Friday, January 13, 2012

இந்திய அனுபவம்

0 comments
நாம் வாழும் ஒவ்வொரு கணப்பொழுதும் மறக்க முடியாத அனுபவங்களை பெற்றுத்தந்தால் தான் அவ் வாழ்வு சுவாரசியமானதாக அமையும். அந்த வகையில் ஊடகக் கல்விக்காக நுழைந்த காலம் முதல் கடக்கும் ஒவ்வொரு நாளிகையும் சிறந்த அனுபவப்பாடமாகவே கழிகின்றது. அவற்றில் உள்ளகப் பயிற்சிக்கான தென்னிந்தியப் பயிற்சியின் போதான அனுபவமும் கற்றுத்தந்த பாடமும் ஒன்றிறண்டல்ல.


       ஒரு ஊடகவியலாலன் எவ்வாறான தகைமைகளோடு இருந்தால் எதிர் காலத்தில் சிறந்த ஊடகவியலாலனாக பரினாமிக்க முடியும் என்பதை இவ் உள்ளகப் பயிற்சியின் மூலம் கற்றுக்கொள்ள முடிந்தது ஊடகம்  தவிர்ந்த சாதாரண வாழ்க்கைக்கு தேவையான சில விடயங்களையும் எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது விமான நிலையத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமை முதல் சிறிய சிறிய விடயங்கள் வரை அறிந்து கொன்டேன.;


         சென்னைப் பல்கலைக்கழகத்தில் எமக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாக்கப் பயிற்சியின் மூலம் பல்வேறு விடயங்களை புதிதாகப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இங்கு மட்டுமன்றி சேலம், கோயம்பத்தூர் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்திலும்; பாரதியார் பல்கழைக்கழத்திலும் எமக்காக விசேட கலந்துரையாடல்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மூலமாகவும் பல புதிய விடயங்களை பெற்றுக் கொள்ள முடிந்தது





          சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியற் துறைத் தலைவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் ஏராளம். வந்தாரை இன்முகத்தோடு வரவேற்று அன்புடன் உபசரிக்கும் பாங்கு தமிழருக்குரிய பண்;புகளில் முக்கியமானதொன்று. அதனை இப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் கோபாலன் ரவீந்திரன் அவர்கள் சிறப்பாக ஒழுங்குபடுத்தி வழிநடாத்தியிருந்தார். இத்தகைய செயற்பாட்டில் இருந்து நான் கற்று கொண்டவை ஏராளம் ஒரு செயற்பாட்டை எவ்வாறு திட்டமிட வேண்டும,; திட்டமிட்டதை அட்டவணைக்கேற்ப நேரம் தவறாமல் எவ்வாறு செயற்படுத்த வேண்டும் ஒருவரிடம் உதவி பெறும் போது அல்லது ஒருவரின் உதவியை நாடும் போது நாம் எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை நான் அவரினூடாக அறிந்து கொண்டேன்.


         தலைமைப் பதவியில் இருந்தாலும் ஒரு விடயத்தினை கொன்டு நடாத்துவதற்க்கு அத் தலைமையின் கீழ் உள்ளவரின் ஒத்துழைப்பு இல்லாமல் அதனை வெற்றிகரமாக கொண்டு செல்ல மடியாது இதற்க்கு தலமையின் கீழ் உள்ளவரின் வாக்கிற்க்கு கீழ் படிந்து கூட்டாக செயற்பட வேண்டிய ஒரு கட்டாயம் உண்டு அதனை சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன் எந்தவொரு விடயத்தினையும் தலைமையில் உள்ளவர்கள் கூறியவுடன் அதனை மறுக்காமல் உடனடியாக நிறைவேற்றி அந் நிகழ்வுகள் தடையில்லாமல் நடக்க ஒவ்வொரு மாணவர்களும் பொறுப்புடன் செயற்பட்டனர் பேருந்தில் பயணம் செய்த வேளையில் ஒரு இடத்திற்கு புதியவராக இருந்தாலும் எம்மாலும் இடத்திற்கேற்ப செயற்பட முடியும், எம்மாலும் தனித்து ஒரு விடயத்தை செய்து கொள்ள முடியும் என்பதை கற்றுக் கொள்ள முடிந்தது. இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள பேருந்து போக்கு வரத்திற்க்கும் அங்கு விநோயகி;க்கும் பற்றுச் சீட்டுக்கும் முற்றிலும் மாறுபட்டதாகவே இந்தியப் போக்குவரத்துச் சேவை அமைந்திருந்தது. ஒவ்வொரு பிரதேசத்திற்குமான பற்றுச் சீட்டுகளின் நிறங்கள் வித்தியாசமானவை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்க குறிப்பாக நாம் தங்கியிருந்த சாந்தோம் பகுதியில் இருந்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்க்கு செல்ல வேண்டும் அங்கிருந்து பேருந்தினைப் பெற்று அவ்விடத்தில் இறங்க வேண்டும் என்பதை ஒரிரு நாட்களிளேயே சரியாக அறிந்து கொள்ள முடிந்தது இனியொரு தடைவை தனித்து அப் பல்கலைக்கழகம் அது சார்ந்த பகுதிகளுக்குச் செல்வதற்கு இது ஒரு நல்ல வாயப்;பினை பெற்றுத் தந்துள்ளது 01
     

இச் சென்னைப்பல்கலைக்கழகத்தில் 18ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இடம் பெற்ற புதத்தாக்கப் பயிற்சியின் போது பல பேராசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களதும் கருத்துரைகள் இடம் பெற்றது. இப் பயிற்சியின் முதல் நாள் அன்று உரையாற்றிய பேராசிரியர் அரவாணன் அவர்கள் மூலம் பல வரலாறு கடந்த உண்மைத்தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.  அவர் கூறிய சிறிய கருத்து பலவற்றை சிந்திக்கச் செய்தது. .அதாவது நம் நாட்டைச்  சூழ பல சமுத்திரங்கள் கடல்களும் அமைந்துள்ளன. அவற்றின் எல்லைகள் எமக்குரியதாக இருந்தாலும் அவை கொண்டிருக்கும் பெயர்கள் ஆங்கிலப் பெயர்களாகவும் உள்ளன. இது போன்றே ஒவ்வொரு சம்பவங்களும். நாம் எமது சிறு சிறு உரிமைகளைக் கூட விட்டுக் கொடுத்து சென்று கொண்டிருக்கின்றோம.; இதனை இதுவரை சிந்தித்துள்ளோமா? என்று ஒரு வினாவையும் முன்வைத்தார் .


           இது பதுங்கி இருந்த சிந்தனைப் பறவையைச் சிறகடிக்க வைத்தது.  சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பில் துறை லீயோபெனான்டோ அவர்களினால் நடாத்தப்பட்ட கலந்துரையாடலில் ஊடகவியலாளர் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகைமைகள் தொடர்பாக பேசப்பட்டது. இவற்றுள் நாம. அறியாத  சில தகமைகள் அவரால் முன்வைக்கப்பட்டது. அத்தோடு பேரசிரியர் கோபாலன் ரவீந்திரன் அவர்களால் பத்திரிகைத்துறையில் ஆய்வின் முக்கியத்துவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலின் பின் சாதாரனமானதோரு சம்பவத்திற்கு கேள்வி எவ்வளவு அவசியமானது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. ளநளெந ழக டிசழயனஉயளவiபெ எனும் தலைப்பில் hநடடழகஅ சுரேஸ் அவர்கள் நிகழ்த்திய கலந்துரையாடலின் போது அவர் தெரிவித்த ஒரு கருத்து இந்தியாவின் செய்திகளை ஒலிபரப்புச் செய்யும் அதிகாரம் எந்த தனியார் வானொலிகளுக்கும் இல்லை என்று கூறியிருந்தார். அத்தோடு தாயம்மாள் அறவாணன் அவர்கள் பேசும் போது நான் இதுவரை அறிந்திராத பத்திரிகைத்துறையில் ஈடுபட்டிருக்கும் பல பெண்கள் பற்றிக் கூறியிருந்தார். இவற்றோடு நாம் பல றழசன hநசவையபநள இனைப்பார்வையிட முடிந்தது. மைசூர் பலஸ், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், காமாட்சியம்மன் கோவில,; ஏகாம்பரநாதர் கோவில,; வேலூர் கோட்டை, ஜலகண்டேஸ்வரர் ஆலயம,; மகாவலிபுரம் போன்றவை பற்றிய மேலதிக அறிவினைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.


         பழங்குடி இனத்வர்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டு ஆனால் அவர்களை நேரரிவ் சந்தித்ததோ அல்லது அவர்களது வாழ்கை முறை பற்றி அறிந்ததோ இல்லை   இவ்வுள்ளகபபயிற்சியின் போது அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி அவர்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.


பாரதியார் பல்கழைக்கழத்தில் இடம் பெற்ற கருத்தரங்கில் நnஎசைழnஅநவெயட சநிழசவiபெ தொடர்பாக  பேசப்பட்டது. சுற்றுக்சூழல் தொடர்பான அறிக்கையிடல் எவ்வளவு முக்கியமானது என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது


        இவை போன்று இப் பயணத்தில் நாம் கற்றுகொண்டவை ஏhhளம் இறுதி நாளன்று உண்மையான நட்பு என்றால் என்ன அது பிரியும் போது அவ்வலி எவ்வாறானது என்பதையும் கற்றுத்தந்தது இப்பயணம். தனித்து கற்றலோடு மட்டுமன்றி எதிர்கால வாழ்க்கைக்கு வேண்டியவற்றையும் இப்பயணம் பெற்றுத்தந்தது.




ஆக்கம் -சி.ஜனகன்.

மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply