Thursday, January 12, 2012

வடமராட்சி முனைப்பகுதி காலை நேரக்காட்சி நேரம் அதிகாலை 5:30

0 comments

பருத்தித்துறை முனைப்பகுதியில் எடுக்கப்பட்ட அழகிய காட்சி இது. இக் கடற்கரையானது இலங்கையின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கடற்கரையானது இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற கடற்கரையகும். இப் பகுதியினை சிங்களத்தவ்கள் “பேதுருதுடுவ”  என அழைக்கின்றனர்.இக் கடற்கரையானது வடமராட்சி மீனவ்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. காலை நேரத்தில் அமைதியாக காட்சி அளிக்கும் இக்கடல் தான் 2004 ம் ஆண்டு பல உயி;ர்களை காவு கொண்டதும் ஆகும். இதனை விட இக்கடற்கரையின் இயற்கை அழகை ரசிப்பதற்கு தென்னிலங்கை உள்ளுர் சுற்றுலா பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பார்வையி;டும் ஒர் இடமாக இம் முனைக் கடற்பகுதி விளங்குகின்றது.




இப் புகைப்படம் கலை 5:30 மணியளவில் எடுக்கப்பட்டது. மழை மேககூட்டங்கள் நிறைந்த இக் கடற்பகுதியில் ஒர் படகு கடலுக்கு செல்லாமல் நங்கூரம் இடப்பட்டு இருப்பதனையும் மேலும் ஒருவர் கடலுக்கு செல்ல முன்னர் வனிலை சரியாக உள்ளதா என பார்பதனை இப்புகைப்படம் காட்டுகின்றது.







மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply