அனுபவம் புதுமை என் பயணத்தில் கண்டேன் என்வாழ்வில் அன்னாளில் இல்லாத பொன்னான நினைவுகள் இன்நாளில் இந்தியப்பயணத்தில் பலவந்து சென்றாலும் என் கண்முன்னே இப்போதும் நிற்பது அது என்வாழ்வில் எனக்கேற்பட்ட அனுபவம் தான். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வழங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் முழுநேரக்கற்கை நெறியினை கற்கும் நாம் இந்தியாவிற்கான ஊடகப்பயிற்சியினை மேற்கொண்டோம.;
அந்த வேளை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று கொழும்பு விமானநிலயத்தில் ஏறி சென்னை விமான நிலயத்தினை சென்றடைந்தோம். அங்கே சென்னை பல்கலைக்கழக இதழியல்த்துறை மாணவர்களினால் நாம் வரவேற்கப்பட்டு அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட வாகனத்திலே சென்று சென்னை சாந்தோம் தேவாலய மண்டபத்தில் தங்கினோம். அதன் பின்னர் அடுத்த அடுத்த நாட்கள் எமது கல்விக்கான ஊடகப்பயணங்கள் மேற்கொண்டதோடு பல விரிவுரைகளிரும் கலந்து கொண்டு சென்னையின் புறநகர் பகுதிகளுக்கும் பயணம் செய்தோம். அங்கே வரலாற்று இடங்களை பார்வையிட்டோம். அவை எல்லாம் என் வாழ்வில் புதிதாக அமைந்தாலும் என் அனுபவத்திற்குள் அவற்றில் எதுவுமே தோற்றவில்லை.
இறுதி நாளன்று இந்தியாவை விட்டு இலங்கை வருவதற்கு தயாராகி சென்னை சென்னை பல்கலைக்கழகதிதில் எமது இறுதி ஒன்று கூடல் இடம்பெற்றது. அந்த ஒன்று கூடலின் முன்னரே எமது இயக்குணர் தே. தேவானந் அவர்கள் கூறினார் இன்று எமக்கு இலங்கை செல்வதற்கு 03.00 மணிக்கு விமானம் பதியயப்பட்டுள்ளது நாம் அனைவரும் 12.00 மணிக்கு விமான நிலயத்திற்கு செல்ல வேண்டும் அதற்கு முனகர் நாம் இந்தியாவிலிருந்து இலங்கை செல்வதற்கான விமானப்பதிவுப்பத்திரத்தை கதிந்கு எடுக்கவேண்டும் அதனால் நாம் எல்லோரும் 11.00 மணியளவில் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து புறப்பட்டுவிட என்று கூறினார்.
பழகினர்வர்களை பிரிவது என்பது எல்லேபருக்குமே கஷ்டம் தான். அன்று எல்லோருமே பயணத்தை மறந்து தாம் பழகிய உறவுகளுடன் கூடிக்கதைப்பதுவும் தமது குறிப்புத்தகத்தில் ஓட்டோகிறாப் வாங்குவதுமாக நின்றதனால் நாம் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து மீளபதிவு அலுவலகத்திற்கு செல்லும் நேரம் பிந்திவிட்டது.
இதனால் அங்கு பதியும் நேரம் பிந்தியது. இதனை அறியாது மாணவர்கள் எல்லோருமே சந்தோசமாக நின்றார்கள். ஆனால் இயக்குணர் தேவானந்தும்இ பயிற்றுவிப்பாளர் சபேசன் ஆசிரியர் அவர்களும் மிகவும் குழப்பத்திலும் யோசனையிலும் நின்று தம்மால் முடிந்த அளவு முயற்சி செய்து படிவங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட்டு 01.30 மணியளவில் அலுவலகத்தில் இருந்து இந்திய விமான நிலயத்திற்கு செல்ல புறப்பட்டு அங்கு 02.05 மணிக்கு போய் சேர்ந்தோம்.
அங்கு எமக்காக விமான நிலய ஊழியர்களும் அவசர அவசரமாக எம்மை சோதனை செய்து உள்ளே அனுப்பினார்கள் உள்ளே அவசர அவசரமாக எமது பரிவுகளை மேற்;கொண்டார்கள். அந்த வேளை நான நண்பன் ஒருவனின் பொதிப்பையினை எனது பெயரில் பதிவு செய்து ஏற்றினேன் அந்த பொதிப்பை பிரிந்து இருந்ததனால் உடனே அங்கு உள்ள ஊளியர் எனது கடவுச்சீட்டினை பறித்து விட்டு எனக்கு கூறினார் பயணிக்க முடியாது பொதிப்பையினை கொண்டு போய் உறயிட்டு கொண்டு வா என்று கூறினார்.
எல்லாருமே அலுவல்களும் முடித்து விமானத்திற்கு ஏறச்சென்று விட்டார்கள் இயக்குணருடன் சேர்ந்து இருவர்மட்டும் பதிந்து கொண்டு இருந்தார்கள் ஆனால் நான் மட்டும் எதுவும் செய்யவில்லை பொதியை எங்கே உறையிடுவது என்று கூடத்தெரியாமல் திறுதிறுத்துக்கொண்டு நின்றேன். அந்த வேளை அங்கு நின்ற ஊழியர் ஒருவர் வந்து என்ன எனக்கேட்டார் நான் அவரைக்கேட்டேன் எங்கே பிரிந்த பொதிக்கு உறையிடுவது என்று அவர் உறையிடும் இடத்தைக்காட்டினார். நூன் உடனே அங்கே சென்று பொதியினை உறையிட்டுவிட்டு அங்கே கொடுத்து விட்டு எனது கடவுச்சீட்டினை வாங்கிக்கொண்டு படிவம் பதியுமிடம் சென்றேன் அங்கு இயக்குணரும் மற்ற இருவரும் நின்று படிவத்தினை நிரப்பழனார்கள் நானும் அவர்களைக்கேட்டு எனது படிவத்தினை நிரப்பிவிட்டு மிகவும் வேகமாக நடந்து சரியாக 03.00 மணிக்கு விமானத்திற்குள் நுளைந்தோம் அப்போது தான் எனக்கு நின்மதி நாங்களும் இலங்கை போகப்போகிறோம் என்று. இந்த விமானப்பயணமானது இவ்வாறு அவசர அவசரப்பட்டு வந்து பதிவுகளை மேற்கொண்டு நாம் எல்லோரும் இலங்கை செல்வோமா இல்லையா என்ற ஏக்கத்துடன் பயணத்தை மேற்கொண்டதுவும் சென்னை விமான நிலயத்தில் நடைபெற்ற சம்பவங்களும் என் வாழ்வில் ஏற்பட்ட மிகவும் மறக்க முடியாத ஒரு சம்பவம் இதுவே எனது இந்தியப்பயணத்தில் ஏற்பட்ட அனுபவம்.
ஆக்கம்-இ.சுரேஸ்
மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...