21 வருடங்களின் பின்னர் தமது சொந்த இடங்களுக்கு தெல்லிப்பளை, மாவிட்டபுர மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுள் தெல்லிப்பளை J/230 பிரிவை கிராமசேவகர் பிரிவாகக் கொண்ட செல்வாபுரத்துக்கு சென்றிருந்தோம்.
அங்கு இப்பிரதேசவாசியான க.வரதராஜா அவர்களைச் சந்தித்து இக் கிராமத்தினைப் பற்றிக் கேட்ட போது, அவர் தற்போது மக்கள் வந்து குடியேறத் தொடங்கி 5 மாதங்கள் கடந்துள்ளன. நாம் பொருட்கள் வாங்குவதற்கான கடைகள் போதுமானதாக இல்லை நீண்ட தூரத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. மாணவர்களுக்கான பாடசாலை அண்மையில் உள்ளது. எமக்கு வீட்டுத்தி;ட்டம் அரைவாசியே தரப்பட்டிருக்கின்றது எனத் தெரிவித்தார்.
மேலும் பாக்கியம் என்ற 80 வயது மூதாட்டி ஒருவர் தாம் அன்று பிழைப்புக்காக திருகாணி பின்னுவதை தொழிலாக மேற் கொண்டதாகவும் இன்று அதனை விட முடியாமல் பொழுது போக்காக செய்து வருவதாக குறிப்பிட்டார்.
தெல்லிப்பளையில் ஒவ்வொரு பிரதேச மக்களும் தமது சொந்தக் வீடுகளையும் கிணறுகளையும் துப்பரவு செய்து வருகின்றார்கள். எனினும் ஆலயங்கள் இன்னமும் பாழடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.
ஆக்கம் - ஹம்ஷா.எஸ்