Thursday, January 12, 2012

பொன்னாலை கிராமம்

0 comments



பொன்னாலை ஓர் அழகிய கிராமம். இங்கு ஒரு கடல் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள கடற்பரப்பினை பார்க்கவோ அல்லது கிராமத்தையோ பார்க்க செல்ல வேண்டுமாயின் யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் செல்லும் 782இ785இ786 இலக்கமுடைய பஸ்சில் ஏறினால் பொன்னாலை சந்தியில் இறக்கவும் என்று சொல்லினால் பேருந்து நடத்துனர்   இறக்குவார். சந்தியில் இருபுறமும் கடற்பரப்பு. சந்தியில் இருந்து வடக்குப் புறமாகப் புறப்பட்டால் பொன்னாலை கிராமத்தை சென்றடையலாம்.


      பொன்னாலை மக்கள் இந்த சிறிய கடற்பரப்பிலேயே தொழில் செய்து வருகின்றார். பொன்னாலை சந்தியில் இருந்து மேற்குப் புறமாக கடலுக்கு நடுவே பாலம் அமைந்து காரைநகர் செல்லும் பாதை அமைந்துள்ளது. இது சிறிய கடற்பரப்பு ஆகையால்  இங்கு சிறுதொழில்களே  காணப்படுகின்றது. அதாவது கூடுவைத்தல்இ இழுவை வலை இழுத்தல்இ விடு வலை விடுதல் போன்ற தொழிலே  காணப்படுகின்றது. சிறுகடல் என்பதால் சில தொழிலாளிகள் சிறு சிறு வள்ளங்களிலும் சென்று தொழில் செய்கின்றனர்.

      1970 காலப்பகுதியிகளில் இழுவை வலைஇ சிறகு வலை போன்ற வலைகளே  பயன்படுத்தினர். ஆனால் இன்று கூடுகளும்இ இழுவைவலையும் மட்டுமே பயன்படுத்துகின்றர்.அதிலும் கூடுகளே அதிகமாக பாவனையில் உள்ளது. இந்தகூடு என்பது வலைகளை பொருத்தி பொருத்தி சேர்ந்து வைத்துவிட்டு கம்பிகளால் ஆன வளையங்கள்இடைஇடையே வைத்துகட்டி ஒரு கூடு போன்ற அமைப்பில் பயன்படுத்துவதே ஆகும். இங்கு நண்டுஇ றால்இ மீன்இசிறுகணவாய் போன்ற கடல் வாழ் உயிரினங்களே  அகப்படும்.

      கூடுவைப்பது எப்படி என்பது தொடர்பாக தொழிலாளி ஒருவரை  கேட்ட போது “ வலையால் பின்னப்பட்ட கூட்டினை அமாவசை அல்லது பௌர்னமிக்கு முதல் நாள் வைத்தால் அடுத்த அமாவாசை அல்லது பௌர்னமி வரும்வரை கடலிலேயே இருக்கும். நாம் காலை போய் கூட்டினை அவிழ்த்து கூட்டில் அகப்பட்டிருக்கும் உயிரினங்களை எடுத்து விட்டு மீண்டும் அதனை  கட்டிவிட்டு வந்டு விடுவோம் அமாவாசை அல்லது பௌர்னமிக்கு மூன்று, நான்கு நாட்களுக்கு முன்னர் பிடுங்கிவந்து வலையில்  ஏற்பட்டிருக்கும் பொத்தல்களை பொத்தி விட்டு மீண்டும் கொண்போய்வைப்போம்” எனக்கூறினார். இன்று தாம் கூடு வைப்பதில் கட்டுப்பாடு வந்துள்ளதாக கூறினார். (சுரேஸ், தர்சன்)



மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply