Friday, January 13, 2012

கடலில் இருந்து ஒரு கதை…

0 comments

யாழ்ப்பாண மாவட்டம் சாவகச்சேரி பிரதேசத்தின் கோவிற்குடியிருப்பு கிராமத்தில் வாழ்கின்ற கடற் தொழிலாளர்களின் செயற்பாடுகளை சொல்லும்  புகைப்படங்கள் இவை..

குடாக்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் கோவில் குடியிருப்பு மீனவர்கள் தமது தொழிலை சுதந்திரமாக செய்த வண்ணமிருந்தாலும் அண்மைக்காலங்களில் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
அப்பகுதி மீனவர்களின் கருத்தின் அடிப்படையில் பருவ மழை ஆரம்பித்துள்ள இக் காலப்பகுதியில் பெருமளவான மீன்களை தம்மால் பிடிக்ககூடியதாக இருக்கும். ஆனால் இந்த வருடம் அது பொய்த்துவிட்டது என்கின்றனர். பொதுவாகவே இக்காலப்பகுதியில் சுறா,திருக்கை மற்றும் பாரை ஆகிய மீன் வகைகள் எமக்கு பெருமளவில் கிடைக்கும். ஆனால் இப்போது மிக அரிதாகவே கிடைப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.





இது குறித்து கருத்து தெரிவித்த அப்பகுதியை சேர்ந்த மீனவரான த.ஜெகதீஸ், எங்களி;டம் இருக்கும் 30 க்கு மேற்பட்ட மீன்பிடி படகுகளில் நாங்கள் தினமும் மதியம் 01 மணிக்கு கடலுக்கு சென்று அங்கு வலைகளை வீசிவிட்டு இரவு முழுவதும் அங்கேயே தங்கி பின் மறுநாள் காலை 7 மணியளவில் மீன்களுடன் கரை திரும்புவோம். சராசரியாக எமக்கு 100 முடைழபசயஅ மீன்கள் கிடைக்கும். ஆனால் அண்மைகாலமாக 50-80முப மீன்களே கிடைத்து வருகின்றன. இதற்கு காரணமாக கேரதீவு பாலம் இருக்கலாம் என நாங்கள் நினைக்கின்றோம். பாலம் அமைக்கும் போது கடலிலுள் போடப்பட்ட கற்கள் இப்போதும் அப்படியே இருக்கின்றன. அதனால் பெருங்கடலுக்கும் இக்கடலுக்கும் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் வருகை குறைகின்றது என்றார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,
தாம் கரைக்கு கொண்டு வரும் மீன்களை கரையில் வைத்து தரகர் ஒருவரிடம் கொடுப்போம். அவர் அவற்றை சந்தைக்கு கொண்டு செல்வார். பின் வருமானத்தில் ஒரு பங்கை எமக்கு தருவார்கள். ஆனால் நாம் கொண்டு வந்த மீன்களுக்கு நாம் விலைகளை தீர்மானிப்பதில்லை. அதனை தீர்மானிக்க சந்தையில் ஒருவர் இருப்பார். இதனால் அடிக்கடி மீன்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுகின்றன. அத்துடன் சாவகச்சேரி மீன் சந்தை பொதுச்சந்தையாக மாற்றப்பட்ட பின் சந்தைக்கு நாம் கொண்டு செல்லும் மீன்களுடன் மன்னார், முல்லைத்தீவு, மருதங்கேணி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளின் மீன்களும் வருகின்றன. இதனால் எமக்கு பெரும் போட்டி இருக்கின்றது. ஆனால் மீன்கள் அதிகமாக வரும் போது விலைகளில் மாற்றங்கள் வருகின்றன. இது எமக்கு பெரும் சவாலாக அமைகின்றன.


சுமார் 2லட்சத்து 65,000 ருபா பெறுமதினான இயத்திரம் (நபெiநெ) , 50,000 ருபா பெறுமதியான படகு என்பவற்றை வட்டிக்கு கடன் பெற்று வாங்கி தொழிலுக்காக செல்லும் இம் மீனவர்கள் தினமும் 25 டவைநச மண்ணெண்ணையை இயந்திரத்திற்காக வாங்குகின்றனர். எனவே அதிகரித்துள்ள எரிபொருள் விலையேற்றமும் இவர்கள் எதிர்கொள்ளும் மற்றுமொரு சவாலாகும். தமக்கு கிடைக்கும் வருமானத்தின் பெரும் பகுதி எரிபொருள் செலவிற்கு சென்று விடுவதாக குறிப்பிடும் இம் மீனவர்கள் அண்மைக்காலமாக பெற்றுவரும் வருமானம் 2000 ருபாய்களாகும்…
 (18.11.2011)



மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply