து தாயார் பற்றி குறிப்பிட்ட அவன் பெயர் அம்புநம்பு ராமேஸ்வரி எனவும் எனது படிப்பு விடயங்களில் அதியம் அக்கறை காட்டுபவர் எனவம் குறிப்பிட்டான். தனது தாயார் பற்றி குறிப்பிடும்போது எப்பொழதும் வீடு அமைதியாக காணப்பட வேண்டும் எனக்குறிப்பிடுவராம் மேலும் கார்நடாகசங்கீதம் என்றால் அதில் லாயித்து விடுவார் எனக்குறிப்பிட்டான். துன்னை பற்றி குறிப்பிட்ட அவன் தனது லட்சியம் கனவு எல்லாம் சிறந்த துடுப்பாட்ட வீரனாக வரவேண்டும் என்பதேயாகும் எனவும் எல்லாக் கடவுள்களும் எனக்கு சமானாகவே கருதுவேன் இந்த மதம்தான் பிடிக்கும் என்றில்லை. எனக்கு எப்பவுமே இந்தியாவிலே என் ஊhரில் என் வீடுதான் ரொம்ப பிடிச்ச இடம் ஆரம்பத்திலே ஜபமானி ஆங்கிலப்பள்ளியில் கல்வி கற்றதாகவும் பின் சிம்சியாட் மலைக்கல்லுரியில் கல்வி கற்று பின் சிவகாசி இயுஜி கல்லுரியில் கல்வி கற்றதாகவும் குறிப்பிட்டான். இப்ப சென்னைப்பல்கலைக்கழகத்தல் கல்வி கற்றுக்கொண்டு i.டி.அ இல் ஆக்கிரேச்சர் அட்மினிஸ்ராறாக வேலை புரிவதாக குறிப்பிட்டான். துன்னை பொறுத்த மட்டில் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டு;ம். இதை விட தன்னுடைய வாழ்வில் முக்கிய பங்கு நட்பு என தனது நட்பின் காலம் பற்றி குறிப்பிட ஆரம்பித்தான். துன்னுடன் சிறு வயதிலிருந்தே சில நட்புக்கள் தொடங்கின். அது இன்று வரை தொடர்கின்றது. கார்த்திக் ரோசினி காலித் சாபிர பவித்ரா ஜெய்கித் சரணியா ர.மணிகண்டன் திவ்யா அ.மணிகண்டன் சமந்தா இவாகள் தான் இவனது நட்பு வட்டாரமாம். இதில் சிறு பிhவொன்று இடையில் நிகழ்ந்தது அந்த சம்பவத்திலிருந்து எல்லோருமே பிரிந்து விட்டோம். என்ன பிரிவொன்றால் தான் வாழ்விலே மறக்க முடியாத சம்பவமாம். தனது நண்பியான பவித்ராவின் பிரிவு அவள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது. இன்றும் எம்மை தாக்கிய சம்பவம் அது மறக்க முடியாதது. இவ்வறாக அவனது வாழ்க்கையை அனுபவத்தை முடித்துக் கொண்டான் அவனது வாரலாற்றிலெ நான் கண்டு கொண்ட விடயம் நிறைய அவனது தந்தையாரின் சுபாவம் அவனது நட்பின் முடிவு துன்பம் அவனது வாழ்க்கையில் வேறுபட்ட இலட்சியம் இவை அனைத்துமே எனக்கு ஒரு புதுவித அனுபவத்தையே எனக்கு அளித்தது. இவ்வாறு எனது அனுபவங்கள் வௌ;வேறான வகையில் அமைந்தது.


ஆக்கம்-நிருஷாந்


மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply