Thursday, February 16, 2012

அரங்கேறிய நாட்டார் கலை

0 comments
நாகரீக போர்வையில் பண்டையகலைகள் பல அரிகிய வண்ணமே உள்ளது. அதில் ஒன்றான நாட்டார் கலையின் ஆற்றுகை பல காலங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்டது. இதனை யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சிமையமும் செயற்திறன் அரங்க இயக்கமும் இணைந்து தென்னிந்திய நாட்டார் கலைகளை ஆற்றுகைப்படுத்தியது.


இதனை சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல்துறை முதுகலை மாணவனும் முற்றம் கலைக் குழுவின் செயலாளருமான ஆடலரசு வேணுகோபால் அவர்களது சிறப்பான பயிற்றுதலின் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் மாணவர்களும் செயற்திறன் அரங்க மாணவர்களும் ஆற்றுகை படுத்தியிருந்தனர்.


இவ் ஆற்றுகையில் தப்பாட்டம் (பறை), ஒயிலாட்டம், கும்மியாட்டம், சாட்டைக்குச்சியாட்டம், ஆதிவாசி நடனம் போன்ற நாட்டார் கலைகளை இதில் பயிற்றுவித்து ஆற்றுகைப்படுத்தியிருந்தார்.
இக்கலையினை பயில்வதற்கு கிடைத்த அரிய வாய்ப்பினால் பல்வேறுபட்ட அனுபவங்களினையும் பெற்றுக்கொள்ள முடிந்தது.
சென்னைப்பல்கலைக்கழக மாணவர்களின் முற்றம் கலைக்குழுவினால் நடாத்தப்பட்ட இக் கலையினை பார்வையிடக்கிடைத்தபோதே இவை நாம் அறிந்திராத கலையம்சத்தினை கொண்டிருந்தது. அஅதனை நாமும் பயின்று ஆற்றுகைப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணியிராத சந்தர்ப்பத்தில் இதனை பயில்வதற்கு எனக்கு வாய்ப்புக்கிடைத்தது. 
இக்கலையினை பயில்வதற்கு செயற்திறன் அரங்கத்திற்று சென்றிருந்தோம். பறை ஒலி வாசலில் கேட்ட போதே அவற்றை எம்மால் பயின்று கொள்ள முடியுமா இக் குறுகிய காலப்பகுதியில் என்று தோன்றியது.
கலையினை பயில் வதற்கு முன்னர் வணக்கம் சொல்லும் முறை கற்றுத்தரப்பட்டதன் பின் பயில ஆரம்பித்தோம் அதில் நான் சாட்டைக்குச்சியாட்டம், ஒயிலாட்டம், ஆதிவாசி நடனம் போன்றவற்றை கற்றுக்கொள்ள முடிந்தது.
ஓயில் ஆட்டம் முதலில் பயிற்றுவிக்கப்பட்டது. பார்ப்பதற்கு இலகுவாக இருப்பினும் அதில் உள்ள அடவுகள் ஒவ்வொன்றும் சற்று சிரமமானதாகவே இருந்தது.
ஆதன்பின சாட்டைக்குச்சியாட்டம் இவ் ஆட்டத்தினை இந்திய மண்ணில் பார்த்தபோது அவர்கள் இலகுவாக ஆடினாலும் அதன் அடவுகள் எதுவும் விளங்கிக் கொள்ளமுடியாத நிலையில் இருந்தது. இருப்பினும் அவற்றை கற்றுத்தந்த விதம் எமக்கு கற்றுக்கொள்ள வழிவகுத்துத்தந்தது.

அவ்வாறே ஆதிவாசி நடனமானது ஆற்றுகைப்படுத்தலின் முதல் நாள் தான் இதனை கற்றுக் கொண்டோம்.
இக் கலையினை ஐந்து நாட்கள் மட்டுமே பயின்று முதலில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆற்றுகைப்படுத்தியிருந்தோம். அங்கு அதற்கான வரவேற்பு எமக்கு எதிர்பாராத விதமாகவே அமைந்திருந்தது. தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலையிலும கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியிலும் இதனை ஆற்றுகைப்படுத்தியிருந்தோம்.
இதில் பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கி அமைந்திருந்தது. ஒடுக்கப்பட்ட கலைகள் என்று கூறப்படும் இவ் நாட்டார் கலையானது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலை உலகிற்கு வெளிக்காட்டுவதற்காகவே பயன்னடுத்தப்பட்டன. 
ஆனால் இன்று இதன் போக்கானது தற்போது மற்றப்படடடு பலராலும் விரும்பத்தக்க ஒன்றானக மாற்றமடைந்துள்ளது.

ஆக்கம் - மறீன்.ஜெ

Leave a Reply