யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் முழுநேர நான்காம் அணி மாணவர்களாகிய நாம் உள்ளகப் பயிற்சிக்காக கொழும்பு சென்றிருந்தோம்.
செல்லும் நாளுக்கு ஒரு வாரத்திற்க்கு முதலே ஆயத்தங்கள் செய்யத் தொடங்கிவிட்டோம். கொண்டு செல்லும் பொருட்கள்;, யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு?, பண விடயம், உணவு ஏற்பாடு என சகல விடயங்களும் செல்வதற்க்கு இரு நாட்களிற்க்கு முதல் இடம்பெற்ற கூட்டத்தில் பேசப்பட்டது.
செப்ரெம்பர் மாதம் 6ஆம் திகதி.அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் மாணவர்கள் அனைவரும் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் ஒன்றாகினோம். .எம்மை வழியனுப்பி வைப்பதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பேராசிரியர் ஞானகுமாரன் அவர்கள் வந்திருந்தார்.
இரவு 7.30 மணியளவில் யாழிலிருந்து கொழும்பை நோக்கிப் புறப்பட்டோம் செப்ரெம்பர் 07 கொழும்பில் கண்விழித்தோம். எமக்கென பதிவுசெய்யப்பட்ட கொழும்பு தழிழ்ச்சங்க விடுதியினுள் சென்றோம்.
காலை 8.00 மணிக்கு பாராளுமன்றம் செல்ல வேண்டும் எனவே எல்லோரும் சீக்கிரமாக தயாராகுங்கள் என்று எமக்கு அறிவுறுத்தப்பட்டது. தூக்கமோ எம் கண்களை துரத்திக் கொண்டு இருந்தது. ஆனாலும் 8.00 மணியளவில் எல்லோரும் வாகனத்தில் ஏறினோம்.
முதல்முறையாக பாராளுமன்றம் சென்றதை இன்றும் மறக்கமுடியவில்லை. வாகனத்தில் சில மணிநேரம் பயணம் செய்து பாராளுமன்றத்தை அடைந்தோம். பின்பு அறிவுரைகள் எமக்கு வழங்கப்பட்டன. அவற்றில் பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் இடத்தில் காலுக்கு மேல் கால் போடக் கூடாது, கதைக்கக்கூடாது, அத்துடன் விட தலையில் அணிந்திருந்த “கிளிப்” கழற்ற வேண்டும் என்றார்கள். இவற்றை முடித்துக்கொண்டு சற்றே உள்நுழைந்தால் நான்கு இடங்களில் பொலிஸாரின் உடற்சோதனை. எல்லாவற்றையும் எதிர்கொண்டு கூட்டம் இடம்பெறும் கூடத்தினை அடைந்தோம். அங்கு பாராளுமன்றம் தொடர்பான சகல விடயங்களையும் அறிந்து கொண்டோம்.
மறுநாள் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிற்கு சென்றோம். அங்கு நடை பெற்ற மாநாட்டின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அதே நாளில் மாலை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. யாழ் பல்கலைகழக மாணவர்கள் தொடர்பாக சில தவறான செய்திகளை முன் வைத்தார்.
கொழும்பு இதழியல் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து “போருக்குப் பின்னரும் முன்னருமான செய்தி சேகரிப்பின் தன்மை”என்ற தலைப்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றியமை மற்றுமொரு சிறந்த அனுபவமாகும். சிங்கள,ஆங்கில ஊடக மாணவர்களையும் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. பின்;பு அவர்களுடன் இணைந்து நட்பு ரீதியான பல விளையாட்டுச் நிகழ்வுகளில் ஈடுபட்டோம்.
பழமை பொருந்திய வரலாற்று சின்னங்களை பார்வையிட கொழும்பு நூதன சாலைக்கு சென்றோம். அங்கிருந்த வரலாற்றுச் சான்றுகளான .பண்டைய காலத்து நாணயங்கள், மன்னர்கள் அணிந்த ஆபரணங்கள், ஒவியங்கள், உடைகள், ஆயுதங்கள், பாவித்த வேறு பல பொருட்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு காலத்து சின்னங்கயையும் தனித்தனிப்பகுதிகளாக பார்ப்பதற்கு இலகுவான வகையில் காட்சிப்படுத்தி இருந்தனர்.
அதன் பிறகு களனிப் பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவர்களால் நடாத்தப்பட்ட கண் காட்சியை பார்க்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. அது மட்டுமின்றி அப்பல்கலைக்கழக சிரேஸ்ட உதவிப் பதிவாளர் றெஜினோல்ட் அவர்களை நேர்காணும் வாய்ப்பு கிடைத்தது. இக் கண்காட்சியில் புலனாய்வு செய்திக்கான படப்பிடிப்பு பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமன்றி பல பயன் தரக்கூடிய விடயங்களை நாம் பார்வையிட்டது மறக்க முடியாதது.
முதற்தடவையாக மகாராஜா கூட்டுத்தாபனத்தை பார்வையிட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேறள கசைளவ் செய்தியறையின் நிர்வகிப்பினைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அதுமட்டுமன்றி சக்தி வு.ஏஇ ஆ.வு.ஏ ருபவாஹினி கலையகங்களை நேரடியாக பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ளுpநடட அயளவநச எனும் ஆ.வு.ஏ நிகழ்ச்சியின் ஒளிப்பதிவினை நேரடியாகக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது நானும் எனது நண்பியும் குளிரால் நடுங்கியது இன்றும் மறக்க முடியாதது. குளிர் தாங்க முடியாமல் இருவரும் நிகழ்ச்சி முடிவதற்கு முன்னமே வெளியில் வந்துவிட்டோம். பின்பு எம்முடன் வந்தவர்கள் வேறு நிகழ்ச்சியை பார்வையிட சென்றுவிட்டனர். நாம் அவர்களுடன் சென்று இணைந்து கொள்ள முடியாமல் அங்கேயே சுற்றிக் கொண்டு நின்றபோது அங்கு நின்ற ஒருவருடன் உரையாடி அவரின் உதவியுடன் சாம் சென்ற உதவியுடன் எம் குழுவை சென்றடைந்தோம். இன்றும் நாம் இதை சொல்லி சிரித்துக் கொள்வோம்.
“டுயமந hழரளந” வீரகேசரி போன்ற பத்திரிகை நிறுவனங்களுக்கு சென்றோம். பத்திரிகை அச்சிடல் விநியோகம் தொடர்பாக மேலதிக அறிவினைப் பெற முடிந்தது. இவ் ஊடகப்ப பயணம் வாழ்கையில் சிறந்ததொரு அனுபவத்தை பெற்றுத் தந்தது.
டூ
மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...