17.10.2011 யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தினால் இந்தியா செல்வதற்கு விமானத்தில் பயணித்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. தள்ளு வண்டியில் பைகளை தள்ளிக் கொண்டு போனதும் முதல் தடவையாக இருந்தன. விமான நிலையத்தில் பொதியை சோதனை செய்து பின் படிவத்தை நிரப்பி போனது எனக்க புது அனுபவமாக இருந்தன. எனக்கு நகரும் படிக்கட்டில் ஏறி பழக்கமில்லை. இது தான் முதல் தடவையாக இருந்தன. நகரும் படிக்கட்டிலும் ஏறிவிட்டேன். இது எனக்கு மறக்க முடியாத சம்பவமாக இருந்த விமான நிலையத்தில்; வெளியில் நிற்கும் விமானத்தைப் பார்த்தவுடன் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. விமானத்தை நேரில் பார்ப்பேன் என நினைக்கவில்லை. விமானத்தில் ஏறும் போது வாசலில் நின்ற விமானப்பணிவிடைப் பெண்கள் எங்களைப் பார்த்து வணக்கம் சொன்னார். சினிமாவில் இப்படிப்பட்ட காட்சிகளை பார்க்க கிடைத்தது. விமானத்திற்குள் எனது இருக்கையில் இடுப்புப்பட்டியை எப்படி போடுவது என்று எனக்கு தெரியாது. பக்கத்தில் உள்ளவர் போடுவதை பார்த்து தான் நான் இடுப்புப்பட்டியைப் போட்டேன். பின் விமானம் புறப்பட ஈயத்தமாவதை விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த இலத்திரனியல் கருவிகள் அறிவுறுத்தல்கள் காட்டியது.எந்த இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம் என அவ்விலத்திரனியல் கருவிகள் காடடிக் கொண்டிருந்தன. இதுவும் எனக்கு புதிய அனுபவமாகும்.
விமானம் மேல் எழும்பும் போது எனது நெஞ்சுக்குள் குளிர்மையான உணர்வு ஏற்பட்டது. காதெல்லாம் அடைந்து போய்விட்டது. நான் பயந்து கொண்டிருந்தேன். ஆனால் எனது நண்பிகள் சாதாரணமாகவே இருந்தார்கள் அதனை பார்த்து நானும் சாதாரணமாக இருக்க நினைத்தேன். இதை விட கொடுமை என்னவென்றால் அங்கு பணிபுரியும் பெண்கள் அப்பிள் சாறை குடிபானமாக தந்தார்கள் ஆனால் நான் அதனை சாராயம் என நினைத்து அருந்தவில்லை. இது எனக்கு மறக்கமுடியாத ஒரு அனுபவமாகும். விமானத்தை விட்டு இறங்கும் போது விமானம் ஆடி அசைந்து பெரிய சத்தத்துடன் இறங்கின. இவ்வாறு விமானப் பயணத்தில் அனைத்து செயற்பாடுமே எனக்கு புதிய அனுபவமாக இருந்தன. ஏன்னென்றால் அது தான் நான் பிறந்து வளர்ந்து முதலாவதாக விமானத்தில் பயணம் செய்த நாள்.
சென்னைப்பல்கலைக்கழக மாணவர்கள் சந்தனமாலையுடன் நின்றார்கள். சந்தனமாலையை தே.தேவானந் sirக்கு அணிவித்தார்கள். அவர்களுடன் பஸ்ஸில் செல்லும் போது எனது கண்கள் சென்னையின் நான்கு புறமும் சென்றுகொண்டிருந்தது. ஆனால் எங்கும் குப்பைகளாவே தென்பட்டது. சில இடங்கள் தூய்மையாக இருந்தது. சினிமாவில் பார்க்கும் போது சென்னைக்கு சென்று வாழவேண்டும் போல் இருக்கும். சென்னை சாந்தோம் நிலையத்தில் தங்குமிடம் ஒரு மணிநேரம் ஒய்வு எடுத்துவிட்டு மதியஉணவிற்கு வரும்படி பணிக்கப்பட்டோம். எனக்கு ஒரு மணிநேரம் போதாது போல் இருந்தது. அந்த நேரத்தில் நித்திரை கொன்று விட்டு மதியஉணவினை எடுத்துக்கொண்டோம். மாலையில் சென்னை மெரீனா beachசெல்லவேண்டும் தயாராகுமாறு பணிக்கப்பட்டோம். நாங்கள் எல்லோரும் வெளிக்கிட்டு நின்றோம.; சென்னைப் பல்கலைகழகத்தால் sir வர நேரம் சென்று விட்டதால் அன்று செல்லமுடியாமல் போய்விட்டது.
சென்னைப்பல்கலைகழகத்தில் தமிழ் இதழியல் புத்தாக்கப் பயிற்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடப்பட்டது. இதில் “தமிழ் அனங்கே” என்ற சொல் என் மனதை மிகவும் கவர்ந்துள்ளது. ஊட்டிக்கு செல்லும் பாதை வளைந்து நெழிந்த பாதையாக இருந்தது. இருபக்கமும் பார்க்கும் போது பசுமை நிறைந்த அழகான காட்சியாக இருந்தன. செல்லும் போது இடையில் வீரப்பன் வாழ்ந்த சத்திய மண்டல காடு பார்த்தோம். அங்கு ஆற்றம் காரையில் காட்டு வாசிகள் தாய், சிறுபிள்ளை குளிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள் பக்கத்திலோ யானைகள் ஆற்றில்; நீர் குடித்துக்கொண்டிருக்கிறது. அதைப்பார்க்கவே பயமாக இருந்தன. யானை என்றாலே நாங்கள் ஒட ஆரம்பித்து விடுவோம். ஆனால் இவர்கள் பயம் எதுவுமில்லாமல் குளிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். மலையும் முகிலும் தொட்டுக்கொண்டிருப்பதை நான் இது வரையும் காணவில்லை அன்று பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது பெரிய மலை முகிலோடு இருப்பதை பார்த்தேன். மலையில் ஏறிக் கொண்டிருக்கும் போது கீழ் நோக்கி பார்த்த போது ரொம்ப பயமாகவே இருந்தன. பஸ் கொஞ்சம் விலகி போனாலும் நாங்கள் எல்லோரும் விழுந்து விடுவோம். மிகவும் உயரமான மரங்கள், அழகான பூக்கள், காய்கறி வகைகள், மான், குரங்கு, பன்றி போன்றவற்றையெல்லாம் செல்லும் போது பார்த்தேன். நீல கிரி மாவட்டத்தில் இறங்கினவுடன் என்னால் குளிர் தாங்க முடியவில்லை. கையெல்லாம் விறைந்து விட்டது. உணர்ச்சியே இல்லாத நிலையில் நான் இருந்தேன். குளிர் தாங்க முடியால் என் கையில் விரல் தோல் உரிந்துவிட்டத.
ஆதிவாசிகளை நான்; நேரில் சென்று பார்ப்பன் என நினைக்கவேயில்லை. குறும்பர், இருளர், தோட்டாஸ், பனியர், படம்பர், பேட்டக்குறும்பர், இரட்டைக்குறும்பர் என 7 வகையான காட்டுவாசிகள் இருக்கிறார்கள் என அவர்களுடன் கலந்துரையாடலின் மூலம் தான் எனக்கு தெரிந்தது. இவர்களது வாழ்க்கை முறை எங்களின் வாழ்க்கை முறையிலிருந்து வித்தியாசமாகவே இருந்தன. மொழியே தெரியாது அதற்கான எழுத்து வடிவமில்லாத மொழியை இவர்கள் கதைக்கிறார்கள். அனுபவங்களை பகிர்ந்து கொள்வதென்றால் பல விடயங்ககை கூறலாம். தழிழ்நாட்டுக்கு சென்று திரும்பி 03 வாரங்கள் ஆகின்றது. ஆனால் இன்றும் எமது பயணக்கட்டுரை நிற்கவில்லை; ஒவ்வொன்றாக நினைக்கும் போது அந்த நாட்கள் மீண்டும் வருமா போலல்லவா இருக்கின்றது. நாம்
பெற்றோருடன்செல்வதற்கும்,தனியாகசெல்வதற்கும், மாணவகூட்டத்துடன் செல்வதற்கும் எவ்வளவு வித்தியாசம் இந்த மாதிரி துறையை தெரிந்த எடுத்த படியாக இச்சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.
ஏமக்கும் அதிஸ்ரம் கிடைத்தது போல ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தால் இந்தியப் பயணம் கிடைத்தது. இதற்காக சிறந்த ஊடகவியலாளனாகி எனது நன்றியை செலுத்துவேன்..
ஆக்கம் - இந்து.வே