Thursday, January 12, 2012

மாணவர்களின் வாழ்க்கை பயணத்தில் திருப்புமுனை

0 comments

மாணவர்களின் வாழ்க்கை பயணத்தில் திருப்புமுனைக் கட்டமாக க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை அமைகின்றது. இதில் சித்தி அடைவதன் மூலமே எதிர்காலத்தை சிறப்பான முறையில்அமைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் பலர் இதில் சித்தியடையத் தவறுகின்ற நிலை காணப்படுகின்றது.


 கடந்த காலங்களில் க.பொ.த.சாதாரணதரத்தில் கணிதம் என்ற பாடம் மட்டுமே சித்தியடைவதற்கு பிரச்சனைக்குரிய பாடமாக இருந்தது. தாய்மொழியை தமிழாகக் கொண்டிருக்கும் யாழ்பாணத்தில் அனேக மாணவர்கள் தமிழ்ப் பாடங்களில் 'ஊ' தரச் சித்திக்கு மேற்படவே பெற்று வந்தனர்.


 ஆனால் அண்மைக்காலமாக இந்நிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் பாடத்தில் மாணவர்களின் அடைவு மட்டம் வீழ்ச்சி கண்டு வருகின்றது. அதிலும் இறுதியாய் நடந்த பரீட்சையில் தமிழ் பாடத்தில் மாணவர்களின் சித்திவீதம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதையும் தமிழில் 'யு' தரத்தை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து 'ளு' தரச் சித்தியை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இன்று அதிகமாக காணப்படுகின்றன.

2010ம் ஆண்டு சில பாடசாலைகளில் தமிழ்பாட சித்தி வீதத்தை எடுத்துக் கொண்டால்

யாஃபுற்றளை  மகா வித்தியாலயத்தில்

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் - 30

A தரச்சித்தி பெற்ற மாணவர்கள்  - 03

B தரச்சித்தி பெற்ற மாணவர்கள்  - 03

C தரச்சித்தி பெற்ற மாணவர்கள் - 05

S தரச்சித்தி பெற்ற மாணவர்கள் - 11

W பெற்ற மாணவர்கள் - 08


யாஃகொட்டடி நமசிவாய வித்தியாலயம்

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் - 30

A தரச்சித்தி பெற்ற மாணவர்கள்  -01

B தரச்சித்தி பெற்ற மாணவர்கள்  - 04

C தரச்சித்தி பெற்ற மாணவர்கள்  - 07

S தரச்சித்தி பெற்ற மாணவர்கள்  - 09

W பெற்ற மாணவர்கள் - 09


யாஃதெல்லிப்பளை மகாயனக் கல்லூhயில்

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் - 84

A தரச்சித்தி பெற்ற மாணவர்கள்  - 14

Bதரச்சித்தி பெற்ற மாணவர்கள்  - 13

C தரச்சித்தி பெற்ற மாணவர்கள்  - 30

S தரச்சித்தி பெற்ற மாணவர்கள்  - 21

W பெற்ற மாணவர்கள் - 06


  இன்று யு தரச் சித்தி பெறும் மாணவர்கள் அருகி ளு தரச் சித்தி பெறும் மாணவர்களும் சித்தியடையாத மாணவர்களுமே அதிகமாக காணப்படுகின்றனர்.

  இதற்கு காரணம் மாணவர்களா? ஆசிரியர்களா? அல்லது புதிய வினாத்தாளின் வினாக் கட்டமைப்பு முறையா? வினாத்தாள் திருத்தப்படும் முறையா? ஏன பல கேள்விகள் எழுகின்றன.

தமிழ்ப்பாட வீழ்ச்சிக்கு காரணம் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கம் இல்லை என்பதுடன் அவர்கள் ஆசிரியர் கற்பிக்கும் பாடங்களையே படிக்கின்றனர் மாணவர்கள் தேடிக்கற்பதில்லை என யாஃ புற்றளை மகா வித்தியாலய தமிழ்ப்பாட ஆசிரியர் திருமதி பிருந்தா சதீஸ்குமார் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மாணவர்கள் வீட்டுச்சூழல் காரணமாகவும் படிப்பதில்லை எனவும் தமிழில் சரியாக எழுதத்தெரியாத மாணவர்கள் இப்போதும் இருக்கின்றனர் எனவும் கூறினார்;. இம் மாணவர்களுக்கு தனியான கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் கூறினார்.

