Friday, January 13, 2012

கொழும்பு அனுபவம்

0 comments
ஓய்வே இல்லாத நேர அட்டவணையில் வேகமாக இயங்கியது நம் பயணம். கலையாத தூக்கத்தோடு ஆரம்பித்தாலும் கலையாத நினைவுகள் மட்டும் நெஞ்சங்களில் தேங்கின.


 பாராளுமன்றம் பார்ப்பது என் பல நாள்க்கனவு. அடிக்கடி ஊடகங்களில் பாராளுமன்ற ஆசனங்களையே காணக்கிடைத்தன. அதையும் தாண்டி கலைநுட்ப்பங்களோடு சேர்ந்த பிரம்மாண்டமான கட்டடத்தொகுதி அது. உள்ளே தொங்கிக் கொண்டிருக்கும் வெள்ளியால் செய்யப்பட்ட அலங்கார விளக்குகள்இ ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும் அலுமினியத் தகட்டுகள்இ வெள்ளிக் கோலில் அமைக்கப்பட்ட வரலாற்றைப் பிரதிபலிக்கும் சின்னங்கள்இ அரியாசனமாய் வீற்றிருக்கும் அகிராசனம் எல்லாமே அரண்மனைக்குள் இருக்கும் கம்பீரமான உணர்வைத் தந்தன. இதிலும் சிறப்பு என்னவென்றால் மேலிருந்து பார்க்கும் போது நீரின் நடுவே பூத்திருக்கும் தாமரை மலர் போல காட்சி தருமாறு ஜப்பானியரால் வடிவமைக்கப்பட்டமை இலங்கைக்கே பெருமை சேர்க்கக்கூடியது. பாராளுமன்றத்தின் அவையிலேயே முதன்மை பெறுவது எது தெரியுமா? இங்கு வைக்கப்பட்டிருக்கும் தங்கக் கோளத்தில் கருங்காலி மரத்தாலான செங்கோல். இது மட்டும் இல்லையென்றால் அவை கூடமுடியாது. இவை யாவற்றையும் ஒரே நாளில் காணமுடிந்தமையும் விந்தை தான்.



                                                                                                       

முதல் நாள்ப்ப்பொழுது பாராளுமன்றத்தோடு கழிந்தாலும் மறுநாள் அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட பொருட்களும் தகவல்களும் வரலாற்றை மீட்டதோடு பலவற்றைக் கற்றும் தந்தது. இது மட்டுமல்லஇ வெளியேயுள்ள பூங்காவில் நண்பர்களோடு ஒரு சில நொடிப் பொழுதுகள்.. மனதிற்கு இதமாயிருந்தது.
 'ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்' எனும் தொனிப் பொருளில் களனிப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது மருத்துவக்கண்காட்சி.  இதுகூட ஒரு அரிய வாய்ப்புத்தான். ஏன்தெரியுமா?  ஜந்து வருடங்களுக்கு ஒரு முறை தான் இக் கண்காட்சி இடம்பெறும். பல்லின மக்களோடும் சேர்ந்து எதார்த்தமான காட்சிகளைப் பார்த்தாலும் சில காட்சிகள் நெஞ்சை உருக்கியே போயின. சாதாரணமாக இறந்த உடல்களை பார்ப்பது இயல்பு தான். ஆனால் இங்கு உறுப்புக்கள் அகற்றிய நிலையில் பிளவுபட்டுக் காணப்பட்ட உடல் மனிதத்தையே புரிய வைத்தது.  மறுநொடி ஏற்ப்படப்போகும் மரணத்தை எண்ணாது எத்தனை எத்தனையோ எண்ணங்களும் செயல்களும்....
                                                         

 இவற்றோடு சேர்ந்து விழுதுகளிலும் ஒரு நாள். புத்தகப்படிப்புக்களை செயற்பாடுகளாய் உரையாடினோம். சுதந்திரத்தின் நினைவான சுதந்திர சதுக்கத்தில் விமானப்படையினரோடு என் நண்பர்களுடன் நானும்.. புகைப்படக் கமராக்களும் புகைப்படத்திற்கு முகம் கொடுப்பவர்களும்..  இதற்குள் நானும் ஒருத்தி தான். எல்லாமே என் நண்பர்களுடன் இருந்த உணர்வு அல்ல.  என் குடும்பத்தோடு மகிழ்வாடிய உணர்வு தான். . .
                           

அன்று மாலை விகாரமகாதேவிப்பூங்கா..  நீண்டநேர மழை.... நண்பர்களோடு  நேளஉயகந ஆனாலும் மழையின் குளிரைக் குறைக்கவேயில்லை. சாதாரணமாகப் புகைப்படம் எடுப்பது ஞாபகத்திற்காக.  என் தோழிகளோடு புகைப்படங்கள் எடுத்ததே இதமான நினைவுகள்..
                                   

எம் போன்ற இதழியல் கல்லூரி மாணவர்களோடு கலந்துரையாட ஒரு சந்தர்ப்பம்.. பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில். தமிழ்இ சிங்களம்இ முஸ்லீம் என நட்பு வட்டத்தையே விசாலித்தது இது.  பல புதிய இன்முகங்களோடு உறவாடிய நாட்கள் அவை. பாராளுமன்றத்தில் மொழிபெயர்ப்பிற்காய் பயன்படுத்தப்படும் ர்நயன ளநவ  ஜப் பார்வையிட்டிருந்தேன். ஆனாலும் பயன்படுத்தும் சந்தர்ப்பம் எட்டவில்லை. இது என்ன தெரியுமா? ஒரு மொழியில் உரையாற்றுவதை அதே வேகத்தில் இருமொழிகளில் மொழிபெயர்ப்பது.. எமக்கு விரும்பிய மொழியில் கேட்க்க முடியும். வேடிக்கை என்ன தெரியுமா? சிலர் தமிழில் உரையாற்றும் போதும் அணிந்திருந்தனர். நண்பர்களிடையே குடயளா நெறள  எனப்பரிமாற்றிய இச் செய்தி .. இவை அனைத்துமே ஊடகப் பயணத்தில் பொன்னான மணித்துளிகள்..
                               

 எமக்குக் கிடைத்த வாய்ப்புக்களைப் பாருங்களேன்.  மதியம் அமைச்சருடன் கலந்துரையாடல்.. யார் தெரயுமா? கல்வி அமைச்சர் திஸ்ஸநாயக்கவுடன் தான்.. அப்பொழுது உணர்ந்தோம் எம் நிலையை. சந்தர்ப்பந்கள் எல்லாமே கிட்டிவிட்டது. சாதிக்கத் துடிக்கிறது வேகம்..
      இரவுப்போசனம் புதிய நண்பர்ரோடு. தொலைக்காட்சி அறிவிப்பாளர் அனந்தபாலகிஸ்ணருடன். அவர் ஆசிரியராய் எம்மோடு இணைந்தாலும் சில நாட்களிலிலேயே நண்பராகிவிட்டார். சில காலப்பிரிவின் பின்னரான சந்திப்பு. மனதை நெகிழவைத்தது.
                                                     

 வானொலிஇதொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி கேட்ப்பது வழமை. ஆனால் அந்நிகழ்ச்சி செய்வதையே பார்த்தது புதுமை. மகாராஜா நிறுவன கலையகத்தில் பார்க்கக் கிடைத்தது ளுpநடட அயளவநச  நிகழ்ச்சி. நேரடியாக நாமும் இணைந்திருந்தோம். என்ன ஒரு பூரிப்பு.  அடுத்துக் காத்திருந்தது இன்னுமோர் வியப்பு. தேனீர் குடித்துக் கொண்டிருக்கும் போது பார்த்த கஜமுகன் அண்ணா. நண்பர்களோடு சேர்ந்து அவருடன் ஒரு கலந்துரையாடல். அவரின் நிகழ்ச்சியைப் பார்வையிட்டது எம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. இங்கு பேசிக்கொண்ட நண்பர்களது சிரிப் பொலிகள் இப்போதும் அந்நாளை நினைவுபடுத்துகிறது.
                                                                                              ஊடகப் பயணத்தில் இன்னோர் அங்கீகாரத்தையும் என்னால் பெறமுடிந்தது.  தெற்க்காசியப் பெண் ஊடகவியலாளர் அமைப்பில் யாழில் இருந்து முதல் முதல் இணைந்து கொண்ட ஜந்து பெண்களில் நானும் ஒருத்தி என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.
                                                       

 தூங்குவதற்கு நேரம் போதாமல்ப் போனாலும் மகிழ்ச்சிக்கு நேரம் குறையவேயில்லை. இதழியல்க் கல்லூரி நண்பர்களுடனான விளையாட்டு நிகழ்வு அவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை தந்தது. மழையைக் கூடப்பொருட்ப்படுத்தாது மைதானத்தில் நின்றுகொண்டிருந்தோம். விடைகொடுக்கும் போது ஈரமாகிய கண்கள் அன்பு நெஞ்சங்களைப் புரியவைத்தது.
  ரூபவாகினிக்கூட்டுத்தாபனத்திற்கு சென்ற அவ் இறுதிநாள் யாழ் வரும் மகிழ்ச்சியோடு புறப்பட்டோம்.




மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply