Thursday, January 12, 2012

பலங்கள் கையிலுள்ள சிலரின் பகடையா இந் நிலமாமோ?

0 comments


முப்பது வருடப் போராட்டம் இந்தியா உட்பட இருபத்தொரு நாடுகளின் துணையுடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும் மூன்று வருட காலமாக சமாதான திரை என்ற போர்வையில் ஒடிக்;கொண்டிருக்கும் தமிழர்களின் இரத்த ஆறுக்கு இன்னும் நிரந்தர தீர்வு கிடைப்பதா இல்லை.



மக்கள் இறுதிக்கட்டப் போரிலே பத்துக்கு மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இன்று கதிர்காம முகாமில் எஞ்சியுள்ளனர். இவர்கள் இன்றும் இம்முகாமில் உள்ளார்கள். தமது சொந்த நிலத்திற்காய் ஏங்கி. இவர்கள் மீள்குடியமர்த்தப்படாததிற்கு காரணம் அவர் நிலத்தில் உண்மையாக கண்ணி வெடிகள் இருக்கிறதா? அல்லது அவர்களின் உடைமைகளையா? புலிகளின் ஆயுதங்களையா? அல்லது மருத்துவப் பொருட்கள் இன்னும் எடுத்து முடியவில்லையா? தமிழர்கள் எதைக் கேட்டார்கள்? சிங்களவர்கள் நீ எப்படி இந்த மண்ணில் சுதந்திரமாய் இருக்கிறாயோ அப்படியே தாமும் வாழ வேண்டும் என்பதைத் தானே கேட்டார்கள் இது குற்றமா? ஆட்சிகள் மாறின தேர்தல்கள் மாறின ஆனால் தமிழர்களின் வாழ்வில் தேறுதல் வரவில்லையே!
ஆவசர அவரசமாக சில பகுதிகள் மீள் குடியேற்றம் செய்து சில நாடுகளில் பெயரைப் பெற்ற அரசு எடுத்துக்காட்டாக இரணைப்பாலை தின்பிலிகாட்டிலே குடியமர்த்தப்பட்ட 253 குடும்பங்கள் எதுவித அடிப்படை வசதிகளுமின்றி குடியமர்த்தப்பட்டனர். அவர்களுள் பாம்புக் கடிக்கு முப்பது பேர்  இலக்காகினர்; இதில்  ஐந்து பேர் வைத்தியசாலை வசதியின்றி அவ்விடத்திலே பரிதாபகரமாக உயிர் நீத்;தனர் தெரியுமா? போரிலே செத்தது போததென்று விலங்குகளால் சாக வேண்டும் என்று குடியேற்றினார்களா? தேர்தலில் நிற்பதற்காக அது செய்வோம் இது செய்வோம் என்று அலட்டிய அதிகாரிகள் தேர்தலில் வென்ற பின்னர் காலை வாரி விடுவது பழக்கமாகி விட்டது.
சொந்த நிலத்தில் செத்து மடிந்தாலும் பராவாயில்லை எனெனில் இது எங்களின் சொந்த மண். எவன் மண்ணிலும் சாவதற்கு விரும்பவில்லை. முப்பது வருடமாக சொந்த மண்ணிலே கட்டிக் காத்த சாவை வேற்று மண்ணிலே கட்டவிழ்த்து விடுவதா? பசி பட்டினி நோய் வெள்ளம் என்றெல்லாம் தும்பம் வரட்டும் சொந்த மண்ணில் குடியிருத்தினால் போதும் என்பது தானே  தமிழர்களின் ஏக்கம்.
அக்கினி மூச்சிலே வாழ்ந்;து கொண்டிருக்கும் தமிழர்களும் குளிர் அறைகளில் மெத்தைகளிலே மேலோர் என்று தூங்கிக் கொண்டிருக்கும் கல் மனங்களுக்கு எங்கே புரியப் போகுது கொலைக் களங்களும் பலிக்களங்களும். குட்டக் குட்டக் குனிபவர்களாய் எத்தனை காலம் தான் தமிழர்கள் குனிய முடியும். தமிழன் எடிபொடியானவன் என்பது அவர்களின் எண்ணம் போலுள்ளது. உதாரணமாக வவுனியா செட்டிக்குளம் கதிர்காம முகாமில் எஞ்சியுள்ள மக்களுக்கு எத்தனையாம் திகதி சொந்த மண்ணிற்கு விடலாம் நாளை இதற்கான டோக்கன் என்று அறிவித்து டோக்கனையும் வழங்கி விட்டு தைக்கு பிறகாம் ஏத்துகிறோம் என்று எத்தனை தையை கடத்தியிருப்பார்கள.; தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் தமிழர்களுக்கு எந்த தையில் வழி பிறந்தது? மாடுகள் அடைபடும் பட்டி போல் அடைபட்டனர் அதுகும் காணாது என்று செத்;து தொலைத்தனர். விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல போரிலே மிதித்து மீள்குடியேற்ற பார்வையிலும் மிதித்து அன்றாட உணவுக்கு தவிர்க்கும் தமிழனுக்கு அடைக்கலம் கொடுக்க அரசாங்கம் இன்று காலம் தாழ்த்துவது ஏன்? செய்த பிழையிலிருந்து தப்புவதற்கு உலக தலைவர்களிடம் கையேந்தி நிற்கும் அரசு அன்றாட தேவைகளுக்காக உழலும் மக்களுக்காக கையேந்த வெக்கப்படுவது நியாயமோ?
போன உயிர்களையும் பணத்தையும் பொருளையும் மக்கள் கேட்க வில்லை மாறாக தமது நிலத்திலே விட்டால் போது என்பதே இவர்களின் மன்றாட்டாகவுள்ளது. விடிய விடிய இராமர் கதை விடிந்தால் பிறகு இராமன் சீதைக்கு என்ன முறை என்று கேட்கும் வகையில் அரசு தன்னை மளுப்பிக் கொள்ளுகிறது. எமது நிலத்தில் பல சீரும் வீரர் செத்து மடிந்தாலும் சிங்களவனிடத்தில் தனியாது ஆத்திரம் அப்பாவி மக்கள் வேண்டுமானால் ஏந்தாலாம் பிச்சைப் பாத்திரம். எத்தனை துயர் வரினும் சொந்த நிலத்தில் கால் பதிப்போம் என்பதே வீரத்; தமிழனின் காதாபாத்திரம்.



மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply