குடாநாட்டில் தற்போதைய சனத்தொகைக்கு ஏற்ப உணவகங்களின் தேவையும் இருந்து வருகின்றன.தற்போது வெளிமாவட்டங்களிலிருந்து பெருமளவிலான மக்கள் குடாநாட்டுக்கு வருகின்றமையினாலும் இங்கு வந்து தங்ககின்றமையினாலும் மக்களுக்கு உணவகங்களின் தேவை முக்கியமானதொன்றாகிவிட்டது. ஆனால் இந்த உணவகங்கள் மக்களின் சுகாதாரத்தையும் பொருளாதாரத்தையும் முன்னிலைப்படுத்துகின்றதா?என் பது கேள்விக்குறியாகவே உள்ளது.அத்துடன் இன்றைய உணவகங்களில் வேலை செய்பவர்கள் தேகஆரோக்கியம் உடையவர் என்பதை உறுதிப்படுத்திய அடையாள அட்டையை ஒவ்வொரு வருடமும் மாநகரசபையின் சுகாதாரப்பகுதியில் பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியமானது.
ஆனால் இது கடைப்பிடிக்கப்படுகின்றதா?என்ற கேள்விக்கு இதுதொடர்பாக சுகாதாரப்பிரிவினர்அக்கறை செலுத்துவதில்லை என்பதே மக்களின் கருத்தாகின்றது.
ஆனால் இது கடைப்பிடிக்கப்படுகின்றதா?என்ற கேள்விக்கு இதுதொடர்பாக சுகாதாரப்பிரிவினர்அக்கறை செலுத்துவதில்லை என்பதே மக்களின் கருத்தாகின்றது.
அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் தகுந்த உடை அணிந்து வேலையில் ஈடுபடுவதில்லை. தடிமன்,சொறி சிரங்கு என்பவற்றுடன் இருப்பவர்களும்வேலையில் ஈடுபடுதல்,உணவகங்களை சுத்தம் செய்பவர்களே உணவுகளையும் பரிமாறுகின்றனர்,சில உணவகங்களில் உணவு பரிமாறுபவர்கள் சுகாதாரம் அற்ற முறையில் அழுக்கான ஆடைகளை அணிந்துகொண்டும் உணவு பரிமாறுகின்றனர்.முக்கிய பகுதியான சமையல் பகுதியை அவதானித்துப் பார்த்தால் அங்கு சுகாதாரம் இருப்பதில்லை.சமையலுக்குப்பயன் படுத்தப்படும் பாத்திரங்கள் முதற்கொண்டு சமையலில் ஈடுபடுவதைவிட சுகாதாரம் அற்றதாகவே காணப்படுகின்றது.சில உணவகங்கள் சைவம் மாமிசம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் ஒரேபாத்திரங்களைப் பயன்படுத்தியே உணவுகளைத்தாயாரிக்கின்றன.இது தொடர்பாக யாழ் மாநகரசபையின் சுகாதாரப்பிரிவினரிடம் கேட்டபோது,தற்போது யாழ் குடாநாட்டில் உள்ள உணவகங்கள் பலவற்றில் சுகாதாரச் சீர்கேடுகள் பல இடம்பெற்று வருகின்றன.இதன் பிரதான காரணம் உணவகங்களை நடாத்தும் உரிமையாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமையே ஆகும்.உணவு நிலையங்களில் வேலை செய்யும் வேலையாட்களுக்கும் சுகாதாரம் தெடர்பான அறிவு காணப்படுவதில்லை உணவுச்சுகாதாரம் தொடர்பாக உணவக உரிமையாளர்களுக்கோ ஊழியர்களுக்கோ போதியளவு அறிவு இருப்பதில்லை 26 ஆம் பக்க உணவுச்சட்டம் பற்றிய ஒழுங்குவிதிகள் பற்றி உரிமையாளருக்கோ உற்பத்தியாளருக்கோ போதிய விளக்கம் இருப்பதில்லை.அவர்கள் அது பற்றிய அறிவினைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதில்லை. அசட்டயீனமாக இருக்கின்றார்கள்.
உணவகங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் சுகாதார ஒழுங்கைக் கடைப்பிடிப்பதில்லை. அவர்கள் வேலைக்கு வருபவர்களாக மட்டும் இருக்கின்றார்கள்.அவர்கள் தனிநபர் சுகாதாரம் பேணுவதிலும் பின் தங்கி நிற்கின்றார்கள்.தற்போது உணவகங்கள் பலவும் இலாபநோக்கினை மட்டும் கருத்pல் கொண்டு மட்டும் இயங்குகின்றன.தமக்கு பணம் கிடைத்தால் போதுமென்றுநினைத்து இயங்கும் உணவகங்கள் பற்றியும் மக்களும் அக்கறை கொள்வதில்லை.காலவதியான,சுகாதா ரமற்ற.பழுதடைந்த,உணவுப்பொருட் களை விய்பதைப்பார்த்தும் மக்கள் வாய்மூடிக்கொண்டிருக்கின்றார் கள்.இது உணவகங்களை நடாத்துபவர்களுக்கு வாய்பாகின்றது.இதுபற்றி மக்களும் சிந்திக்கத்தெரியாதர்களாக இருக்கின்றார்கள்.நாங்கள் உணவகங்கள் எல்லாவற்றையும் தரம் பிரித்திருக்கின்றோம்.சிற்றுண் டிச்சாலை,தேநீர்ச்சாலை,உணவுவிடு திகள்,சிற்றுண்டிச்சாலைகளிலே உணவு தயாரிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.அவர்கள் வெளியிலிருந்து உணவுகளைப்பெற்று விற்பனை செய்ய முடியும்.ஆனால் தற்போது சிற்றுண்டிச்சாலையில் உணவு தயாரித்து விற்பனை செற்வதையும் அவதானிக்க முடிகின்றது.இது பற்றி சுகாதாரப்பகுதியினரால் பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டும் அவர்களுக்கு எதிராகச்சட்ட நடவடிக்கை எடுத்தும் கூட அவர்கள் அசட்டயீனமாகவே காணப்படுகின்றனர். உணவுவிடுதிகள் எனும் போது இங்கு தனியே சோறுகறி போசனைஉணவுகள் மட்டும்தான விற்பனை செய்ய வேண்டும்;. இங்கு சிற்றுண்டிகள் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.ஆனாலும் அவைகூட அந்த நடைமுறையைப்பின்பற்றுவதில்லை.
இடவசதியை அடிப்படையாகவைத்தே உணவகங்களைத்தரம் பிரிக்கின்றோம்.சமையற்பகுதி,நீ ர்வசதி,பரிமாற்றஅறைவசதி,களஞ்சி யவசதி,உணவுகளைப்பாதுகாப்பாக வைக்கக்கூடியவசதி,மலசலகூடவசதி, தங்குமிடம் அமைக்கப்பட்ட விடுதிகள் எனில் காற்றோட்டம்,மற்றும்அடிப்படை வசதிகளோடு ,கழிவுகளை ஒழுங்காக அகற்றக்கூடிய வசதிகள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன.இவற்றில் கட்டாயமாக சுகாதாரத்தை வலியுறுத்துகின்றோம்.இதனால்தான் உணவகங்களை அமைக்கும்போதும் சுகாதாரப்பகுதிக்கு அறிவித்து உள்ளுராட்சிசபையிடம் அனுமதி பெற்றுஅவர்களினால் அனுமதி வழங்கப்பட்டபின்னரே ஆரம்பிக்கப்படவேண்டும்.இதுவே சட்டரீதியான உணவகங்கள் ஆகும்.அனால் இன்று உணவகங்கள் பல எந்த அனுமதியும் பெறுவதில்லை.திடிர்திடீரெனத்தோ ற்றம் பெற்று விடுகின்றன. உணவகங்களில் மலசலகூடங்கள் இருப்பதில்லை.சில உணவகங்களில் இருப்பதைக்கூடச்சரியாகப்பயன்படு த்த முடியாத நிலை காணப்படுகின்றது.பெரும்பாலான உணவகங்களில்; சுத்தமான குடிநீர்வசதிஇல்லை,கிணறுகளழ கூட பாதுகாப்பற்ற முறையிலேயே காணப்படுகின்றது. உணவகங்களில் உணவு உற்பத்திப்பொருட்களையோ உணவுகளையோ களஞ்சியப்படுத்துவதிலும்,கையாள் வதிலும் சரியான சுகாதார ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படுவதில்லை.கழிவுகளை வெளியகற்றுவதிலும் சுகாதார முறைகள் பின்பற்றப்படுவதில்லை.குறிப்பாக வடிகால் பிரச்சனைகள் காணப்படுகின்றது.இதனால் தெற்றுநோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது.இவற்றைச் சீர்செய்ய வேண்டும் என உணவக உரிமையாளர்கள் யோசிப்பதில்லை.பணம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலாபநோக்கத்தினைக்கொண்டே நடாத்துகின்றார்கள்.
நாங்கள் தொடர்ந்தும் இவ்வாறான உணவகங்களை அவதானித்து சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வுகளையும்,எச்சரிக் கைகளையும் விடுத்து வருகின்றோம்.சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கும் படியும் வலியுறுத்தி வருகின்றோம.;
அடுத்து உணவகங்களின் சுகாதாரம் தொடர்பாக உணவகங்களை அன்றாடம் பயன்படுத்துபவர்களிடம் கேட்டபோது அன்றாடம் உணவகத்தினைப் பயன்படுத்துபவராக இருந்தாலும் குறிப்பிட்ட உணவகத்தில் தயாரிக்கப்படுகின்ற உணவுகளை உண்பதில்லை என்றும் பணிஷ் பாண் போன்ற பேக்கரி உணவுகளை மட்டும் விரும்பி உண்பதாகவும் அந்த உணவகத்தில் தயாரிக்கப்படகின்ற உணவுவகைகள் சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்படுவதாகவும் உணவ தயாரிக்கும்போது உணவுதயாரிப்பவர் சுகாதாரமற்ற அழுக்கான ஆடைகளுடன் உணவு தயாரிப்பதில் ஈடுபடுவதைத் தாம் அவதானிப்பதாகவும் அவர்கள் உணவகத்தைளச் சுத்தப்படுத்துவதுகூட மிகவும் அரிதான காரியமாகவே காணப்படுகின்றத எனவும் மேலும் அந்த உணவகத்தில் சுகாதார சீர்கேடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்தச் சுகாதார சீர்கேடுகளை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக உணவக உரிமையாளரிடம் கேட்டபோது தாங்கள் உணவு நிலையத்தினை நடாத்தி வருகின்றபோது தாங்கள் உணவு நிலையத்தினை நடாத்தி வருகின்ற போது பல இன்னல்களையும் நெருக்கடிகளையும் எதிர்நோக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார். உணவகங்களைப்பரிசோதனை செய்ய வருகின்ற சுகாதாரப்பிரிவினர் முன்அறிவித்தல் ஏதுமின்றி திடீரென்று பொலிஸாருடன் வந்து சோதனையிடுவதாகவும் இதனால் உணவகங்கள் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார். ஆதிகமாக வாடிக்கையாளர்கள் வரும்போது இவர்களின் இவ்வாறான தீடீர் செயற்பாடுகளால் எமது வேலைகளை ஒழங்காக செய்யமடியாமல் போய்விடுகின்றது.வாடிக்கையாளர் களையும் இழக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாக வாய்ப்பு ஏற்படுகின்றது. ஏ-9 பாதைதிறந்ததன் பிற்பாடு தான் இவ்வாறான செயற்பாடுகள் கூடுதலாக உள்ளது. ஆனாலும் எமது உணவகம் ஆரம்பித்து 4வருடகாலமாகின்றது.ஒருபோதும் நிறுத்துமாறு பணிப்பு விடுக்கப்படவில்லை. நாம் எம்மால் முடிந்தளவு வேலையாட்களைக்கொண்டு சுகாதாரமாகவே நடாத்தி வருகின்றோம். யாழில் அதிகரித்து வருகின்றகோட்டல்களால் உங்களுக்கு ஏதாவது பாதிப்பு உள்ளதா எனக்கேட்டதற்கு எப்பவுமே ஒவ்வொரு உணவகங்களும் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுஇருப்பதால் கோட்டல்களால் பாதிப்பு இல்லை எனவும் கூறினார்.
காரணங்களை யார் முன்வைத்தாலும் கட்டாயமாக யாழ்குடா நாட்டின் உணவகங்களை முறையான வகையில்
பராமரிக்க வேண்டும் அவ்வாறு பராமரிக்க தவறும் பட்சத்தில் மக்கள் தொற்று நோய்களுக்கும் உயிராபத்துக்களுக்கும் பலியாகும் தொகை அதிகரித்துக்கொள்ளும் என்பதே உண்மை
மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...