எமது நாட்டில் யுத்தம் முடிவடைந்த நிலையில் வன்னியில் இருந்து இடம்பெயர்த மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உலருணவுப்பொருட்களானவை தற்பொழுது அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது சொந்த இடங்களுக்கும் திரும்ப முடியாத நிலையில் உணவுக்காகத்திண்டாடும் மக்கள் சிலரின் கருத்துக்கள் இங்கு பிரசுரமாகின்றது.
வடிவேலு புஸ்பமலர் (வயது-46)
நாங்கள் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து இங்கு வந்து குடியேறியுள்ளோம். கணவர் மனநோயினால் பாதிக்கப்பட்;டவர் எனக்கு ஏழு பிள்ளைகள் அதில் இருபிள்ளைகள் திருமணம்முடித்து விட்டனர் ஒரு மகன் முள்ளிவாக்காலில் காணாமல் போய்விட்டார் மற்றொரு மகன் தடுப்புமுகாமில் இருக்கின்றார் மற்ற மூன்று மகள்களும் பாடசாலையில்படிக்கின்றனர் திருமணம் முடித்த மகனே எங்கள் குடும்பச்செலவுக்கு உதவிசெய்கின்றார் சிலவேளைகளில் தடுப்பில் இருக்கும் மகனை பார்க்கசொல்வதானால் அதிக பணம் செலவாகும் மகனின் உதவியுடன் உலர் உணவுப் பொருள்களும் கிடைத்தபடியால் ஏதோ உணவுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வாழ்கை சென்று கொண்டிருந்தது. ஆனால் கடந்த மூன்று மாதங்களாக உலர்உணவுப்பொருள்கள் நிறுத்தப்பட்டதனால் நாங்கள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளோம.;
வசீகரன் அட்சயா -(வயது18)
எனது கணவரும் அம்மாவும் அப்பாவும் முள்ளிவாய்க்காலில் செல்வீச்சினால் இறந்து விட்டனர் எனக்கு இரன்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றார் பெற்றோர் இல்லாததனால் எனதுதம்பி இருவர் என்னுடன் இருக்கின்றார்கள் எனது மூன்று சகோதரர்கள் திருமணம் முடித்து வன்னியில் இருக்கின்றனர். ஆதலால் அவர்களால் எமக்கு உதவி செய்ய முடியாது சில வேளைகளில் பணம் தந்து உதவுவார்கள் நாங்கள் எங்கள் அம்மம்மாவின் வீட்டில் இருக்கின்றோம். தாத்தாவினால் வேலைக்கு செல்ல இயலாது அம்மாம்மா மட்டும் கோயில்திருவிழா விளையாட்டுப்போட்டி போன்றவற்றில் கச்சான் விற்று எமது வாழ்கையை கொண்டு நடாத்துகின்றார் ஆனால் அம்மம்மாவிற்கும் 75 வயது ஆகிவிட்டடதனால் அவரால் தூர இடங்களுக்கு சென்று வியாபாரம் செய்யமுடியாது. உணவுப் பொருள்கள் நிறுத்தப்பட்டதானால் நாங்கள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகின்றோம்
சொல்வராசா சிவமலர் (வயது-46)
நாங்கள் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து இங்கு வந்து குடியேறியுள்ளோம.; கணவர் வன்னி யுத்தத்தில் இறந்து விட்டார் எனக்கு இரு மகள்கள் உள்ளனர் அவர்கள் இருவரும் படிக்கின்றனர். நானும் யுத்தத்தில் கையில் காயம்மடைந்து உள்ளேன் இக்கையினால் வேலைகள் செய்யமுடியாது. இதனால் வீட்டுசெலவுக்கும் பிள்ளைகளின் படிப்புச்செலவுக்கும் சகோதரர்கள் சில வேளைகளில் உதவி செய்வார்கள் கணவன் இறந்து ஒருவருடத்திற்கு மோலாகியும் அவரின் இளப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை. என்னால் தையல் வேலைகள் செய்யமுடியும் ஆனால் தைப்பதற்கு தையல் இயந்திரம் இல்லை அதை வாங்குவதற்கு பணமும் இல்லை ஆகவே எமது வாழ்க்கை உலர் உணவுப்பொருள்களின் நிறுத்தத்தினால் மிகவும் பாதிப்புற்றுள்ளது. அதற்கு பதிலாக எந்தவிதமான உதவிகளோ அல்லது முவலீடுகளோ எமக்கு வழங்கப்படவில்லை இதனால் எமது வாழ்க்கைச்செலவு; தற்போது வாழ்க்கைச்செலவு அதிகரிக்கின்றது.
சின்னவன் இராசதுரை (வயது 44)
நான் கூலி வேலை செய்து வாழ்கைச்செலவு செய்கின்றேன். இதனால் தினமும் கூலி வேலை கிடைப்பதில்லை எனது இரு மகன்களும் பாடசலையில் படிக்கின்றனர்.இதனால் எனதுஉழைப்புவாழ்கைச்செலவுக்கு போதுமானதாக இல்லை எனது மனைவியும் ஒரு நோயாளி அவருக்கு அடிக்கடி வைத்தியசெலவு செய்ய வேன்டியுள்ளது. நாங்கள் பூனகரியில் பல காலம் வாழ்ந்து 2006ம் ஆண்டு இங்கு வந்து குடியேறினோம் இங்கு எங்களுக்கு ஓரு வீடும் இல்லை எங்களுக்கு இரு மகன்கள் உள்ளபடியால் வீட்டுத்திட்டமும் இல்லை உலர் உணவுத்திட்டம் வழங்கப்பட்டத்தனால் ஒரளவு உணவுக்கு தட்டுப்பாடு இல்லாமல் எமது வாழ்கை சென்றது. ஆனால் தற்போது உலர் உணவுத்திட்;டமும் நிறுத்தப்பட்டதனால் இனி நம் வாழ்வு இருண்டதாகவே காணப்படும.;
முருகேசு இராயதுரை
நாங்கள் வன்னியில் வசதியாக வாழ்ந்தனாங்கள். பின் வன்னியில்இருந்து இடம்பெயர்ந்து முள்ளிவாய்காலில் எல்லாப்பொருள்களையும்விட்டுவிட்டு முகாமுக்கு வந்து இங்கு குடியேறியுள்ளோம் எனது கணவருக்கும் 75 வயதாகிவிட்டது அவரால் வேலை செய்யமுடியாத நிலையில் உள்ளார் எனது மகளும் பாடசாலையில் படிக்கின்றாள் இதனால் எமது வாழ்கைச்செலவுக்கும் படிப்புச்செலவுக்கும் வருமானம் போதுமானதாக இல்லை எனது மகனமார்சில வேளைகளில் உதவி செய்வார்கள் சில வேளைகளில் அதுவும் கிடைப்பதில்லை உலருணவுப்பொருட்களையே நம்பிவாழ்ந்த எமக்கு அதுநிறுத்தப்பட்டது எமது குடும்பத்தை நடாத்துவதில் பெரும் சிக்கலாக உள்ளது. இதுபற்றி நாம் கிராம சேவகரிடம் கேட்டபோது நிவாரணம் வழங்கப்படும் என்று மட்டுமே கூறுகின்றனர் மூன்று மாதங்களாகியும் இன்னும் எங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை இருந்தாலும் அந்நிவாரணம் மீண்டும் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புடனேயே வாழ்கின்றோம்.
குலேந்திரன் நகுலேஸ்வரி (வயது 58)
நாங்கள் வன்னியில் இருந்து தற்போது தான் இங்கு குடியேறியுள்ளோம் எனது கணவர் தோட்டம் செய்கின்றார். எனக்கு நான்கு பிள்ளைகள் அதில் மூத்தமகன் யுத்தத்தில் இறந்துவிட்டார் இரண்டாவது மகன் யுத்தத்தின் போது ஒரு கண்னை இழந்துவிட்டார் இவருக்கு வைத்திய செலவு செய்து எம்மிடம் இருந்த பணமும் செலவழிந்து விட்டது நிவாரணத்தையும் கணவரின் உழைப்பையும் நம்பியே எமது வாழ்கை இருந்ததது ஆனால் தற்போது நிவாரணம் நிறுத்தப்பட்டதால் நாங்கள் மிகவும் துன்பப்படுகின்றோம் நாங்கள் மீன்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பும்வரையாவது எமக்கு நிவாரத்தை வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும்.
பிரசாத்குமார் கிருஸ்னவதனா (வயது29)
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து அம்மாவீட்டில் குடியேறியுள்ளோம் எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் எனக்கு எட்டு வயதில் மகன் இருக்கின்றார். எனது அப்பாவும் இறந்து விட்டதால் அம்மாவின் குடும்பம் தம்பியின் உழைப்பை நம்பியோ இருக்கின்றது நாங்களும் அவர்களிலே தங்கி வாழ்வதால் அவர்களுக்கும் துன்பத்தை கொடுக்கின்றோம் நிவாரனம் தந்ததால் அம்மாவிடம் உணவினை எதிர்பாக்காமல் இருந்தோம் ஆனால் தற்ப்போது நிவாரனம் நிறுத்தப்பட்டதால் நாங்கள் மீன்டும் மீன்டும் துன்பத்திற்குள்ளாகின்றோம்
இவ்வாறான இந்த மக்களின் நிலைமையை உணர்ந்தும் அரசாங்கம் இன்றுவரை அந்த மக்களுக்கான உணவினை பெற்றுக்கொடுப்பதற்கு ஏன் மறுக்கின்றது அல்லது அறிந்தும் அறியாதது போல் போலியாக செயற்படுகின்றதா? என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.முன்பு உணவுப்பொருட்ககை பெற்றுக்கொண்ட மக்கள் தமக்கு மீண்டும் உணவுப்பொருட்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்இவர்களின் இத்தகைய எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள் யார்? ஏதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுபவர்கள் யார்? ஏதிர்பார்ப்புடன் மக்கள்……..
ஆக்கம் -சி.பாமினி,சி.தர்சிகா