ஈழத்தில் பொதுவாக பாரம்பரிய கலைகள் மருவி வருகின்ற சுழ்நிலையில் யாழ் மண்ணில் தமிழர் தம் வாழ்வியலை பிரதிபலிக்கின்ற கலைவடிவங்களை இன்றைய இளம் சமுகம் மத்தியில் தெரியப்படுத்தும் நோக்கில் தென்னிந்தியாவின் ஆதித்தமிழர் இயக்கத்தின் கலைத்தலைவர் ஆடல் அரசு என்றழைக்கப்படுகின்ற வேணு அவர்கள் யாழ் மண்ணில் நிகழ்த்திய ஆற்றுகை எம் பாரம்பரிய கலைகளுக்கு மேலும் புத்துணர்ச்சி கொடுத்திருக்கிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையமும் செயற்திறன் அரங்க இயக்கமும் இணைந்து ஒழுங்கமைத்த பாரம்பாரிய கலைகளின் ஆற்றுகை என்ற நிகழ்ச்சி யாழ் மண்ணில் பல இடங்களில் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டுள்ளது.
முதலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றப்பட்ட இப்பாரம்பரிய கலை வடிவங்களின்; ஆற்றுகை பார்வையாளர்களின் மனதில் பெரும் களிப்பினை உண்டு பண்ணியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது தடவையாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் அரங்கேற்றப்பட்ட போது அங்கு பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களின் அவாவாக இருந்தது இவ்வறான கலை வடிவங்களின் ஆற்றுகைகளை தமது பிரதேசங்களிலும் அரங்கேற்ற வேண்டும் என்பதே மேலும் அவர்கள் கூறுகையில் இவ்வறான கலைவடிவம் பற்றி பாடப்புத்தகம் வாயிலாகவே படித்திருந்த தமக்கு முதன் முறையாக தற்போதுதான் செயன்முறை வடிவில் பார்க்கின்ற வாய்ப்பை தமிழ்நாட்டு கலைஞன் வழங்கியிருக்கிறார் என்பதே பொதுவாக நோக்கும்போது இன்றைய காலகட்டத்தில் பரதம் என்கின்ற பரதநாட்டியத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதாவது மக்கள் அதன் மீது கொண்டுள்ள ஈடுபாடு அதை நிலைநாட்ட வேண்டும். என்பதில் காட்டுகின்ற ஆர்வம் எமது பாரம்பரிய கலைகள் மீது அவர்கள் வைப்பது இல்லை. இவ்வறான சுழ்நிலை நிலவுகின்றபோது தமிழ் நாட்டின் சென்னை பல்கலைக்கழகத்தினால் நெறிப்படுத்தப்பட்டு வருகின்ற ஆடல் அரசு என்கின்ற வேணு அவர்களை கொண்டு சென்னைப் ;பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்த காலத்தில் இவ் முற்றம் கலைக்குழவை ஆரம்பித்து வைத்த தற்போதைய யாழப்பாண பல்கழைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையம் மற்றும் செயற்தி றன் அரங்க இயக்கத்தின் இயக்குனர் தே.தேவானந்; அவர்கள் இன்று முன் கொண்டு வந்துள்ளார்.
புழுதியின் கீதங்கள, எல்லாம் சரிவரு ம், அக்கினி பெருமூச்சு, வண்டியும் தொந்தியும், எனப் பல்வேறு நாடகங்களை நெறியாள்கை செய்து வருகின்ற தே.தேவனாந் அவர்கள் தற்பொழுது பராம்பரிய கலைவடிவங்களை யாழ் மண்ணில் வளர்த்தெடுப்பதிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். இதன் ஆரம்ப கட்டமாகவே தமிழ்நாட்டின் கலையாக விளங்குகின்ற சாட்டைக்குச்சி தப்பாட்டம் ஓயில் கும்மி ஆதிவாசி நடனம் ஆகிய கலைவடிவங்களை யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவர்களையும் மற்றும் செயல்திறன் அரங்க இயக்கத்தின் நாடக மாணவர்களையும் கொண்டு இக்கலை வடிவங்களை அரங்கேற்றுவதற்கு திட்டமிட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார். இப் பாரம்பரிய கலைவடிவங்களை ஈழத்தழர் மத்தியில் கொண்டு வந்த பெருமை இவரையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்கம்-ஹம்சா.எஸ்