யாழ்ப்பாணப்பல்கலைக்கழக ஊடகக்கற்கைநிலையமானது புகைப்பட இதழியல்துறைசார்ந்த குறுங்கால இலவசப்பயிற்சி நெறியை வழங்கியிருந்தது. இக்கற்கை நிலையமானது தன்னிடம் உள்ள ஊடக மாணவர்கள் மட்டும் இதன் பலனைப்பெறாது பல்வேறு ஊடக நிறுவனங்களிலும் தொழில்புரியும் அனைவரையும் ஒருங்கிணைத்து இலங்கையில் பிரபல்யமான பெண் புகைப்படவியலாளர் கனகசபாபதிப்பிள்ளை துஷ்யந்தினியை ஒழுங்குசெய்து 10 நாட்கள் கொண்ட குறுங்காலப்பயி;ற்சி நெறியினை கார்த்திகை 14ஆம் திகதி தொடக்கம் ஆரம்பித்து 23ஆம்திகதிவரை வழங்கியது.
இப்பயிற்சியினை சான்றிதழ்களோடு நிறைவுசெய்யாது இப்பயிற்சியில் இணைந்துகொண்ட அனைவரையும் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி பலவகையான புகைப்படங்களை எடுத்து காட்சிப்படுத்தவேண்டும் என்ற தீவிர முயற்சியில் ஊடகக்கற்கை நிலைய இயக்குனர் தே.தேவானந்த் அவர்கள் குறியாய் இருந்தார.; இதன் பயனாக பயிற்சி மாணவர்களினால் சேகரிக்கப்பட்ட படங்கள் 24ஆம்திகதி “எங்கள் கதைகள்”; என்னும் தலைப்பில் உத்தியோக பூர்வமாக அனைவரின் பார்வைக்கும் காட்சிப்படுத்தினர்.
கடுகு சிறிது காரம் பெரிது என்பார்கள.; இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த இடம் சிறிதாக இருந்தாலும் வைக்கப்பட்ட படங்களின் கதைகள் பெரியவை, நியாயமானவை, ஏற்றுக்கொள்ளக்கூடியவை. காட்சிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு படங்களும் வௌ;வேறான கதைகளை சொல்லி நின்றன. எடுத்துக்காட்டாக “மருதநிலத்தாயவள் கண்ணீருக்குச் சொந்தமாய் கதறுகின்றாள்” என்ற வரியுடன் காட்சிப்படுத்தப்பட்ட முதலாவது படத்திலே கூரையற்ற வீடும், தற்காலிக கொட்டகைகளும் இருந்தது. இது எவற்றை சொல்லி நின்றது என்றால் மருதங்கேணி மக்களின் பிரதான தொழிலாக மீன் பிடித்தொழில் உள்ளது. இவர்கள் இத்தொழில் மூலம் அடிப்படை வசதிகள் மெச்சத்தக்க முறையில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் 2004 ஆம் ஆண்டு சுனாமியினால் இவர்களின் வீடுகள் உடமைகள் அழிக்கப்பட்டன. இந்நிலையில் அரசாங்கத்தினால் இவர்களுக்கு கல் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் போரில் வீடுகளின் கூரைகள், கட்டடங்கள் அழிவடைந்திருக்கின்றன. இம்மக்கள் மீள்குடியேறிய தமது சொந்த நிலத்தில் தற்போது தென்னை ஓலையினால் மேயப்பட்ட சிறிய கொட்டகைகளிலே வாழ்கின்றனர். இதனையே அப்படம் சுட்டி நின்றது. இரண்டாவது படம் கட்டு மரத்திலே தொழிலுக்குச் செல்லும் மீனவர் எப்படித்தான் இன்று நவீன படகுகள் வந்தாலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் கட்டு மரத்தையே வைத்து மீன்பிடிக்கிறார்கள். இதனால் இவர்களின் நாளாந்த வருவாய் குறைந்து காணப்படுகிறது. மூன்றாவது படம் கோழிகள் நிறைந்த ஒரு படம். மீனவர்களின் வருவாய் போதாமையால் இம்மக்கள் கோழி வளர்ப்பினை மேற்கொண்டு தனது அன்றாட உணவினை உண்ணுகின்றனர். அடுத்த படம் பாதைகளில் பரவப்பட்டிருக்கும் கற்கள் பாதைகளில் பரவப்பட்டிருக்கும் சல்லிகள் தற்போதே செப்பனிடப்பட்டன. சுனாமிக்கு பின்னர் இம்மக்கள் கடற்கரையிலிருந்து 300 மீற்றர் தள்ளியே குடியமர்ந்தப்பட்டனர். இதனால் இம்மக்களுக்கு போக்குவரத்திற்கு பெரும் இடறாக இவ்வீதியிருந்தது. ஆனால் அண்மையில்தான் தார் ஊற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இப்படம் மேலும் இன்னொன்றைச் சொல்லி நிற்கின்றது. நடக்கும் பாதைகளில் மட்டும் கற்களும், பள்ளமும,; மேடும் மட்டுமல்ல இவர்களின் வாழ்விலும் இவ்வாறேதான் என்பதை தெளிவுபடுத்தி நின்றன.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக ஊடக கற்கை நிலையத்திலிருந்து மூன்றாவது அணியினர் வெளியேறியுள்ள நிலையில் நான்காவது அணி மாணவர்களுடைய வரலாற்றிலேயே முதல் முதலாக கண்காட்சி இங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கதும், பதிவு செய்யப்படவேண்டியதுமாகும்.
மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...