Thursday, January 12, 2012

யாழ்ப்பாணத்தில் பனைவளம்

0 comments




இலங்கையில் வடபகுதியான யாழ் மண்ணில் பனையானது 40000 குடும்பத்திற்கு முழுமையான வருமானத்தைத் தருகின்றது. இதற்கு முக்கிய காரணம் யாழ்ப்பாண மக்களின் பண்பாட்டிலும் வாழ்விலும் உணவிலும் பனையானது முக்கிய இடத்தினை வகித்து வருவதாக உள்ளது.மேலும் இப்பனை மேம்பாட்டிற்காக பனை அபிவிருத்திசபை எனும் சபையினை நிறுவி பனந்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் கூட்டுறவு அமைப்பில் இயங்கி தங்கள் தொழிலை மேம்படுத்தி வருகின்றனர்.





இந்நிலை காணப்படும் போதிலும் பனையானது தற்காலத்தில் யுத்ததினாலும் காவலரன்கள் அமைப்பதற்காகவும் வியாபாரத்திற்காகவும் குடியேற்றத்திட்டங்களுக்காகவும் தற்போது அரசின் வீதி அகலிப்புத்திட்டத்தினாலும் புதிய கட்டிட நிர்மானகளின் இடங்களிற்காகவும் மற்றும் விறகு போன்ற பல காரணங்களிற்காக அழிக்கப்பட்டு வருகின்றது. இத்தகைய செயற்பாடுகள் அனைத்தும் பனையை நம்பிவாழும் குடும்பங்களை பாதிப்பதாகவே அமைகின்றது.







இத்தகைய சூழ்நிலை காணப்படுகின்றபோது அரசு தற்போது 2000 பனைகளை அழிப்பதற்கான உத்தரவை விடுத்துள்ளமை சிந்திக்கத்தக்கதாக அமைந்துள்ளது. எனினும் எதிர்காலத்தில் வருடம் ஒன்றிற்கு மூன்று லட்சம் நாற்றுகளை நடுவதாக அரசு அறிவித்துள்ளது.
இதுவரை காலமும் பயன்தந்த மரங்களை அழித்து புதிதாக நாற்றுகளை நடும் போதிலும் அவற்றிலிருந்து பயன்பெற பல வருடகாலங்களாகும். என்பதை உணர்ந்து பயன்தரும் பனைமரங்கள் அழிவடைவதனை அனைத்துத் தரப்பினரும் கூடியளவு தடுக்க வழிகளை மேற்கொள்ள வேண்டும்.




இத்தகைய நிலையில் பனைவளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 1978ம் ஆண்டில் பனை அபிவிருத்தி சபை உருவாக்கப்பட்டது. இச் சபை மூலம் பனைசார் உணவுற்பத்தி மற்றும் பனைசார்கைவினைப் பொருள் உற்பத்தி என்ற அடிப்படையில் பணிகள் இடம் பெற்று வருகின்றது. இதற்காக 800 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வுற்பத்தியாளர்களிற்காக “சிறுசுவடி:” எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.











சிறுசுவடி அமைப்பு


சிறுசுவடியானது பயிற்ச்சி பெற்ற உற்பத்தியாளர்கள் உதிராகளாக இருப்பதை தவிர்த்து அவர்களை ஒன்றினைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இவ் அமைப்பில் இந்தவருடம் 2000 பேர் இணைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இது வரை 800 பேர் இணைக்கப்பட்டுள்ளனர் என்பது முக்கிய அம்சமாகும்.
இது தொடர்பாக யாழ் மாவட்ட பனை அபிவிருத்தி சபைத்தலைவர் பசுபதி சீவரத்தினம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்:-
“இலங்கையில் இதுவரை இடம் பெற்ற யுத்தத்தின் காரனமாக வடக்கில் போதியளவு பொருளாதார வளர்ச்சி இடம் பெறவில்லை. தற்காலத்தில் வளர்ச்சியை ஓரளவு காணக்கூடியதாக உள்ளது எனினும் உற்பத்தி போதாததாக உள்ளது. உற்பத்தியாளர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் உற்பத்தி தரம் உயர்த்தப்பட வேண்டும். அத்துடன் பனை சார்ந்த ஆரச்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பனை அபிவிருத்தி மையத்தின் செயற்பாடிற்காக இந்திய அரசு 75மில்லியன் ரூபாவினையும் இலங்கை அரசு கட்டட நிர்மானத்திற்காக 24மில்லியன் ரூபாவினையும் தந்துதவியுள்ளது” என்று கூறினார்.


பனைசார் உற்பத்தி
பனைசார் உற்பத்தி என்பதனுள் பல்வேறு வகையான உணவுப்பதாத்தங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவையாவன:-
1.  பனங்களி
2.  சோடா
3.  புழுக்கொடியல்
4.  ஓடியல் மா
5.  பனாட்டு
6.  பாம்போஷா
7.  பனங்கட்டி
8.  ஜாம்
9.  Cordiyal






இவை அனைத்தும் பனை அபிவிருத்திச்சபையின் “கற்பகம”; என்ற நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன. இக்கற்பகமானது யாழ்ப்பாணத்தில் ஆறு கிளைகளை கொண்டுள்ளது. அவை
1.  நல்லூர்
2.  யாழ் பஸ்தரிப்பிடம்
3.  சுன்னாகம்
4.  யாழ்.கண்டிவீதி
5.  K.K.S road
6.  நெல்லியடி
    போன்றவையாகும்.

இதுதொடர்பாக உணவுசார் உற்பத்தி விற்பனை உதவியாளரும் கண்டிவீதி கற்பகத்தின் நிலைய பொறுப்பதிகாரியுமான திரு.ளு.செல்வநாயகம் கருத்து தெரிவிக்கையில்:-
   “நாம் இந்த உணவுற்பத்திகளை சிறப்பாக நடாத்தி வருகின்றோம். இருந்தும் காலத்திற்கேற்ப மூலப்பொருட்கள் கிடைப்பது எமக்கு பாரிய பிரச்சனையாக அமைந்துள்ளது. சிலசமயங்களில் மூலப்பொருட்கள் கொள்வனவு செய்வதற்கான காலம் தாமதமாகின்றது. இது எமக்கு பொரும் சவாலாக அமைந்துள்ளது. அதுமட்டுமன்றி இவற்றை தென்னிலங்கை மக்கள் அதிகளவில் கொள்வனவு செய்கின்றனர்”
எனக்கூறினார்.

பனைசார் கைவினைப்பொருட்கள்

இக்கைவினைப் பொருள் உற்பத்தியினுள் பனந்தும்புத் தொழில் கைப்பணித் தொழில் பொதி செய்யும் பெட்டிகள் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி என்பன அடங்குகின்றன. இத்தகைய தொழிற்பாடிற்கு மூலப்பொருட்களாக திகழ்வது பனை ஓலை குருத்தொலை சார்வு ஓலை ஈர்க்கு நார் போன்றவையாகும். இவ் உற்பத்தியினுள் பெட்டி கடகம் சுளகு அழகுப்பெட்டிகள் நீத்துப்பெட்டி தட்டுப்பெட்டி கழிவுக்கடதாசி கூடை அழுக்கு உடுப்புக்கூடை அத்துடன் அலங்காரப்பொருட்களாக பூக்கள் பூக்கூடை போன்றன அடங்குகின்றன இவற்றை உள்நாட்டு மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டு பிரஜைகளும் அதிகம் விரும்புகின்றனர்.






 இதுதொடர்பாக பனைசார் வடிவமைப்பாளரும் விரிவாக்கப்பகுதியின் முகாமைத்துவ உதவியாளருமான பவாணி தங்கதுரை அவர்கள் கருத்து தெரிவிக்கையில் :-
  இத்துரைக்காக முதற்கட்டமாக பயிற்சிபெற்ற  25பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் எதிர்காரத்தில் பலர் தெரிவுசெய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. தற்போது இது தொழிலாளர்களின் கைகளால் செய்யப்படுகின்றத.எனவே இதனை இயந்திர மயமாக்கினால் இங்கு பணிபுhழயும் தொழிலாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் அத்துடன் ஏற்றுமதி தொடர்பான வாய்பொன்றும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
கைவினைப் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் பெண்ணொருவர் கூறுகையில் நான் இத்துரைக்கு தொழிலில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாகவே வந்தேன். இது வருமாணம் பெறுவதற்கான ஒருவழியாக அமைந்துள்ளது. இதன்மூலம் வாழ்வாதாரம் சிறப்பாக அமைந்துள்ளது. எனினும் தற்போது செய்யும் பொருட்களுக்கே வருமாணம் கிடைக்கின்றது. இதனை நிரந்தர ஊதியமாக்கினால் தொழிராளர்களாகிய எமக்கு நன்மை கிடைக்கும். இருப்பினும் வேலைவாய்பு அற்ரிருந்த எம்மை ஓருகைவினை தொழிலாளர்களாக பணிக்கமர்த்தியமைக்காக நன்றி கூறுகின்றோம்.
பனையின் சட்டப்பாதுகாப்பு
1971ம் ஆண்டின் 46ம் இலக்க தென்னை அபிவிருத்தி சட்டத்திற்கு செய்த திருத்தத்தின்மூலம் 1975ம் ஆண்டு 24ம் இலக்க திருத்தம் மூலமாக பனை அபிவிருத்திச்சபை சட்ட ரீதியாக உருவாக்கப்பட்டது. இதில் கூறப்பட்ட சட்ட வாக்கங்கள் பனையையும் பனம் தொழிலையும் பாதுகாத்து அதன் மேம்பாட்டிற்காக பாடுபடுவதாக குறிப்பிடுகின்றது. அவற்றில் சில வருமாறு:-
¨       புனை சம்மந்தமான புதியவிதமான ஆராச்சிகளை அதன் வளர்ச்சி முறையிலும் வளர்ப்புமுறையிலும் அறிமுகப்படுத்தல்.
¨       இதன்நோக்கத்திற்காக ஆராச்சி நிறுவனம் ஒன்றை நிறுவுதலும் நடாத்துதலும் நாற்று மேடைகளை அமைத்தலும் நடாத்துதலும்.
¨       ஊற்பத்தி சம்மந்நமான ஆராச்சிகளை செய்தலும் பரிசோதனை மற்றும் உற்பத்தி செய்தலும்.
¨       நோய்களை பூச்சிகளை கட்டுப்படு:த்தலும்.
இவ்வாறான இன்னும் பல நன்மை பயக்கும் திட்டங்கள் இச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பனை தறித்தலை கட்டுப்படுத்தம் சட்டம்


25.10.1993ம் திகதி L.D.B.6/5211    இலக்கம் கொண்ட வர்த்தகமாணி அறிவித்தலில் பனையினை அனுமதி இல்லாமல் வெட்டுவதை தடுக்கின்றது. இவ்வறிவித்தல் விவசாய அபிவிருத்தி சபையினால் கட்டலையாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆக்கம் - ஜெ.மறீன் தர்மிலா
                   சி.சுஜிதா
                   யோ.தட்சா








மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply