Thursday, February 16, 2012

புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் மீள்குடியேற்றத்திற்காக அகற்றப்பட்டு வருகின்றன

0 comments
யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப்பிரிவில் தெல்லிப்பழைப்பிரதேசம் செயலாளர் பிரிவில் மாவிட்டபுரம், வீமன்காமம், வறுத்தலைவிளான் ஆகிய ஊர்களும் தெற்கில் மல்லாகம், ஏழாலை என்னும் ஊர்களும், மேற்கில் அளவெட்டி, பன்னாலை போன்ற ஊரும் உள்ளன, காங்கேசன்துறை வீதி இவ்வூரான வீமன்காhம் ஊடாகச்செல்கின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 8 மைல் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.


யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை பிரதேசத்தில் யுத்த காலத்தில் புதைக்;கப்பட்ட கண்ணி வெடிகள் மீள்குடியேற்றத்திற்காக அகற்றப்பட்டு வருகின்றன. கடந்த 20 வருட யுத்தத்தின் பின்னர் இப்போது தெல்லிப்பளை பிரேதேசத்திலே மக்களை மீள்குடியேற்றுவதற்காக விடப்பபட்டுள்ளனர். இந்தப்பிரதேசம் கடந்த 20 வருடங்களாக ராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அந்த வேளை ராணுவத்தினர் தமது பாதுகாப்பிற்காக அவர்களால் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் இப்போது டென்மார்க் கண்ணி வெடி அகற்றும் பிரிவினரால் அரச அனுமதியுடன் மக்களின் மீள் குடியேற்றத்திற்காக அகற்றப்பட்டு வருகிறது. இதிலே அகற்றப்பட்ட கண்ணி வெடிகள் எவ.; எம். Nஐ, பரட்கோயில், ஸ்ருன்கிராண்டர் ஆகிய கண்ணி வெடிகள் மீட்கப்பட்டன. ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தை அண்டி உட்பட்ட பிரதேசத்திற்கு நாம் பார்வையிட்ட போது இந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் 85 ஊழியர்கள் தமது பணியினை மேற்கொண்டனர்.
இங்கு பிரதான தொழிலாக மக்கள் விவசாயத்தினை செய்துள்ளார்கள். ஆனால் யுத்த காலத்திற்கு பின்னர் இந்தப்பிதேசம் மிகவும் பற்றைகளும் காடுகளுமாக காணப்படுகிறது. மக்களின் வீடுகளும் இடிந்த நிலையில் காணப்படுகிறது. இப்பிரதேசம் இப்போது மக்களின் மீள்குடியேற்றத்திறிகாக அரசினால் தீர்மானிக்கப்பட்டு கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. கண்ணி வெடிகள் இல்லை என்று இனங்காணப்பட்ட பகுதிகளில் மக்கள் சென்று தமது காணிகளையும் வீடுகளையும் பார்வையிடுவதோடு சிலர் தமது காணிகளில் வளர்ந்துள்ள பற்றைகளை அகற்றி மீண்டும் குடியேறுவதோடு விவசாயத்தினையும் செய்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளிகின்றனர், இன்னும் சிலர் உடைந்த தமது வீடுகளை மீண்டும் திருத்தி அமைத்து வருகின்றனர்.
இங்கு மக்களின் மீள்குடியேற்றத்திற்காக ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் ராணுவத்தினரின் முகாம்கள் இன்னமும் இருக்கின்றன. மக்களின் நடமட்டங்கள் குறைவாகவே காணப்படுகின்றது. வீதிகளும் புணரமைக்கப்பட்டு வருகின்றது. முழுமையாக மிதிவெடிகள் இன்னமும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்கம் - என்.நிருஷாந்த்

Leave a Reply