  ஆங்கிலம் உட்பட வேறு சில கடினமான பாடங்களில் உயர் சித்தி பெறும் மாணவர்கள் தமிழ்ப்பாடத்தில் உயர்சித்தி பெறத் தவறுகின்ற நிலை காணப்படுகின்றதே என வினாவிய போது தமிழ்ப் பாடப்பரப்பு அதிகமாக இருப்பதனால் தமிழ்ப்பாடத்தில் உயர் சித்தி பெற மாணவர்கள் தவறுகின்றனர் என திருமதி. பிருந்தா சதீஸ்குமார் கூறினார்.

தமிழ் ஆசிரியர் திரு.நந்தகுமார் குறிப்பிடுகையில்   5நு என்ற புதிய கல்வித்திட்டமுறை அறிமுகப்படுத்தப்பட்டு புதிய வினாத்தாள் அமைப்பு என்ற வகையில் கடந்த இரு வருட க.பொ.த சாதாரணப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அதற்கு முந்திய காலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்ப்பாட சித்தி வீதமானது குறைவடைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

  இன்றைய மாணவரிடம் ஒரு விடயத்தை நீண்டு தொகுத்துச் சொல்லும் ஆற்றல் குறைந்து எதனையும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஆற்றலே காணப்படுகின்றது. ஆசிரியர்களிடம் இருந்தும் மாணவர்கள் இதனையே எதிர்பார்க்கின்றனர். இதுவும் அவர்களது மொழி ஆட்சி மொழித்திறன் ஆற்றல் குறையக் காரணமாகின்றது அத்துடன் பல மாணவர்களிடம் எழுத்துப்பிழை எழுத்தை உறுப்பின்றி எழுதுதல் போன்ற விடயங்களையும் அவதானிக்க முடிகின்றது. பெற்றோரும் முன்பள்ளி ஆசிரியர்களும் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களும் திருத்தாது விட்ட இத்தகைய தவறுகளையும் அதற்கான குற்றத்தினையும் கூட தமிழ்ப்பாட ஆசிரியர்களே சுமக்க வேண்டியுள்ளது என திரு.நந்தகுமார் குறிப்பிட்டார்.

அதிகமான நூல்களை வாசிக்க செய்வதன் ஊடாகவும் சில விசேட செயற்திட்டங்களினூடாகவும் இப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம்.    அவர் மேலும் குறிப்பிடுகையில் தொலைக்காட்சியின் ஆதிக்கம்இ பிறமொழிக்கலப்பு பெற்றோரின் போதிய கவனிப்பின்மை புலமைப்பரிசில் பரீட்சையை மட்டும் மையப்படுத்திய திணிப்புக்கள் போதியளவான வாய்ப்புக்கள் வழங்கப்படாமை போன்றனவும் கூட இந் நிலைக்கு காரணமாக அமையலாம்.        

இன்றைய மாணவர்கள் அதிகநேரத்தை கணணியுடனேயே செலவிடுகின்றனர் அதிலும் குறிப்பாக கணணியில் விளையாடுவதற்கே செலவிடுகின்றனர் இதுவும் அவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கு தடையாக இருக்கின்றது.

மாணவர்களிடம் இன்று மொழியாற்றல் பேச்சாற்றல் போன்றனவும் குறைவடைந்து வருகின்றன. இதற்கு அவர்கள் நிறைய நூல்கள் படித்தல் அவசியமானது.அத்துடன் அவர்கள் கட்டுரைகள் கவிதைகள் போன்றவற்றை எழுதி தமது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் இருந்த வினாத்தாள் அமைப்பிற்கும் இப்போது இருக்கும் வினாத்தாள் அமைப்பிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. குறிப்பாக பகுதி 2பகுதி 3ல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறுவினா அமைப்புக்கள் மாணவர்களை அதிகமான புள்ளிகளை இழப்பதற்கான வாய்ப்பாக அமைகின்றன. இலக்கணப் பகுதிகள் இப்பொழுது அதிகமாக காணப்படுவதாலும் மாணவர்களின் புள்ளி இழப்பு அதிகமாகக் காணப்படுகின்றது என தெல்லிப்பளை மகாயன கல்லூரியின் தமிழ்ப்பாட ஆசிரியர் தெரிவித்தார்.

வினாக்களை விளங்கி அதற்கேற்ப சிந்தித்து விடைகளை எழுத மாணவர்கள் பழக வேண்டும் மாணவர்கள் தங்களை முயற்சி பயிற்சி ரீதியாக தயார்ப்படுத்திக் கொள்வதும் தமிழாசிரியர் எதிர்காலத்தில் தமிழ்ப்பாடசித்தி வீதத்தை அதிகரிப்பதற்காக தம்மாலான செயற்பாடுகளை மேற்கொள்வதாலும் தமிழ் பாடத்தில் சித்தி வீதத்தை அதிகரித்துக் கொள்ளலாம்

தகவல் -சுகனியா
                  மிருஷா





மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply