Thursday, February 16, 2012

கற்றுகற்றுக்கொண்ட பாடங்களும் உணர்வுகளும்

0 comments
ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முழுநேர கற்கை நெறியினை கற்கும் மாணவர்கள் அனைவரும் உள்ளகப்பயிற்சி ஒன்றினை மேற்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் படி 06/09/2011அன்று ஊடக வளங்கள் மற்றும் பயிற்சிமைய நிலையத்தில் 4.00 மணிக்கு அனைவரும் கூடி எமது ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவாக உள்ளதா என்று சரிபார்த்து விட்டு இரவு 8.00 மணிக்கு பயணத்தினை உற்சாகத்துடன் ஆரம்பித்தோம்.

    ஆரம்பமே புது உணர்வினை கொடுத்தது. நண்பர்களுடன் நீண்ட தூரப்பயணம் என்பதும் மனதில் பலவிதமான எண்ணத்தினை கொடுத்தது. எதிர்பார்ப்புக்களையும் அதிகரித்தது. பேரூந்தில் கூச்சலிட்டபடி அனைவரையும் கிண்டல் செய்தபடியும் சென்று கொண்டிருந்த நமக்கு இடையில் மூன்று விபத்துக்களை காணநேர்ந்ததும் கவலையினையும் கொடுத்தது.
    மறுநாள் காலை நாம் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தினை சென்றடைந்ததும் சற்று இளைப்பாற முடியும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது. பாராளுமன்றத்திற்கு செல்லும் போது பாராளுமன்ற சோதனைகள் பாராளுமன்றம் பற்றிய எண்ணத்தினை அதிகரித்தது. அவ்வாறே அதன் பிரமாண்டமும் வியப்பினை தரக்கூடிய விதத்திலேயே அமைந்திருந்தது. பாராளுமன்ற அமர்வினை பார்க்கமுடியும் என்ற செய்தியும் அமர்வினை பார்க்கும் ஆர்வத்தினை தூண்டியது. ஆனால் அமர்வினை பார்க்கும் போது என் மனதில் இருந்த அமர்வுபற்றிய கற்பனை முற்றாக ஏமாற்றத்தில் முடிந்தது. அத்துடன் ஒருவர் கதைக்கும் மொழியினை பிற மொழி பேசுபவர் விளங்கிக் கொள்ளக் கூடியதாக காணப்பட்ட வழிமுறை புதியதாகவும் இருந்தது. தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற அறிவோர் ஒன்று கூடலில் பாடப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து கேட்ட போது உள்ளே புது உணர்வினை என்னால் உணரமுடிந்தது. காரணம் அன்றுதான் நான் முதன்முறை தமிழ்த்தாய் வாழ்த்தினை கேட்டேன். அத்துடன் சற்று வெட்கமாகவும் இருந்தது இதுவரை கேட்காமல் இருந்ததினை நினைத்து…

    மேலும் பத்திரிகை முறைப்பாட்டாளர் ஆணைக்குழுவில் பலதரப்பட்ட பத்திரிகையில் பணிபுரிபவர்களுடன் இருந்ததும் அவர்கள் மத்தியில் கேள்வியினை கேட்டதும் எனது தன்னம்பிக்கையினை அதிகப்படுத்துவதாக இருந்தது. அத்தோடு பாராளுமன்றத்தில் கேட்க விரும்பி மொழி பெயர்ப்பினை கேட்பதற்கு கிடைத்த வாய்ப்பும் புதுமையாக இருந்தாலும் மொழி பெயர்ப்பில் சரிவர மொழி பெயர்க்கப்படாமை ஏமாற்றமாக இருந்தது.
    தேசிய நூதனசாலையில் நாம் முன்பு படித்த பல விடயங்களை நேரில் கண்டதும் அவர்களின் ஆரம்ப கால கலைத்துவத்தினையும் காணும் போது இனிவரும்காலத்தில் இவ்வாறான கலைத்துவத்தினை எவரால் செய்துகாட்ட முடியும் என்ற கவலையினையும் ஏற்படுத்தியது. கொழும்பு இதழியல் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டதும் புது அனுபவமாக இருந்தது.






களணி மருத்துவ பல்கலைக்கழக்தின் கண்காட்சியில் மனித உடற் கூறுகள் பற்றிய தொகுப்பினை காணும்போது எமது உடலிலும் இவ்வாறான பாகங்கள் உள்ளனவா என்றும் அருவருப்பினை கொடுத்தது. அத்துடன் மகப் பேற்று தொகுப்பினை காணும் போது பெண்கள் படும் வேதனை யாராலும் ஈடு செய்து கொள்ள முடியாத ஒன்று தான் எனத் தோன்றியது. அதைபார்க்கும் போது அம்மாவின் நினைவு என்னை ஆட்கொண்டது.

விழுதுகள் நிறுவனத்தில் கற்பிக்கப்பட்டவை நாம் முன்னரே அறிந்த விடயமாக இருந்தது ஏமாற்றத்தினை கொடுத்தாலும் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியரை சந்தித்தது மகிழ்வினை கொடுத்தாலும் அவர் செய்தியினை எழுதும் மொழிநடை பற்றிய விடயங்கள். குழப்பத்தினை கொடுத்தது.
முதல்முறையாக அமைச்சர் ஒருவரை அவருடைய அமைச்சு அலுவலகத்திலே சந்தித்து நேர்கண்டது அரசியல் ஊடகதுறையில் ஈடுபடும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

தொலைக்காட்சி நிறுவனங்களான சக்தி, சிரச, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு போன்றவற்றிற்கு சென்று பார்வையிட்ட பலதரப்பட்ட எதிர்பார்க்காத தொழில் நுட்பங்கள் அனைத்தும் நானும் இங்கு பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தினை ஏற்படுத்தியது.

வீரகேசரி பத்திரிகை நிறுவனத்திலும், lake houseஅச்சியந்திரங்களை பார்வையிட்டதும் அச்சியந்திரத்தின் முறைமைகளும் தொழிற்சாலை ஒன்றில் நிற்பதாக தோன்றியது. ஆனால்  lake house இல் அனைத்து இடங்களினையும் பார்வையிட முடியாமற் போனது ஏமாற்றமாக இருந்தது.

மேலும் போஜோ நிறுவனத்தை சார்ந்த ஹென்றிக் உடன் கலந்துரையாடி இரவு உணவு விருந்தில் பங்குபற்றியதும் ளுரனெயல ழடிளநசஎநச ஆசிரியர் ஆனந்த பாலகிருஸ்ணன் அவர்களுடன் உரையாடியதும் எதிர்பார்ப்பினை நிறைவு செய்தது.
அத்துடன் சுதந்திர சதுக்கம், விகாரமகாதேவி பூங்கா, காலி முகத்திடல், வெள்ளவத்தை போன்ற இடங்களுக்கு சென்று நண்பர்களுடன் கைகோர்த்து உலாவந்ததும் இதுவரை கண்ட இன்பத்திலும் புதியதொன்றாக இருந்தது.
இதனிடையில் இடம் தெரியாத மொழி தெரியாத நடத்துனரின் பேரூந்தின் உலா பல இடங்களினை சுற்றிக்காட்டியது.
 ஆசிரியர் எந்த தளத்தில் இருக்கின்றார் என்பதை அறியாது டநகவ இல் மாட்டிக்கொண்டு மேலும் கீழுமாக ஏறி இறங்கியதும் புதுமையான நிகழ்வுதான்.
    தினமும் இரவில் தினக்குறிப்பினை எழுதி ஆசிரியரிடம் காட்டும் போதும் அனுபவத்தினை பகிரும் போதும் ஒவ்வொருவரும் அனுபவத்தினை பகிரும் போதும் ஒவ்வொருவரின் அனுபவங்களும் வித்தியாசமாகவும் அமைந்திருந்தது.
    தூக்கத்தினை தொலைத்த நாட்கள் அதிகரித்தது இறுதிநாள் கவலையினையும் கொடுத்தது நண்பர்களுடன் இருந்த நாட்கள் ஒவ்வொன்றும் நாம் திரும்பி வரும் போது கண்முன்னே வந்து சென்று கொண்டிருந்தது. நண்பர்கள் என்மீது சாய்ந்து தூங்கியதும் இதுவரை எதிர்கொள்ளாத ஒரு தருணமே. வீடுதிரும்புவது மகிழ்வாக இருந்தாலும் பயணம் முடிவடையும் தருணம் கண்கள் கலங்கியவாறே எனது பயணம் நிறைவடைந்தது.


ஆக்கம் - மறீன்.ஜெ

Leave a Reply