யாழ்ப்பாண பருத்தித்துறை முனை கடற்கரையில் வலைகளில் இருந்து மீன்களை பிரித்தெடுக்கும் இப்பகுதியை சேர்ந்து மீனவர்கள்.
இலங்கையின் மீன்பிடிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரைகளில் பருத்தித்துறை கடற்பகுதியும் பிரதான பங்கினை வகிக்கின்றது. அத்துடன் வருவாயை ஈட்டித்தரும் முக்கிய துறைகளில் மீன்பிடித்துறை முக்கியமானதாகும். இப்பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் மீன்பிடியினையே தமது வாழ்வாதார தொழிலாக செய்து வருகின்றனர். போர் காலங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட இத் தொழிலானது இப்போது நிலவும் சாதகமான சூழ்நிலையால் மீனவர்கள் தமது வருமானத்தை அதிகளவிலாக பெற்று வருகின்றனர். இப்போது இவர்கள் ஆழ்கடலுக்கு சென்றும் மீன்பிடிக்க முடிகிறது. அதிக குதிரைவலுவுடைய இயந்திரங்களை பொருத்தி மீன்பிடிக்க அனுமதி கிடைத்துள்ளது. இவர்கள் பிடிக்கும் மீன்களை வெளிமாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடியதாக உள்ளதால் மீன்களுக்கான சந்தை வாய்ப்பு அதிகமாக உள்ளது. இத்துறைக்கு அரசாங்கமும், அரச சார்பற்ற நிறுவனங்களும் மானியங்களை வழங்கி ஊக்குவித்து வருகின்றது.
ஆக்கம்-கணேசதாசன்
மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...
Continue reading →