ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் இருந்து 06.09.2011 இரவு 07.30மணிக்கு ஆரம்பித்த எம் பயணம் மறு நாள் காலை 06.30ற்கு கொழும்புத்தழிழ்ச்சங்கத்தை அடையும் வரை தொடர்ந்தது. பயணத்தின் அன்றைய இரவு முழுவதும் எமது சக மாணவர்களுடன் சந்தோசமாக கழிந்தது. மறு நாள் காலையில் 06.30 மணிக்கு கொழும்புத்தழிழ்ச்சங்கத்தை சென்றடைந்தோம்.
ஒரு மணித்தியாலங்களில் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் உடனடியாக தயாராகுமாறு பணிக்கப்பட்டோம். குளிக்கச் சென்றவர்களை வெளியே அழைக்க பட்ட பாடு போதும் போதும் என்று ஆயிற்று. விரைவாக குளித்து விட்டு அரைகுறை தயார் நிலையில் பேரூந்தில் ஏறிக்கொண்டோம். காலைச்சாப்பாடு ஒடும் பேரூந்தில். தூக்கம் கலையாத கண்கள் தூக்கத்தை தேடியபடி பாராளுமன்றத்தை நோக்கிச்சென்றது..
பாராளுமன்றம் அமைந்துள்ள பத்தரமுல்ல பிரதேசத்தை அடைந்ததும் எல்லோரும்பேரூந்தில்இருந்துஇறங்கிகிக்கொண்டோம். பாராளுமன்றத்தினுள் நுழைய முன் எமக்கு பல ஆலோசனைகள் பாராளுமன்றத்தில் போய் உட்காரும் போது காலுக்கு மேல் கால் போடக்கூடாது கதைக்காதீர்கள் என பல அறிவுறுத்தல்கள். அதனை விட தலையில் அணிந்திருந்த கிளிப் முதற் கொண்டு கீழே விழுந்தால் சத்தத்தை ஏற்படுத்தும் என்று நினைப்பவை அனைத்தும் களையப்பட்டது. உள்ளே நுழைந்தால் நான்கு இடங்களில் பொலிஸாரின் உடற்சோதனை. முதன் முதலில் பாராளுமன்ற அமர்வினை நேரடியாகப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. என்றும் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவம். அங்கு கட்சி அமைச்சர்களது பேச்சு கூட்டத்தின் போது தமக்குள் ஏதோ பேசிச் சிரித்தல் போன்ற அவர்களது செயற்பாட்டை அவதானிக்க முடிந்தது. அமைச்சர்களது பேச்சு ஒரு புறம் நடை பெற இங்கு அதை அவதானிக்க வந்த எம்மவர்களின் கண்களை தூக்கம் வருடியது நாம் மட்டுமல்ல தூக்கத்தில் இருந்தது. ஒரு ஊடகவியலாளர் கூட தூங்கிற்றிருந்ததை நான் பார்த்தேன்.
மறு நாள் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிற்கு சென்றோம். பல மூத்த பத்திரிகையாளர்கள் வருகை தந்திருந்த அம் மாநாட்டுக்கு நாமும் சென்றது மறக்க முடியாத மற்றுமொரு அனுபவம். அன்றைய நாள் மற்றுமொரு மறக்க முடியாத அனுபவம் என்னவெனில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாராளுமன்றம் சென்ற போது காணப்பட்ட சோதனைகள்இங்கும் இருக்குமோ என எதிர்பார்த்தோம். ஆனால் எவ்வித விசாரணையுமின்றி அமைச்சரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது மட்டுமன்றி உயர் கல்வி தொடர்பான பல விடயங்களை கலந்துரையாட முடிந்தது.
அன்றைய தினம் பிற்பகல் காலிமுகத்திடலுக்கு செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு பார்க்கும் இடங்களில் எல்லாம் காதல் ஜோடிகள் தம்மை மறந்து காதலில் ஈடுபட எம்மோடு வந்த சகநண்பர் கூட்டம் அவர்களை நோக்கியபடி நின்றனர். நாம் கடலில் இறங்குவதும் பின் ஏறுவதுமாக விளையாடினோம். அன்றைய தினம் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.
அடுத்த நாள் காலையில் கொழும்பு இதழியல் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து பங்குபற்றியமை மற்றுமொரு சிறந்த அனுபவமாகும். சிங்கள ஊடக மாணவர்களின் புதிய புதிய தோழமைகள் கிடைத்தமை மற்றமொரு அனுபவம்.
மகரகம களனிப் பல்கலைக் கழகத்திற்கு செல்லும் வாய்ப்பும் அங்கு இடம்பெற்ற மருத்துவ பீட மாணவர்களால் நடாத்தப்பட்ட கண் காட்சியை பார்க்கும் சந்தர்ப்பம்கிடைத்தது. அது மட்டுமின்றி அப்பல்கலைக்கழக சுப. றெஜினோல்ட் அவர்களை நேர்காணும் வாய்ப்பு கிடைத்தது.
அத்துடன் மகாராஜா நிறுவனத்துக்கு செல்ல வேண்டும் அங்கு நடைபெறும் செயற்பாடுகளை நேரடியாகக் காண வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆவல். இப் பயணத்தின் போது அவ் ஆவலும் நிறைவேற்றப்பட்டது. நேறள கசைளவ கலையகம் மற்றும் செய்தியறையின் நிர்வகிப்பினைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அதுமட்டுமன்றி சக்தி T.V, M.T.V ருபவாஹினி கலையகங்களை நேரடியாக பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. Spell masterஎனும் M.T.V நிகழ்ச்சியின் ஒளிப்பதிவினை நேரடியாகக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. தொலைக்காட்சி நிகழ்வினை நேரடியாகக் காண முடிந்தமை மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
தினகரன்), வீரகேசரி போன்ற பத்திரிகை நிறுவனங்களுக்கு சென்றோம். பத்திரிகை அச்சிடல்இழடெiநெ நெறள பற்றிய தகவல் விநியோகம் அத்துடன் தொடர்பாக மேலதிக அறிவினைப் பெற முடிந்தது. அடுத்து டீடழழபநச தொடர்பான கலந்துரையாடல் உரையாடி பல முறையான அறிவினைப்பெற்றுக்கொண்டோம்.
இத்தகைய ஊடகப்பயணத்தில் பல புதிய விடயங்களை அறிந்து கொள்ள முடிந்ததுடன் பல புதிய ஊடக வியலாளர்கள் ஊடகத்துறை நண்பர்களுடன் தொடர்பினை மேற்கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைத்தது. நல்ல மனப் பாங்குடையவர்களுடனும் சேர்ந்து பழகும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. என்றும் மறக்க முடியாத புதிய அனுபவத்தை இப் பயணம் பெற்றுத் தந்தது. எனவும் கூறலாம்.
ஆக்கம் - சுபத்ரா.எம்