வடமராட்சி நாகர்கோயில் பகுதில் 12 வருடங்களுக்குப் பின்னர் மக்கள் கடந்த வருடம் குடியேறியேற்றப்பட்டுள்ளார்கள். ஆனால் எதுவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில்த் தான் தமது சொந்த நிலத்தில் இந்த மக்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்கள்.
பருத்தித்துறை – ஆழியவளை பிரதான வீதியில் இருந்து 2மஅ உள்ளே செல்ல வேண்டும். மீள்குடியேற்றப் பிரதேசத்தை அடைவதற்கு மக்களின் பாவனைக்கு உகந்த வீதி. வீதியின் இரு மருங்கும் போரினால் பாதிக்கப்பட்டு உடைந்த வீடுகள் அவற்றினைச் செப்பனிடும் உரிமையாளர்கள்.மரங்கள் பற்றைகள் உள்ளே செல்ல ஆங்காங்கே தகரத்தால் ஆன சிறிய சிறிய வீடுகள் இவைதான் மீளக்குடியமர்ந்தவர்களின் இருப்பிடங்கள். இடிந்த நிலையில் ஆலயம் ஒன்றும் காணப்படுகிறது. அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத நிலையில் இங்கு உள்ள மக்கள் வாழுகின்றனர்.
குடி நீர் வசதியும் இல்லை நாகர்கோயிலுக்குச் சென்றதான் குடி நீர் எடுத்துச் செல்கிறார்கள். முன்னர் தண்ணீர் தாங்கி கொண்டுவந்து வைத்து அதற்குள் நீர் நிரப்பி விட்டார்கள். இப்போது அவர்களே தமக்குத் தேவையான நீரினை நீண்ட தூரத்துக்குச் சென்று பெறவேண்டி உள்ளது. ஆங்காங்கே அந்த வெற்று தண்ணீர் தாங்கிளைக் காணக் கூடியதாக உள்ளது.
இவர்கள் தமக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும். இவர்களின் குடியிருப்பு பகுதியில் சிறிய அளவிலான ஒரு கடை உண்டு. ஆனால் இங்கு எல்லாப் பொருட்களையும் பெற்றுக் கொள்ள முடியாது.
இங்கு இருப்பவர்களின் பிரதான தொழில் மீன்பிடி ஆனாலும் இவர்களை எல்லாப் பகுதிகளுக்கும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படவில்லை. காரணம் மிதிவெடி அகற்றும் பணி இன்னும் முற்றாக நிறைவேறவில்லை. இவர்களை நாகர்கோயில் கிழக்குப் பகுதிக்கு மீன்பிடிக்க அனுமதிக்கவில்லை.ஆனால் அங்கேதான் நிறைய மீன்கள் பிடிபடும் என மீனவரான இமானுவேல் தெரிவித்தார்.
கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாமையில் மழைக்கு கண்ணிவெடிகள் மிதந்து வருவதாகவும் அவ்வாறான கண்ணிவெடிகளைக் கண்டால் கண்ணிவெடிகள் அகற்றும் நிறுவனங்களிடம் சொல்லி அகற்றுவதாகவும் மேலும் தெரிவித்தார்.
இங்குள்ள மாணவர்களுக்கான பாடசாலை 9 மாணவர்களுடனும் ஒரு ஆசிரியருடனும் இயங்கி வருகின்றது. மாணவர்கள் வௌ;வேறு தரத்தில் கல்வி கற்பவர்கள். ஆனால் ஒரு ஆசிரியர் கல்விகற்ப்பிப்பதாகவும் இவ்வாறு ஒரு ஆசிரியர் இருப்பதால் சில பெற்றோர் தம் பிள்ளைகளை பாடசாலைக்கு விடுவதில்லை எனவும் தெரிவிக்கின்றார் இக்கிராம வாசி ஒருவர்.
மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...