Friday, January 13, 2012

கொழும்பு பயணமும் எனது அனுபவமும்

0 comments
கொழும்பு பயணமும் எனது அனுபவமும்

நீண்ட தூர இரவுப்பயணம் மறுநாள் அலுப்பு, நித்திரைத்துக்கம், சோம்பல் இருந்தும் பாராளுமன்றத்தினை சென்று பார்தமை சிரமமாக இருந்தது. இருப்பினும் பலருடன் பம்பலக சென்ற போது ஆலப்பு, நித்திரை, சோம்பல் எல்லம் இருந்த இடம்  தெரியாமல் பறந்து விட்டது. பலருடன் கூடி பம்பலகச் சென்றமை உடலுக்கும், மனதுக்கும் புது ஆரோக்கியத்தினை கொடுத்தது.
சகோதர இனத்தவர்களுடன் பழகும் போது மொழி ஒரு பெரும் சவால என்முன்னே வந்து நின்றது அவர்கள் கேட்பது எனக்கு விளங்கவில்லை.


அப்படி ஒரளவு விளங்கினாலும் என்க்கு பதில் சொல்லத் தெரியவில்லை இந்த நிலையில் அவர்களுடன் எனது தொடர்பினை நேர்த்தியான முறையில் செயற்பட முடியவில்;லை இருப்பினும் இருமொழி தெரிந்த தமிழ் நண்பர்க்ள மூலம் அந்த சவாலினை ஓரளவுக்கு என்னால் சமாளிக்க முடிந்தது.

ஒர் உள்ளக பயிற்சியின் போது ஒருகட்டுப்பாடு, ஒழுங்கு பாடுத்தலுக்குள் என்னை ஈடுபடுத்திக் கொள்வது பெரும் சிரமமாக இருந்தது காலை 07.30 தயாராக வேண்டும். இரவு நாட்குறிப்பு எழுத வேண்டும். அனுபவம் சொல்ல வேண்டும். எங்கு செல்வது என்றாலும் முற்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என ஒரு கட்டுக் கோப்புக்குள் இருப்பது சிரமமாக அமைந்தது. இருப்பினும் எமக்கு பொறுப்பானவர்களின் பொறுப்புனர்வும், அன்புக்கட்டளையும் கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்ற ஓர் கட்டுப்பாட்டுப்பாட்டினை எனக்கே நானே போட்டுக்கொண்டேன்.

பகல் முழுவதும் இடங்களை பார்க்க சுற்றித்திரிவது பெரும் இன்பமாக இருந்தது. இரவு வருகின்றது என்றாள் பொரும் துன்பச்சமையாக இருந்தது எனென்றால் இருவில் தான் எமக்கான பணிகள் அதிகம். இருப்பினும் அவற்றினையும் செய்து முடித்தோம்.

கொட்டல் சாப்பாடு சாப்பிடும் போது எனக்கு பசியடங்கவில்லை இருந்தும். ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக சாப்பிட வேண்டும் எனற கட்டயத்;த்தின் காரணத்தால் சாப்பிட்டேன்.

இவ் உள்ளக பயிற்சியின் போது சில மாணவர்களின் செயற்பாடுகள் எனக்கு அத்திரம்முட்டுவனவாகவும், கோபத்தினை ஏற்படுத்துவதாகவும், இருந்தது. இருப்பினும் ஒற்றுமையாக எல்லா இடமும் செல்ல வேண்டும் என்ற காரணத்தால் பொறுமையாக இருந்தேன்.

இயக்குநரால் 07.30 மணிக்கு ஆயுத்தமாகி வரும்படி பணிக்கப்பட்டிருந்த போதும். சிலர் பிந்தி வருவது எரிச்சலை ஏற்படுத்தியது. இருப்பினும் அவர்களையும் அழைத்து செல்ல வேண்டும் என்ற காரணத்தால்; சமாளித்து நடந்துகொள்ள வேண்டியது ஆயிற்று.

பெரிய கொட்டலுக்கு சென்று சாப்பிடும்போது ஒரு வகையான பயமாகவும், கூஞ்சமாகவும் இருந்தது. எல்லோருடனும் இனைந்து சென்ற காரணத்தால் சாதாரணமாக உணவினை உண்னமுடிந்தது.

  நித்திரை ஒரு பெரும் சவாலாக அமைந்தது அதாவது இரவில் சிறிது நேரம் நித்திரை கொள்வதால் நாம் சென்று இடங்களில் சில விரிவுரைகளில் கலந்து கொள்ளும் போது நித்திரை கண்னை பறிக்கும் ஆனால் ஒரு விரிவுரையிலும் நான் நித்திரை கொள்ளாமல் அந்த விரிவுரைகளில்  திறம்பட என்னால் பங்குபற்ற முடிந்தது. என்றால் நித்திரை வரும் போது நித்திரை கொள்லாமல் விரிவுரைகளில் கவனம் செலுத்த வேண்டும். என என்மனதுக்கு கட்டளை இடுவேன்.



ஆக்கம்- கணேசதாசன்

மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply