Thursday, January 12, 2012

அனுபவம்

0 comments


ஈழத்தமிழனுக்காய் தன்னையே தீயினில் சங்கமித்த உணர்வாளன் முத்துக்குமாருக்கு தலைசாய்த்துக் கொண்டு எனது நன்றியின் களத்தில் குதிக்கின்றேன்.தொப்பிள் கொடியின் உறவு என்று காலம் காலமாக வாய்விட்டு அழைத்த முல்லை மொட்டு நான்.மொட்டுதனை இழந்து விட்ட மேடைக்கச்சேரியாய் இருந்த ஈழத்தமிழருக்கு உதவி கொடுத்த உள்ளத்தால் நிமிர்ந்து நின்ற கூட்டத்தில் ஒரு துளியினரைச் சந்தித்தேன்.
வரவேற்பு என்பது வாய் அளவிலும் மன அளவிலும் காணப்படுகிறது.ஆனால் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் எம்மை விமான நிலையத்திற்கு வந்து மாலை போட்டு வரவேற்றனர்.இதில் நான் மிகவும் சந்தோசப்பட்டதோடு இம் மாணவர்களுக்கு நன்றியையும் வெரிவித்துக் கொள்கின்றேன்.





      எல்லாவற்றிக்கும் மேலாக எம்மையெல்லாம் ஏற்றுக் கொண்டு பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் பல நிகழ்வுகளைத் தயாரித்து இவற்றினூடாகப் பயனைபெற்றுத் தந்த சென்னைப் பல்கலைக்கழக இதழியற்றுறை மற்றும் தொடர்பாடல்துறை தலைவர் பேராசிரியர் கோ.ரவீந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் எங்கு சென்றாலும் எமக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்தித் தந்து அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப எம்மைத்தயார்ப்படுத்திய அருட்திரு சகாயராஜ்அடிகளார்,அருட்திருபீற்றர்அடிகளார்,ஆகியோரிக்கும் மனதார நன்றிகள்.இவர்கள்; எம்மில் மிக அக்கறையுள்ளவர்களாகவும் ,நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும்,நாம் இத்துறையிலிருந்து எவற்றை செய்ய வேண்டும் என்பதையும்அன்பாகவும்,பண்பாகவும் எமக்க எடுத்துக் காட்டினார்கள்.அருட்தந்தையர்கள் என்ற நிலையிலிருந்து இறங்கி வந்து மாணவர்கள் என்ற தரத்தில் யாவருடனும் பழகிய இவர்களை என்னென்பேன் ஏதென்பேன்.


அடுத்து எம்மோடு கூட பயணித்து எமக்கு வழிகாட்டியாகவும் இருந்து வந்தவர்கள் “முற்றம்”நாடகக்குழுவினர்.இவர்கள் எம்மோடு கூடப்பயணித்தது மட்டுமன்றி பெரியார் பல்கலைக்கழகம்,பாரதி பல்கலைக்கழகம் பெங்களுர் தமிழ் சங்கம் ஆகியவற்றில் தமது பாரம்பரிய நிகழ்வுகளை நிகழ்த்தினார்கள்.இவ்நிகழ்வுகளை திறம்படச் செய்வதற்கு நெறியாளராக வேணு என்று அழைக்கப்படுகின்ற ஆடல் அரசு பிரதானமாக இருந்தார்.இவர்களுக்கும் எனது பிரதான நன்றிகள்.


      யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கை நிலையம் இல்லையென்றால் எனக்கு இந்த வாய்ப்புக்கள் கிடைத்திருக்கமாட்டாது.இந்நிறுவனம் இயங்குவதனால் நான் பல அனுபவங்களைப்பெற்று அவற்றிற்கூடாக பல நன்மைகளை அடைந்தேன். அவற்றிற்காக முதலில் நான்  ஊடகக்கற்கை நிலையத்திற்கு நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.


எமது இயக்கனர் தே.தேவானந்த் அவர்களின் தனிப்பட்ட ஆற்றலும் திறமையும் காரணமாக நாம் மூன்று பல்கலைக்கழகங்களுக்குச் சென்றிருந்தோம்.பணம் இருந்தால் பல இடங்களுக்கச் செல்லலாம்.ஆனால் இப்படியான பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல முடியாது.ஒரு இயக்குனர் வந்திருந்தாலும் நாம் இந்தியா சென்றிருப்போமா?என்பது கேள்விக்குறி ஆக நன்கு திட்டமிட்டு மாணவர்களை எப்படி வளப்படுத்த வேண்டும் என்று ஆழமாகச் சிந்தித்து பல்வேறு நகர்வுகளை எமக்காகச் செய்த இயக்குனர் தே.தேவானந்த அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.                                                      






மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply