Thursday, January 12, 2012

யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய நெசவு உற்பத்தயானது முற்றாக அழிவடையும் நிலை

0 comments
பாரம்பரியமாக ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகோலாக இருப்பது சுயதொழில் உற்பத்தியே ஆகும். இவ் உற்பத்திகளில் யாழ்ப்பாணத்தில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் உற்பத்தியாக நெசவு உற்பத்தி காணப்படுகின்றது.  இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வந்த நெசவு உற்பத்தியானது   ; இலங்கைக்கு அன்னியரின் வருகையுடன்; எடுத்து வரப்பட்டது. அன்னியரின் படையெடுப்புகள் மூலம் இலங்கைக்கு பல பாதி;ப்புக்கள் ஏற்படினும் இது போன்ற ஒரு சில நன்மைகள் ஏற்படவும் இவர்களின் வருகை காணப்பட்டுள்ளது.









இந்த வகையில் 1960களில் யாழ்ப்பாணத்தில் பூர்வீகமாக ஆரம்பிக்கப்பட்ட நெசவு உற்பத்தியானது பல நூற்றுக்கணக்கான கிளைகளைப் பரப்பி ஆலவிருட்சம் போல் பரந்து காணப்பட்டது. இதனால் அக் காலகட்டத்தில் பொருளாதார ரீதியிலும் பல மாற்றங்கள் ஏற்படவும் இது அடிப்படையாக காணப்பட்டது. இருப்பினும் பிற்பட்ட காலங்களில் ஏற்பட்ட சமூக, அரசியல் மாற்றங்கள் காரணமாக நெசவு தொழிற்துறை ஆனது ஒரு வீழ்ச்சி பாதையை நோக்கி நகரத் தொடங்கியது. இன்று இத் தொழிற்துறையானது முற்றாக அழிந்த விடும் தறுவாயை எட்டியுள்ளது. இதற்கு பல வித காரணங்கள் முன்வைக்கப்படுகின்றது.
இந் நிலையில் இவ் உற்பத்தியின் இன்றைய நிலை பற்றி கரவெட்டி நெசவு நிலையத்தின் பொறுப்பாளர் திருமதி. வைத்திலிங்கம் குறிப்பிடுகையில் இந்தியரின் வருகையினாலும் அவர்கள் தமது உற்பத்திகளை பல விதமான விளம்பரங்கள் விற்பனை தந்திரங்கள் என்பவற்றாலும் தமது உற்பத்திகளை இங்கு விற்பனை செய்யத் தொடங்கினர். குறிப்பாக எமது மக்களும் அதன் பால் கவரப்பட்டதானால் அவர்களும் பெருமளவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளையே வாங்கவும் தொடங்கினர். இதனால் எமது ஆடை உற்பத்திகள் வீழ்ச்சியடையத் தொடங்கி விட்டது.
இன்று தற்போது உள்ள இளம் சமூகத்தினர் நெசவு தொழிலில் ஆர்வம் காட்டுவதில்லை. முன்பெல்லாம் பல பிள்ளைகள் கஷ்டத்தின் மத்தியில் இங்கு வந்து தொழில் செய்தனர். ஆனால் இன்று வெளிநாட்டுப் பணத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளதுடன் இவர்களுக்கும் வேறு பல கல்வித்துறை வாய்ப்புக்கள் வந்ததனால் அதனை எல்லா பிள்ளைகளும் கற்கத் தொடங்கி; விட்டனர். இவை மாத்திரம் அல்லாது முக்கிய காரணமாக இத் தொழிலானது மிகவும் கஷ்டமான ஒரு தொழில் ஆகும். அதாவது உடம்பை வருத்தியே வேலை செய்ய வேண்டியுள்ளது. வேறு நாடுகளில் கஷ்டப்பட்டு செய்யும் தொழிலுக்கு அதிகளவு சம்பளம் கொடுக்கப்படும். ஆனால் இங்கு இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 200ரூபா படி மாதம் 4000ரூபா கொடுக்கப்படுகிறது. இதனாலும் இவர்கள் இத் தொழிலில் ஆர்வம் காட்டாது விட்டு விடுகின்றார்கள்.
1967களில் யாழ்ப்பாண பகுதியில் நூற்றுக்கணக்கான நெசவு உற்பத்தி நிலையங்கள் காணப்பட்டதாகவும் தற்போது 19 நெசவு உற்பத்தி நிலையங்களே காணப்படுகின்றது. குறிப்பாக யாழ்ப்பாண நெசவு தொழிற்சாலைகளை பொறுத்த வரையில் 6 மாத பயிற்சி நெறிக்காக சேர்க்கப்படுகின்ற மாணவர்களே இங்கு தொழில் செய்கின்றனர். ஒரு நெசவு நிலையத்தில் 10 அல்லது 11 பேர் ஒரு தரத்தில் இணைந்த கொள்வார்கள். பிற்பட பலர் நின்று கடைசியில் 5 அல்லது 6 பேர் இங்கு வருவார்கள். இவர்களுக்கு 6 மாத காலத்திலும் ஒரு நாளைக்கு 21ஃ2 ஆ துணி அடித்தால் 200ரூபா பணம் கொடுக்கப்படும். அத்தோடு இவர்களுக்கு பயிற்சியின் பின்  உறுதிப்படுத்தப்படக் கூடிய வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில்  இன்று இல்லாமல் போய் விட்டது. மேலும் 6 மாத காலப் பயிற்சியின் பின் ஒரு நெசவு நிலையத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு என்பதும் கொடுக்கப்படுவதில்லை.





தற்போது இங்கு உள்ள நெசவு நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் அதன் விற்பனை நிலை பற்றி மாலசந்தி நெசவு நிலைய பொறுப்பாளர் திருமதி. சோதிலிங்கம் கூறியதாவது இங்கு நாம் தற்போது பெர்சிட், ரவல், சேவியற், சாறி போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வருகிறோம். நாம் இவற்றை தயாரிப்பதற்கான நூலினை கைதடியில் அமைந்துள்ள தொழிற்துறை திணைக்களம் தருவதாகவும் இங்கு செய்யப்படுகின்ற பொருட்கள் ஒவ்வொரு வருடமும் கண்காட்சிக்காக வைக்கப்படுவதாகவும் இந்த வருடமும் யாழ் மத்திய கல்லூயில் கண்காட்சி இடம்பெற்றதாகவும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் இங்கு உற்பத்தி செய்யப்படும் உடைகள் உள்ளுரிலும் வெளியூரிலும் விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பாக யு9 பாதை திறக்கப்பட்டதன் பின் இதன் விற்பனையும் சிறிதளவு அதிகரித்துள்ளதாகவும் கூறினார். இவர்கள் 8மூ வருட இலாபத்துடன் தான் இத் தொழிலையும் செய்து வருகின்றார்கள். இங்கு உள்ளுரில் உற்பத்தி செய்யப்படுகின்ற துணி வகைகள் குறைந்து 5 அல்லது 6 வருடங்கள் பாவிக்கும் தன்மை கொண்டவை. குறிப்பாக இதனை முதியோர்களே பெருமளவில் பாவிக்கின்றனர். ஏனெனில் கைதடி முதியோர் இல்லமானது வாடிக்கையாக இங்கிருந்தே துணி வகைகளை பெற்றுக் கொள்கின்றார்கள்;.
மேலும் இவர்கள் கூறும் போது தற்போது ஒரு வருட காலமாக நூல் அனுப்பப்படவில்லை என்றும் இதனால் பயிற்சிகளும் மாணவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. நாம் இது பற்றி பல தடவைகள் முறையிட்டு உள்ளோம். இது பற்றி அவர்கள் கூறும் போது இந்தியாவில் நூலின் விலையேற்றமே இங்கு நூல் பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்று கூறினார். இதன் காரணமாக தற்போது மாணவர்களிற்கான பயிற்சிகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் சென்ற வாரம் 14ஆம் திகதி நெசவு நிலையங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து சங்கானையில் ஒரு கூட்டம் இடம் பெற்றன. இதில் இந்தியாவில் இருந்து வருகை தந்த ஒரு ஆடை தயாரிக்கும் நிறுவனத்தினர் எம்மிடம் 2000ஆ துணி அடித்து தரும் படி கூறினார். அதற்கான நூலும் எமக்கு அனுப்பப்படுவதாக கூறினார். இதற்கு என ஒரு தொகுதி பணமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எமது நெசவு நிலையம் சார்பில் நாம் சம்மதம் தெரிவித்துள்ளோம்;. இதனால் நூலகள்; அனுப்பப்பட்டதன் பின்னர் எமது வேலைகள் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.






மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply