Wednesday, February 15, 2012

மறக்கமுடியாத இந்தியப்பயணம்

0 comments





எமது ஊடகப்பயணமானது இரண்டாவது தடவையாக தமிழ்நாட்டுப்பயணம். இந்த ஊடகப்பயணத்தில் இந்தியா சென்று யாழ்ப்பாணம் வரும் வரை பல அனுபவங்கள் தோன்றியுள்ளது. கொழும்புப்பயணத்தின் அனுபவப்பகிர்வு யாழ்ப்பாணம் வந்தும் மறப்பதற்கு ஒரு வாரம் சென்றது. இது தமிழகப்பயணமல்லவா? அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா? யாழில் இருந்து கொழும்பு செல்லும் போது சாதரணமாக இருந்தது. ஆனால் 12.30 மணியளவில் விமான நிலையத்தில் இறங்கி  இருந்த இடங்களில் சின்னத்தூக்கம் போட்டது இன்றும் மறக்கமுடியாதது  காலை 04.00 மணியளவில் விமானநிலையத்தினுள் நுழைந்தோம்.  சென்றதும் விமானமா? எத்தனைபதிவுகள், எத்தனை சோதனைகளின் பின்னர் அங்கு விமானத்திற்கு செல்வதற்கென பதிவுகளை செய்து விமானத்தில் பயணித்தது புது அனுபவம். காலை 08.30 மணிக்கு எமது கால் சென்னை விமானநிலையத்தில்  பதிந்தது. சிறுது ரேம் என் கண்கள் அங்கும் இங்கும் அலைந்து சென்றது.  அங்கிருந்து சென்னை சாந்தோம் தங்குமிடத்திற்கு சென்றோம்.  எல்லோரையும் ஒரு மணிநேரத்தின் பின்னர் ஓய்வு எடுத்து விட்டு வருமாறு பணிக்கப்பட்டோம்.  எனக்கு  ஒரு மணி நேரம் போதாது போல் இருந்தது. என்ன செய்வது குட்டித்தூக்கம்  போட்டோம். அதிகாலைச் சூரியனில் கடற்கரை மணல் மீது நின்று மெரினாவில் உடற்பயிற்சி செய்த அனுபவம் புதியது. காது இனிக்க கேட்க கடலலை ஓசை உடலில் படும் உப்புக்காற்று உற்சாக மூட்ட நண்பர்களோடு இணைந்து செயற்பட்டோம்.
முதல் நாள் சேரிப்புறங்களுக்கு களப்பயிற்சிக்காக செல்வதற்கான ஏற்பாடு சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நாமும் சென்றோம் சேரிக்கு சென்றது எனக்கு புதிய அனுபவம்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொலைபேசி கதைப்பது என்பது மிகவும் கஷ்ரமாக இருந்தது. அவ்வாறான நிலையில் மூன்று தொலைபேசியைக்கொண்டு நாளுக்கு மூன்று நாள் கதைப்போம். அதுவும் நாங்களாக எடுக்க முடியாது. அவங்கள் எடுத்தால் மட்டும் 05 நிமிடம் பேசுவோம். எல்லோரிடமும்  கொடுத்து வாங்குவது மிகவும் கடினமாக இருந்தது.
சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து நாம் தங்கியிருந்த இடம் வரை நண்பர்களோடு இணைந்து ஒரு நாள் நடந்தே சென்றோம் இது ஒரு அனுபவம்.
சென்னை பல்கலைக்கழக மாணவர்களுடன் இனைந்து சென்னையின் நகர் பகுதிகளிற்கு பயணம் செய்து அவர்களுடனும் எமது மாணவர்களுடனும் சேர்ந்து நான் சினிமாவில் பார்த்த இடங்களை நேரில் பார்த்தேன். சினிமாவில் இந்த இடங்களை பார்க்கும்  போது ஆசையாக இருக்கும். இது வரைக்கும்  இலங்கையில்  கூட பல இடங்களுக்கு செல்லவில்லை. வரலாற்று இடங்களை பார்வையிட்ட இடங்கள் ஒவ்வொன்றுமே மிகவும் பயனுள்ள இடங்களாக அமைந்ததோடு புதுப்புது இடங்களாகவும் புதிய அனுபவங்களையும் தந்தது. ஆனால் சென்றவுடன் சென்னை இதழியல் கல்லூரி மாணவியான தர்மினி அக்கா எங்களிடம் சுநிழசவ கேட்பா அதனால் பஸ் ஓட ஓட எழுதியது மறக்கமுடியதாதது.
இறுதி நாளன்று இந்தியாவை விட்டு இலங்கை வருவதற்கு தயாராகி சென்னை பல்கலைக்கழகத்தில் இறுதி ஒன்று கூடல் இடம்பெற்றது. அந்த ஒன்று கூடலின் முன்னரே எமது இயக்குணர் தே. தேவானந் சேர் கூறினார் இன்று எமக்கு இலங்கை செல்வதற்கு 03.00 மணிக்கு விமானம் பதியப்பட்டுள்ளது நாம் அனைவரும் 12.00 மணிக்கு விமான நிலயத்திற்கு செல்ல வேண்டும் அதற்கு முன்னர் நாம் இந்தியாவிலிருந்து இலங்கை செல்வதற்கான விமானப்பதிவுப்பத்திரத்தை எடுக்கவேண்டும் அதனால் நாம் எல்லோரும் 11.00 மணியளவில் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து புறப்பட்டு விட என்று கூறினார்.
பழகினர்வர்களை பிரிவது என்பது எல்லோருக்குமே கஷ்டம் தான். அன்று எல்லோருமே பயணத்தை மறந்து தாம் பழகிய உறவுகளுடன் கூடிக்கதைப்பதுவும் தமது குறிப்புத்தகத்தில் ஓட்டோகிறாப் வாங்குவதுமாக நின்றதனால் ( நானும் தான் ) நாம் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து மீளப்பதிவு அலுவலகத்திற்கு செல்லும் நேரம் சென்று விட்டது. ஒரு வாறாக படிவங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட்டு 01..30 மணியளவில் அலுவலகத்தில் இருந்து இந்திய விமான நிலயத்திற்கு செல்ல புறப்பட்டு அங்கு 02.05 மணிக்கு போய் சேர்ந்தோம். சென்னைப்பல்கலைக்ழக மாணவர்கள் எம்முடன் கூடவே வந்து அனுப்பி வைத்தார்கள்.
அங்கு எமக்காக விமான நிலைய ஊழியர்களும் அவசர அவசரமாக எம்மை சோதனை செய்து உள்ளே அனுப்பினார்கள் உள்ளே அவசர அவசரமாக எமது பரிவுகளை மேற்;கொண்டார்கள். அந்த வேளை எனது பொதிப்பை பிரிந்து விட்டது. அதற்குள் இவ்வாறு ஆகிவிட்டதே என்று நான் மிகவும் வேதனைப்பட்டு 250.00 ரூபா செலுத்தி பதிவுகளை மேற்கொண்டேன். அந்த நிகழ்வு பற்றி நான் வீடு சென்றும் எல்லோருக்கும் சொல்லியது மறக்கமடியாதது.  எல்லாருமே பதிவுகளை முடித்து விட்டு  ஒரு வாறு விமானத்தினுள் ஏறிக்கொண்டோம்.  நாங்கள் சென்னை செல்லும் போது காதுகள் எல்லாம் அடைத்தன. ஆனால் இலங்கைக்கு வந்த சந்தோசத்தில் விமானப்பயணம் மாணவர்களுடன் சந்தோசமாக கழிந்தது. 04.30 மணிக்கு இலங்கை விமானநிலையத்தில் இறங்கினோம். ஆனால் யாழ்ப்பாணம் வருவதற்கு பஸ்ஸிற்கு காத்திருந்தது ஒரு மணிநேரம். 06.30 மணிக்கு பஸ்ஸில் ஏறினோம். யாழ்ப்பாணப்பயணம் மாணவர்களுடன் சந்தோசமாக கழிந்தது.

ஆக்கம்- சுபத்ரா.எம்





Leave a Reply