Friday, January 13, 2012

மாவிட்டபுர மக்களின் மீள்குடியேற்றம்…

0 comments
புனித புமியான மாவிட்டபுரத்தில் பல வருடங்களுக்கு பின்பு மக்கள் மீள்குடியேற்றப்படுகின்றனர். இருந்த போதும் அவர்கள் வாழக்கூடிய சூழலாக அவர்களது இடம் இல்லை. வாழக் கூடிய நிலை இல்லாத போதும் தமது சொந்த இடத்தில் குடியேறும் மகிழ்ச்சியிலே இங்கு வாழ ஆரம்பிக்கின்றனர். தாம் வாழ்ந்த இடம் இப்படி இருப்பதை பார்த்து விரக்தியடைந்துள்ளனர்.

 21 வருடங்களாக வாடகை வீட்டில் இருந்து தமது உழைப்பின் முக்கால்வாசிப்பங்கினை வாடகைக்கு  கொடுத்து முடித்து மிகுதியை தமது செலவிற்கு பயன்படுத்தி மிச்சம் இல்லாமல் வாழும் பல குடும்பங்கள் தமது சொந்த வீடுகளை திருத்தமுடியாமல் அரசாங்கத்தினையே நம்பி இருக்கின்றனர் ஆனால் அரசாங்கம் வீட்டுத்திட்டம் தருகிறோம் வீடு திருத்தித்தருகின்றோம் என வாய்ச்சொல்லினால் சொல்லுகின்றார்களே தவிர அந்த உதவி ஒன்றுகூட எங்களை வந்தடையவில்லை என மக்கள் தெரிவித்தனர் .நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு மின்சாரம் தேவை ஆனால் மீள்குடியேற்றப்பட்டு மூன்று மாதங்களாகியும் மின்சாரம் வழங்கப்படவில்லை  இதனால் மக்கள் இரவில் நடமாட முடியாமல் தவிக்கின்றனர




தெல்லிப்பழையில் தனது வெறும் காணியில் குடிசை வீடு போடுவதற்காக தகரத்தினை பெற வந்திருந்த    வைரமுத்து அன்னலட்சுமி வயது 70 என்பவரை நோர்கானல் செய்த போது
“நான் இப்ப அளவெட்டியில் இருக்கிறன.; என்னுடைய கணவர் 1993ல் இறந்துவிட்டார். நானும் எனது உடல்நலமற்ற மகன் மகாலிங்கமும் தான் இருக்கிறோம் மகனால் வேலைக்கு போகமுடியாது எங்களுக்கு கிடைக்கும் ஒரே ஒரு வருமானம் அரசாங்க உதவிப்பணமான 150 ரூபாய் தான் இதைக்கொண்டு என்னவாங்கமுடியும் சிலவேளைகளில் எனது மகள் பண உதவி செய்வாள் நாங்கள் அளவெட்டியில் ஒரு இடிந்தவீட்டில் வசிக்கின்றோம் இப்ப எங்களுடைய இடம் விட்டதால எனக்கு இங்கை இருக்கின்ற வெறும் காணிக்குள் சிறு குடிசைபோட்டு வசிப்பதற்கு  கிராம அதிகாரியிடம் தகரம்கேட்டு கவலையுடன்  காத்திருக்கும் மூதாட்டி.


தம்பையா கனகரத்தினம் வயது55 இவர் தெரிவிக்கையில்நாங்கள் எங்கட இடத்தை விட்டுச்சென்று தற்போது 21வருடங்கள் ஆகிவிட்டது இப்பொழுதுதான் மீள்குடியேறியுள்ளோம் எமக்கு எங்கள் சொந்த இடத்திற்கு வந்தது சந்தோசமாக இருக்கின்றது .


எங்கள் வீடு இடம்பெயர்வதற்கு 1மாதத்திற்கு முன்தான் புதிதாகக்கட்டி குடிபுகுந்தோம் இப்பொழுது எங்கள் வீடு தரைமட்டமாகிவிட்டது . இனி எம்மால் ஒரு புதிய வீடு கட்டமுடியாது அவ்வளவிற்கு எமக்கு வசதி இல்லை நான் மேசன் வேலை செய்துதான் எனது குடும்பத்தை காப்பாற்றுகின்றேன். நாங்கள் இடம்பெயர்;ந்த நாளில் இருந்து வாடகை வீட்டில்தான் வசித்து வருகின்றோம். .எனது வருமானத்தை நம்பியே எனது குடும்பம் இருப்பதனால் எனது பிள்ளைகளின் கல்விக்கும், வாடகைக்கும் .எமது குடும்ப செலவிற்கும் ஏற்றதாக இல்லை இதில் எம்மிடம் சேத்துவைத்த பணமும் இல்லை இதனால் எங்களால் வீடுகட்டமுடியாது அரசாங்கம் வீடுகட்டித்தந்தால்தான் எம்மால் இங்கு வரமுடியும் தற்போது எமக்குவீட்டுத்திட்டம் கிடைத்தள்ளது அந்த வீடு கட்டி முடித்தால்தான்.  நம்பிக்கையற்ற வாழ்க்கையை வாழ்கின்றனர்.



ஆக்கம்-சுகிர்தினி


மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply