Thursday, January 12, 2012

தெல்லிப்பளை பிரதேசத்தில் வெடிக்காத நிலையில் உள்ள மிதிவெடி.

0 comments



யாழ்ப்பாணத்தில் இருந்து 08கிலோமீற்றர் தொலைவில் அமைந்து உள்ளது தெல்லிப்பளை. வரலாற்று சிறப்புமிக்க வழிபாட்டுத்தலத்தை தன்னகக்தே கொண்டுள்ளது. தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயம். பிரதான வைத்தியசாலை என்பவற்றை உள்ளடக்கியதாக தெல்லிப்பளை பிரதேசம் விளங்குகின்றது. இங்கு பல பிரதேசங்களில் இன்னும் மிதிவெடிகள் அகற்றப்படாமல் உள்ளது. இப்பொழுது துரிதகதியில் மிதிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை பிரதேசத்தில் யுத்த காலத்தில் புதைக்;கப்பட்ட கண்ணி வெடிகள் மீள்குடியேற்றத்திற்காக அகற்றப்பட்டு வருகின்றன. கடந்த 20 வருட யுத்தத்தின் பின்னர் இப்போது தெல்லிப்பளை பிரேதேசத்திலே மக்களை மீள்குடியேற்றுவதற்காக விடப்பபட்டுள்ளனர். இந்தப்பிரதேசம் கடந்த 20 வருடங்களாக ராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அந்த வேளை ராணுவத்தினர் தமது பாதுகாப்பிற்காக அவர்களால் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் இப்போது டென்மார்க் கண்ணி வெடி அகற்றும் பிரிவினரால் அரச அனுமதியுடன் மக்களின் மீள் குடியேற்றத்திற்காக அகற்றப்பட்டு வருகிறது. இதிலே அகற்றப்பட்ட கண்ணி வெடிகள் எவ.; எம். Nஐ, பரட்கோயில், ஸ்ருன்கிராண்டர் ஆகிய கண்ணி வெடிகள் மீட்கப்பட்டன. ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தை அண்டி உட்பட்ட பிரதேசத்திற்கு நாம் பார்வையிட்ட போது இந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் 85 ஊழியர்கள் தமது பணியினை மேற்கொண்டனர்.





மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply