Thursday, February 16, 2012

எனதுபதிவுகள்

0 comments
விருத்தி செய்துகொள்வதை நோக்கமாக கொண்டு இவ் உள்ளகப்பயிற்சி அமைந்தது 2010- 2012களில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் இதழியல் டிப்ளோமா பயிற்சி கட்டமைவுகள் போன்;றவற்றிற்கு இணங்க ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் நான்காம் அணி மாணவர்களின் உள்ளகப்பயிற்சி -1 இற்கான விஜயம் 06.09.2011 – 14.09.2011 வரை கொழும்பில் இடம்பெற்றிருந்தது.

அதில் எமது பாடத்திட்டத்திற்கு இணங்க பல ஊடக நிறுவனங்களுக்கு சென்று  மாணவர்கள் ஊடக நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக அறிந்து கொள்வதனையும் மாணவர்கள் தமது ஆளுமையினை திருந்தது. இதன்மூலம் பல செயற்பாடுகளைநேரடியாகப்பார்வையிட்டு எமது ஊடக அறிவை மேலும் வலுப்படுத்தியும் பெருக்கிக்கொள்ளவும் முடிந்தது. இப்பயணமானது ஊடக மாணவர்களாகிய எமக்கு மிகவும் பிரயோசனமாகவும், பயனுடையதாகவும் இருந்தது. அதில் நான் கொழும்புக்கு சென்றது இதுவே முதல்தடவையாகும்
அதில் முதலாவதாக பாராளுமன்றம் சென்றேன் பாராளுமன்றத்தில் நடைபெற்ற செயற்பாடுகளை நேரடியாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அதாவது பாராளுமன்றம் கூடும் முறை அங்கு நடக்கும் விவாதங்கள் போன்றவற்றையும் பாராளுமன்றம் பற்றிய தெளிவான விளக்கத்தையும் பெற்றேன்.

சுதந்திர சதுக்கத்தை பார்வையிடச்சென்றேன். அங்கு பழைய வரலாறுகள், கதைகள் சிற்பங்களாகப்பொறிக்கப்பட்டிருப்பதை பார்வையிட முடிந்தது.
sakthi TV, t,sirasa TV, radio,  போன்றவற்றிற்கும் சென்று அங்கு நடைபெற்ற நிகழ்வுகளையும் பார்வையிட முடிந்தது. அங்கு எவ்வாறு செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றன மற்றும் ஒரு நிகழ்ச்சி  எவ்வாறு தயாரிக்கப்படுகின்றனு என்பதையும் பார்வையிட முடிந்தது.
பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிற்கு சென்றதன் ஊடாக ஊடகவியல் ஒழுக்கக்கோவை பற்றியும் அது மீறப்படும்போது ஏற்படும் விளைவுகள் பற்றியும் ஊடக ஒழுக்கத்தின் தற்போதைய நிலைபற்றியும் அறியமுடிந்தது.
முரண்பாடுகளை தீர்ப்பதற்கு மொழிபோன்றவை தடையாக இருந்தாலும் உடல் அசைவுகள் மூலமும், ஒற்றுமை மூலமும், விட்டுக்கொடுப்புகள் மூலமும் முரண்பாடுகளை தீர்க்கமுடியும் என்பது பற்றியும் அறியமுடிந்து.
டுயமந hழரளந நிறுவனத்திற்கு சென்றதன் மூலம் பத்திரிகை அச்சடிக்கும் முறைபற்றியும் அநணin வகைகள் போன்றவற்றையும் அவற்றின் செயற்பாடுகளையும் முழுமையாக பார்வையிட முடிந்தது. மற்றும் 3வகையான இயந்திரங்கள் பற்றியும் அவை எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது போன்ற பல்வேறுபட்ட விடயங்களையும் அறிந்து கொள்ள முடிந்தது.
விழுதுகள் semenerஇல் கலந்துகொண்டு செய்தி என்றால் என்ன, செய்தியை எப்படி எழுதுவது என்பது பற்றியும் மேலதிகமாக கற்றுக்கொள்ளமுடிந்தது.
ஆநனiஉயட கயஉரடவலயின் கண்காட்சிக்கு சென்றபோது ஒரு மனிதனுக்கு தேவையான சகல விதமான முற்றுமுழுதான அறிவையும் பெறக்கூடியதாக இருந்தது.
அத்துடன் ஒரு செயலை செய்யமுன் ஒரு திட்டமிட்ட செயற்பாடு அவசியம் அதன்மூலம் வெற்றிகரமாக எதையும் செய்து முடிக்கமுடியும் என்பதையும் கற்றுக்கொண்டேன்.
பாராளுமன்றத்தில் இருந்த மரபுரீதியான முடி மற்றும் ஆசனங்கள் என்பவற்றையும் பழைய வரலாறுகளையும் அறிய முடிந்தது.
வேறுபட்ட மொழியை சேர்ந்த மாணவர்களுடன் உரையாடுவதில் ஆரம்பத்தில் சவால்களை எதிர்கொண்டேன் பின்பு அது மொழி பெயர்க்கப்படுவதன் மூலமும் ஓரளவு பொதுவான மொழியை பயன்படுத்துவதன் மூலமும் அதனை தீர்க்கமுடிந்தது. ஆத்துடன் உடல் அசைவுகள், சைகைகள் என்பவற்றின் மூலமும் தொடர்புகொண்டேன்.

ஆக்கம் - தர்சிகா.சி

Continue reading →

உணர்வைத்தந்த உயிரோட்டங்கள்

0 comments

17.10.2011 யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தினால் இந்தியா செல்வதற்கு விமானத்தில் பயணித்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. தள்ளு வண்டியில் பைகளை தள்ளிக் கொண்டு போனதும் முதல் தடவையாக இருந்தன. விமான நிலையத்தில் பொதியை சோதனை செய்து பின் படிவத்தை நிரப்பி போனது எனக்க புது அனுபவமாக இருந்தன. எனக்கு நகரும் படிக்கட்டில் ஏறி பழக்கமில்லை. இது தான் முதல் தடவையாக இருந்தன.  நகரும் படிக்கட்டிலும் ஏறிவிட்டேன். இது எனக்கு மறக்க முடியாத சம்பவமாக இருந்த விமான நிலையத்தில்; வெளியில் நிற்கும் விமானத்தைப் பார்த்தவுடன் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. விமானத்தை நேரில் பார்ப்பேன் என நினைக்கவில்லை. விமானத்தில் ஏறும் போது வாசலில் நின்ற விமானப்பணிவிடைப் பெண்கள் எங்களைப் பார்த்து வணக்கம் சொன்னார். சினிமாவில் இப்படிப்பட்ட காட்சிகளை பார்க்க கிடைத்தது.  விமானத்திற்குள் எனது இருக்கையில் இடுப்புப்பட்டியை எப்படி போடுவது என்று எனக்கு தெரியாது. பக்கத்தில் உள்ளவர் போடுவதை பார்த்து தான் நான் இடுப்புப்பட்டியைப் போட்டேன். பின் விமானம் புறப்பட ஈயத்தமாவதை விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த இலத்திரனியல் கருவிகள் அறிவுறுத்தல்கள் காட்டியது.எந்த இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம் என அவ்விலத்திரனியல் கருவிகள் காடடிக் கொண்டிருந்தன. இதுவும் எனக்கு புதிய அனுபவமாகும். 

விமானம் மேல் எழும்பும் போது எனது நெஞ்சுக்குள் குளிர்மையான உணர்வு ஏற்பட்டது. காதெல்லாம் அடைந்து போய்விட்டது. நான் பயந்து கொண்டிருந்தேன். ஆனால் எனது நண்பிகள் சாதாரணமாகவே இருந்தார்கள் அதனை பார்த்து நானும் சாதாரணமாக இருக்க நினைத்தேன். இதை விட கொடுமை என்னவென்றால் அங்கு பணிபுரியும் பெண்கள் அப்பிள் சாறை குடிபானமாக தந்தார்கள் ஆனால் நான் அதனை சாராயம் என நினைத்து அருந்தவில்லை. இது எனக்கு மறக்கமுடியாத ஒரு அனுபவமாகும்.  விமானத்தை விட்டு இறங்கும் போது விமானம் ஆடி அசைந்து பெரிய சத்தத்துடன் இறங்கின. இவ்வாறு விமானப் பயணத்தில் அனைத்து செயற்பாடுமே எனக்கு புதிய அனுபவமாக இருந்தன. ஏன்னென்றால் அது தான் நான் பிறந்து வளர்ந்து முதலாவதாக விமானத்தில் பயணம் செய்த நாள்.
சென்னைப்பல்கலைக்கழக மாணவர்கள் சந்தனமாலையுடன் நின்றார்கள். சந்தனமாலையை தே.தேவானந் sirக்கு அணிவித்தார்கள். அவர்களுடன் பஸ்ஸில் செல்லும் போது எனது கண்கள் சென்னையின் நான்கு புறமும் சென்றுகொண்டிருந்தது. ஆனால் எங்கும் குப்பைகளாவே தென்பட்டது. சில இடங்கள் தூய்மையாக இருந்தது. சினிமாவில் பார்க்கும் போது சென்னைக்கு சென்று வாழவேண்டும் போல் இருக்கும். சென்னை சாந்தோம் நிலையத்தில் தங்குமிடம் ஒரு மணிநேரம் ஒய்வு எடுத்துவிட்டு மதியஉணவிற்கு வரும்படி பணிக்கப்பட்டோம். எனக்கு ஒரு மணிநேரம் போதாது போல் இருந்தது. அந்த நேரத்தில் நித்திரை கொன்று விட்டு மதியஉணவினை எடுத்துக்கொண்டோம். மாலையில் சென்னை மெரீனா beachசெல்லவேண்டும் தயாராகுமாறு பணிக்கப்பட்டோம். நாங்கள் எல்லோரும் வெளிக்கிட்டு நின்றோம.; சென்னைப் பல்கலைகழகத்தால் sir வர நேரம் சென்று விட்டதால் அன்று செல்லமுடியாமல் போய்விட்டது.

சென்னைப்பல்கலைகழகத்தில் தமிழ் இதழியல் புத்தாக்கப் பயிற்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடப்பட்டது. இதில் “தமிழ் அனங்கே” என்ற சொல் என் மனதை மிகவும் கவர்ந்துள்ளது. ஊட்டிக்கு செல்லும் பாதை வளைந்து நெழிந்த பாதையாக இருந்தது. இருபக்கமும் பார்க்கும் போது பசுமை நிறைந்த அழகான காட்சியாக இருந்தன. செல்லும் போது இடையில் வீரப்பன் வாழ்ந்த சத்திய மண்டல காடு பார்த்தோம். அங்கு ஆற்றம் காரையில் காட்டு வாசிகள் தாய், சிறுபிள்ளை குளிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள் பக்கத்திலோ யானைகள் ஆற்றில்; நீர் குடித்துக்கொண்டிருக்கிறது. அதைப்பார்க்கவே பயமாக இருந்தன. யானை என்றாலே நாங்கள் ஒட ஆரம்பித்து விடுவோம். ஆனால் இவர்கள் பயம் எதுவுமில்லாமல் குளிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். மலையும் முகிலும் தொட்டுக்கொண்டிருப்பதை நான் இது வரையும் காணவில்லை அன்று பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது பெரிய மலை முகிலோடு இருப்பதை பார்த்தேன். மலையில் ஏறிக் கொண்டிருக்கும் போது கீழ் நோக்கி பார்த்த போது ரொம்ப பயமாகவே இருந்தன. பஸ் கொஞ்சம் விலகி போனாலும் நாங்கள் எல்லோரும் விழுந்து விடுவோம். மிகவும் உயரமான மரங்கள், அழகான பூக்கள், காய்கறி வகைகள், மான், குரங்கு, பன்றி போன்றவற்றையெல்லாம் செல்லும் போது பார்த்தேன். நீல கிரி மாவட்டத்தில் இறங்கினவுடன் என்னால் குளிர் தாங்க முடியவில்லை. கையெல்லாம் விறைந்து விட்டது. உணர்ச்சியே இல்லாத நிலையில் நான் இருந்தேன். குளிர் தாங்க முடியால் என் கையில் விரல் தோல் உரிந்துவிட்டத.
ஆதிவாசிகளை நான்; நேரில் சென்று பார்ப்பன் என நினைக்கவேயில்லை. குறும்பர், இருளர், தோட்டாஸ், பனியர், படம்பர், பேட்டக்குறும்பர், இரட்டைக்குறும்பர் என 7 வகையான காட்டுவாசிகள் இருக்கிறார்கள் என அவர்களுடன் கலந்துரையாடலின் மூலம் தான் எனக்கு தெரிந்தது. இவர்களது வாழ்க்கை முறை எங்களின் வாழ்க்கை முறையிலிருந்து வித்தியாசமாகவே இருந்தன. மொழியே தெரியாது அதற்கான எழுத்து வடிவமில்லாத மொழியை இவர்கள் கதைக்கிறார்கள். அனுபவங்களை பகிர்ந்து கொள்வதென்றால் பல விடயங்ககை கூறலாம். தழிழ்நாட்டுக்கு சென்று திரும்பி 03 வாரங்கள் ஆகின்றது. ஆனால் இன்றும் எமது பயணக்கட்டுரை நிற்கவில்லை; ஒவ்வொன்றாக நினைக்கும் போது அந்த நாட்கள் மீண்டும் வருமா போலல்லவா இருக்கின்றது. நாம் 
பெற்றோருடன்செல்வதற்கும்,தனியாகசெல்வதற்கும், மாணவகூட்டத்துடன் செல்வதற்கும் எவ்வளவு வித்தியாசம் இந்த மாதிரி துறையை தெரிந்த எடுத்த படியாக இச்சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. 
                                    
ஏமக்கும் அதிஸ்ரம் கிடைத்தது போல ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தால் இந்தியப் பயணம் கிடைத்தது. இதற்காக சிறந்த ஊடகவியலாளனாகி எனது நன்றியை செலுத்துவேன்..  

ஆக்கம் - இந்து.வே


Continue reading →

மரத்தளபாட உற்பத்தி…..

0 comments
தற்போது நாகரிகத்தின் காரனமாக மக்கள் அதிகளவு மரத்தளபாடத்தினைகொள்வனவு செய்கின்றனர்.  ,இதனால் உற்பத்தி அதிகமாகின்றது. ,இதன்விளைவாக மரங்கள் அதிகளவு அழிக்கப்படுகின்றது.  ,இதனால் மழைவீழ்ச்சி குறைவடைகின்றது. ,இதனை மக்கள் அறிந்திருந்தாலும் மக்கள் நடைமுறைப்படுத்துவதில்லை. வீடு என்னும் தேவை அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் பரவிக்கொண்டே போய் நகரமயமாக்கல் என்ற விசுவரூபம் எடுத்து மனிதர்களைப் பேய்போல கவ்விப் பிடித்து அவர்கள் புறவாழ்விலும் எத்தனை எத்தனை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. என்பதை தெரியாமலே வாழ்து வருகின்றனா. 

ஆக்கம் - இந்து.வே
Continue reading →

யாழ். மண்ணில் தமிழர் பாரம்பரியக்கலை

0 comments
ஆடிலரசிடம் நடனம் கற்று மேடையேறிய எனது அனுபவம்…
சமூகத்தில் புதிய மாற்றத்தை தந்திருக்கின்றது. குறுகிய காலத்தில் நாம் கலந்து இவ்வாற்றுகை அரங்கேறியதென்பது சிறந் அனுபவம்.; இப்பறையின் மூலம் பறைசார்ந்த தாளக்கட்டுக்கள்இ பலவகையான ஆட்டங்கள், குழுவாகச்செயற்படும் தன்மை போன்றவற்றையும் கற்றுக்கொண்டேன் என்கின்றார். இதைவிட மேலும் ஆயிரம் ஏக்கர் உள்ள நிலப்பரப்பில் ஒரு புதையலைக்கண்டு எடுக்கும் விவசாயியின் மகிழ்ச்சிக்கு ஒப்பானது.


பர்வையாளரின் கைகளில் இருந்து வந்துபோன கரகோசத்தில் இருந்து இந்த மகிழ்கச்சியை நாம் பெற்றுக்கொண்டோம் இந்தியப்பயணத்தில் இந்தக்கலையினைப்பார்த்து இதைக்கற்றுக்கொள்ளமுடியுமா? என ஏங்கிய எமக்கு இன்று இந்த வாய்ப்புக்கிடைத்தது ஒரு பெரிய அரியவாய்ப்பே என்கின்றார் மரீன்தர்மிலா. இந்தக்கலையை கற்கும்போது எமக்குள் அத்தாளம் பதிந்து விட்டது இதில் உள்ள ஒவ்வொரு ஆட்டமும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்றே எனவும் கூறுகிறார்
                  இந்திய சுற்றுப்பயணத்தில் வெறும் பார்வையாளராக இருந்த என்னை குரு வேணு இன்று என்னை ஆடவைத்துள்ளார். ஊடக மாணவர்களுக்கு இக்கற்கையை கற்பதென்பது ஒரு வரப்பிரசாதமாகும். சக மாணவர்களுடன் ஆடும்போது அவர்களுடைய அசைவையும் கவனித்து ஆடவேண்டும் இதன்போது தொடர்பாடலும் விருத்தியடைந்தள்ளது
நீண்டகாலமாக வாழ்வியலோடு சம்மந்தப்பட்ட கிராமியக்கலை யாழ் மண்ணில் இல்லாமல் அழிந்து போய்விட்டது இப்போது ஆடல் அரசு எங்கட யாழ்ப்பாணத்தில் இதைப்பழக்கி ஆடவைத்துள்ளார் என்கிறார் இந்து. இப்போ யாழ்ப்பாணத்தில் பல்வேறு நவீனத்தவங்கள் நிகழ்ந்து வருகின்ற வேளையிலே இந்தக்கலையை நாம் கற்று ஆடுவதென்பது மிகவும் சிறப்பான ஒன்றே. என்னதான் சினிமாவில் பல்வேறு ஆட்டங்கள் கூத்துக்களை பார்த்தாலும் நாம் பயின்ற இந்தக்கலையானது புனிதமானதாகவும் தமிழரின் பாரம்பரியத்தை எடுத்து விளக்குவதாகவும் அமைந்துள்ளது என்கின்றார்.மேலும் நாம் பார்வையாளருக்கும் அந்த பார்வைளாளர் கண்களுக்கும் சிறந்த விருந்து கொடுத்திருப்பதையே இதனை ஆடிமுடித்தவுடன் எனக்கு தோன்றுகின்றது
பழகும்போது பயம்தொரியவில்லை அரங்கேறப்போகின்றோம் என்பதும் ஒருவித பயம் அரங்கேறியதும் அந்தப்பயம் எல்லாம் பறந்து விடுகின்றது. நிறையக்கூத்துக்களையும் ஆடல்களையும் நாம் தொலைக்காட்சியில் பார்த்தோம் ஆனால் இப்போது நேரில் அதைப்பயின்று ஆடும்போது எங்களுக்குரிய வெட்கம் பயம் எல்லாம் இல்லாது போய்விட்டது.
இந்தியாவில் பார்க்கும்போது இந்தக்கலையை எப்படி ஆடுவது என ஏங்கினேன் ஆனால் அதை வேணுஅண்ணா இலகுவாக ஆடுவதற்கு பயிற்றுவித்தார்.. ஆடலும் மேடையில் அரங்கேறும்போது பார்வையாளர் முன்னால் இருக்கும்போது எனக்குள்ளேயே நான் நன்றாக ஆடவேண்டும் என உற்சாகம் தோன்றுகின்றது எனவும் கூறுகின்றார்.
கற்றது சிறுதுளி கல்லாதது கடல்அளவு இருக்கு அதேபோல்தான் நானும் இக்கலையை கற்றுள்ளேன். முல்தடவையாக நானும் பழகணும் என்ற எண்ணம் இருந்தது அது இப்போநிறைவேறிடிச்சு இக்கலை தொடர்ந்து நிலைத்திருக்கணும் என்று ஆசை இருக்கு ஆனால் அது தொடர்ந்தும் நிலைக்காது.
ஏனென்றால் நான் இப்போ அநனயை கநைடன இல் கரடட வiஅந மாணவனாக கற்றுக்கொண்டிருக்கின்றேன் ஆதலால் அதிலேயே முழுக்கவனமும் செலுத்தவேண்டியுள்ளது எனவும் கூறுகின்றார். யாழ்ப்பாணத்தில் இதைப்பற்றி எல்லோருக்குமு; தெரியாது அதனை ஊடக மாணவர்களாகிய எம்மூலம் எல்லா இடங்களுக்கும் அறிமுகப்படுத்தவேண்டும். இந்தக்கலையினை கற்றதுடன் மற்றவர்களுக்கும் நானே சொல்லிக்கொடுக்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்குள்ளே ஏற்பட்டுள்ளது..இது ஆரம்பத்தில் பழகும்போது கடினமாக இருந்தது பின்பு இது இலகுவாக மாறிவிட்டது.
மேலும் பறையாட்டம் என்பது பார்வையாளர்களுக்கு இலகுவானதொன்றாகும் ஆனால் அதனை செயலில் ஈடுபடுத்துவதென்பது மிகவும் கஸ்ரம் ஏனெனில் எல்லோருக்கும் கையும் காலும் சேர்ந்து வேலை செய்வது கடினம் அதை எங்களுக்கு எளிதான முறையில் முதலில் காலாட்டம் பின்பு கையில் பறையடித்துப்பழகுதல் பின்பு இரண்டையும் சேர்த்து செய்வது என படிமுறையாகப்பழகியது இலகுவாக இருந்தது. அத்துடன்; இந்தக்கலையானது தொடர்ந்தும் வளரவேண்டும் இதனை நாம் தொடர்ந்து செய்யவேண்டும் இத்துடன் இது முடிவடையக்கூடாது.

ஆக்கம் - இந்து.வே

Continue reading →

கற்றுகற்றுக்கொண்ட பாடங்களும் உணர்வுகளும்

0 comments
ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முழுநேர கற்கை நெறியினை கற்கும் மாணவர்கள் அனைவரும் உள்ளகப்பயிற்சி ஒன்றினை மேற்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் படி 06/09/2011அன்று ஊடக வளங்கள் மற்றும் பயிற்சிமைய நிலையத்தில் 4.00 மணிக்கு அனைவரும் கூடி எமது ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவாக உள்ளதா என்று சரிபார்த்து விட்டு இரவு 8.00 மணிக்கு பயணத்தினை உற்சாகத்துடன் ஆரம்பித்தோம்.

    ஆரம்பமே புது உணர்வினை கொடுத்தது. நண்பர்களுடன் நீண்ட தூரப்பயணம் என்பதும் மனதில் பலவிதமான எண்ணத்தினை கொடுத்தது. எதிர்பார்ப்புக்களையும் அதிகரித்தது. பேரூந்தில் கூச்சலிட்டபடி அனைவரையும் கிண்டல் செய்தபடியும் சென்று கொண்டிருந்த நமக்கு இடையில் மூன்று விபத்துக்களை காணநேர்ந்ததும் கவலையினையும் கொடுத்தது.
    மறுநாள் காலை நாம் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தினை சென்றடைந்ததும் சற்று இளைப்பாற முடியும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது. பாராளுமன்றத்திற்கு செல்லும் போது பாராளுமன்ற சோதனைகள் பாராளுமன்றம் பற்றிய எண்ணத்தினை அதிகரித்தது. அவ்வாறே அதன் பிரமாண்டமும் வியப்பினை தரக்கூடிய விதத்திலேயே அமைந்திருந்தது. பாராளுமன்ற அமர்வினை பார்க்கமுடியும் என்ற செய்தியும் அமர்வினை பார்க்கும் ஆர்வத்தினை தூண்டியது. ஆனால் அமர்வினை பார்க்கும் போது என் மனதில் இருந்த அமர்வுபற்றிய கற்பனை முற்றாக ஏமாற்றத்தில் முடிந்தது. அத்துடன் ஒருவர் கதைக்கும் மொழியினை பிற மொழி பேசுபவர் விளங்கிக் கொள்ளக் கூடியதாக காணப்பட்ட வழிமுறை புதியதாகவும் இருந்தது. தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற அறிவோர் ஒன்று கூடலில் பாடப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து கேட்ட போது உள்ளே புது உணர்வினை என்னால் உணரமுடிந்தது. காரணம் அன்றுதான் நான் முதன்முறை தமிழ்த்தாய் வாழ்த்தினை கேட்டேன். அத்துடன் சற்று வெட்கமாகவும் இருந்தது இதுவரை கேட்காமல் இருந்ததினை நினைத்து…

    மேலும் பத்திரிகை முறைப்பாட்டாளர் ஆணைக்குழுவில் பலதரப்பட்ட பத்திரிகையில் பணிபுரிபவர்களுடன் இருந்ததும் அவர்கள் மத்தியில் கேள்வியினை கேட்டதும் எனது தன்னம்பிக்கையினை அதிகப்படுத்துவதாக இருந்தது. அத்தோடு பாராளுமன்றத்தில் கேட்க விரும்பி மொழி பெயர்ப்பினை கேட்பதற்கு கிடைத்த வாய்ப்பும் புதுமையாக இருந்தாலும் மொழி பெயர்ப்பில் சரிவர மொழி பெயர்க்கப்படாமை ஏமாற்றமாக இருந்தது.
    தேசிய நூதனசாலையில் நாம் முன்பு படித்த பல விடயங்களை நேரில் கண்டதும் அவர்களின் ஆரம்ப கால கலைத்துவத்தினையும் காணும் போது இனிவரும்காலத்தில் இவ்வாறான கலைத்துவத்தினை எவரால் செய்துகாட்ட முடியும் என்ற கவலையினையும் ஏற்படுத்தியது. கொழும்பு இதழியல் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டதும் புது அனுபவமாக இருந்தது.






களணி மருத்துவ பல்கலைக்கழக்தின் கண்காட்சியில் மனித உடற் கூறுகள் பற்றிய தொகுப்பினை காணும்போது எமது உடலிலும் இவ்வாறான பாகங்கள் உள்ளனவா என்றும் அருவருப்பினை கொடுத்தது. அத்துடன் மகப் பேற்று தொகுப்பினை காணும் போது பெண்கள் படும் வேதனை யாராலும் ஈடு செய்து கொள்ள முடியாத ஒன்று தான் எனத் தோன்றியது. அதைபார்க்கும் போது அம்மாவின் நினைவு என்னை ஆட்கொண்டது.

விழுதுகள் நிறுவனத்தில் கற்பிக்கப்பட்டவை நாம் முன்னரே அறிந்த விடயமாக இருந்தது ஏமாற்றத்தினை கொடுத்தாலும் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியரை சந்தித்தது மகிழ்வினை கொடுத்தாலும் அவர் செய்தியினை எழுதும் மொழிநடை பற்றிய விடயங்கள். குழப்பத்தினை கொடுத்தது.
முதல்முறையாக அமைச்சர் ஒருவரை அவருடைய அமைச்சு அலுவலகத்திலே சந்தித்து நேர்கண்டது அரசியல் ஊடகதுறையில் ஈடுபடும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

தொலைக்காட்சி நிறுவனங்களான சக்தி, சிரச, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு போன்றவற்றிற்கு சென்று பார்வையிட்ட பலதரப்பட்ட எதிர்பார்க்காத தொழில் நுட்பங்கள் அனைத்தும் நானும் இங்கு பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தினை ஏற்படுத்தியது.

வீரகேசரி பத்திரிகை நிறுவனத்திலும், lake houseஅச்சியந்திரங்களை பார்வையிட்டதும் அச்சியந்திரத்தின் முறைமைகளும் தொழிற்சாலை ஒன்றில் நிற்பதாக தோன்றியது. ஆனால்  lake house இல் அனைத்து இடங்களினையும் பார்வையிட முடியாமற் போனது ஏமாற்றமாக இருந்தது.

மேலும் போஜோ நிறுவனத்தை சார்ந்த ஹென்றிக் உடன் கலந்துரையாடி இரவு உணவு விருந்தில் பங்குபற்றியதும் ளுரனெயல ழடிளநசஎநச ஆசிரியர் ஆனந்த பாலகிருஸ்ணன் அவர்களுடன் உரையாடியதும் எதிர்பார்ப்பினை நிறைவு செய்தது.
அத்துடன் சுதந்திர சதுக்கம், விகாரமகாதேவி பூங்கா, காலி முகத்திடல், வெள்ளவத்தை போன்ற இடங்களுக்கு சென்று நண்பர்களுடன் கைகோர்த்து உலாவந்ததும் இதுவரை கண்ட இன்பத்திலும் புதியதொன்றாக இருந்தது.
இதனிடையில் இடம் தெரியாத மொழி தெரியாத நடத்துனரின் பேரூந்தின் உலா பல இடங்களினை சுற்றிக்காட்டியது.
 ஆசிரியர் எந்த தளத்தில் இருக்கின்றார் என்பதை அறியாது டநகவ இல் மாட்டிக்கொண்டு மேலும் கீழுமாக ஏறி இறங்கியதும் புதுமையான நிகழ்வுதான்.
    தினமும் இரவில் தினக்குறிப்பினை எழுதி ஆசிரியரிடம் காட்டும் போதும் அனுபவத்தினை பகிரும் போதும் ஒவ்வொருவரும் அனுபவத்தினை பகிரும் போதும் ஒவ்வொருவரின் அனுபவங்களும் வித்தியாசமாகவும் அமைந்திருந்தது.
    தூக்கத்தினை தொலைத்த நாட்கள் அதிகரித்தது இறுதிநாள் கவலையினையும் கொடுத்தது நண்பர்களுடன் இருந்த நாட்கள் ஒவ்வொன்றும் நாம் திரும்பி வரும் போது கண்முன்னே வந்து சென்று கொண்டிருந்தது. நண்பர்கள் என்மீது சாய்ந்து தூங்கியதும் இதுவரை எதிர்கொள்ளாத ஒரு தருணமே. வீடுதிரும்புவது மகிழ்வாக இருந்தாலும் பயணம் முடிவடையும் தருணம் கண்கள் கலங்கியவாறே எனது பயணம் நிறைவடைந்தது.


ஆக்கம் - மறீன்.ஜெ
Continue reading →

அரங்கேறிய நாட்டார் கலை

0 comments
நாகரீக போர்வையில் பண்டையகலைகள் பல அரிகிய வண்ணமே உள்ளது. அதில் ஒன்றான நாட்டார் கலையின் ஆற்றுகை பல காலங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்டது. இதனை யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சிமையமும் செயற்திறன் அரங்க இயக்கமும் இணைந்து தென்னிந்திய நாட்டார் கலைகளை ஆற்றுகைப்படுத்தியது.


இதனை சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல்துறை முதுகலை மாணவனும் முற்றம் கலைக் குழுவின் செயலாளருமான ஆடலரசு வேணுகோபால் அவர்களது சிறப்பான பயிற்றுதலின் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் மாணவர்களும் செயற்திறன் அரங்க மாணவர்களும் ஆற்றுகை படுத்தியிருந்தனர்.


இவ் ஆற்றுகையில் தப்பாட்டம் (பறை), ஒயிலாட்டம், கும்மியாட்டம், சாட்டைக்குச்சியாட்டம், ஆதிவாசி நடனம் போன்ற நாட்டார் கலைகளை இதில் பயிற்றுவித்து ஆற்றுகைப்படுத்தியிருந்தார்.
இக்கலையினை பயில்வதற்கு கிடைத்த அரிய வாய்ப்பினால் பல்வேறுபட்ட அனுபவங்களினையும் பெற்றுக்கொள்ள முடிந்தது.
சென்னைப்பல்கலைக்கழக மாணவர்களின் முற்றம் கலைக்குழுவினால் நடாத்தப்பட்ட இக் கலையினை பார்வையிடக்கிடைத்தபோதே இவை நாம் அறிந்திராத கலையம்சத்தினை கொண்டிருந்தது. அஅதனை நாமும் பயின்று ஆற்றுகைப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணியிராத சந்தர்ப்பத்தில் இதனை பயில்வதற்கு எனக்கு வாய்ப்புக்கிடைத்தது. 
இக்கலையினை பயில்வதற்கு செயற்திறன் அரங்கத்திற்று சென்றிருந்தோம். பறை ஒலி வாசலில் கேட்ட போதே அவற்றை எம்மால் பயின்று கொள்ள முடியுமா இக் குறுகிய காலப்பகுதியில் என்று தோன்றியது.
கலையினை பயில் வதற்கு முன்னர் வணக்கம் சொல்லும் முறை கற்றுத்தரப்பட்டதன் பின் பயில ஆரம்பித்தோம் அதில் நான் சாட்டைக்குச்சியாட்டம், ஒயிலாட்டம், ஆதிவாசி நடனம் போன்றவற்றை கற்றுக்கொள்ள முடிந்தது.
ஓயில் ஆட்டம் முதலில் பயிற்றுவிக்கப்பட்டது. பார்ப்பதற்கு இலகுவாக இருப்பினும் அதில் உள்ள அடவுகள் ஒவ்வொன்றும் சற்று சிரமமானதாகவே இருந்தது.
ஆதன்பின சாட்டைக்குச்சியாட்டம் இவ் ஆட்டத்தினை இந்திய மண்ணில் பார்த்தபோது அவர்கள் இலகுவாக ஆடினாலும் அதன் அடவுகள் எதுவும் விளங்கிக் கொள்ளமுடியாத நிலையில் இருந்தது. இருப்பினும் அவற்றை கற்றுத்தந்த விதம் எமக்கு கற்றுக்கொள்ள வழிவகுத்துத்தந்தது.

அவ்வாறே ஆதிவாசி நடனமானது ஆற்றுகைப்படுத்தலின் முதல் நாள் தான் இதனை கற்றுக் கொண்டோம்.
இக் கலையினை ஐந்து நாட்கள் மட்டுமே பயின்று முதலில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆற்றுகைப்படுத்தியிருந்தோம். அங்கு அதற்கான வரவேற்பு எமக்கு எதிர்பாராத விதமாகவே அமைந்திருந்தது. தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலையிலும கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியிலும் இதனை ஆற்றுகைப்படுத்தியிருந்தோம்.
இதில் பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கி அமைந்திருந்தது. ஒடுக்கப்பட்ட கலைகள் என்று கூறப்படும் இவ் நாட்டார் கலையானது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலை உலகிற்கு வெளிக்காட்டுவதற்காகவே பயன்னடுத்தப்பட்டன. 
ஆனால் இன்று இதன் போக்கானது தற்போது மற்றப்படடடு பலராலும் விரும்பத்தக்க ஒன்றானக மாற்றமடைந்துள்ளது.

ஆக்கம் - மறீன்.ஜெ
Continue reading →

தமிழனுக்கு விசை கொடுத்த தப்பு இசை

0 comments



வேலை செய்த களைப்பை மறக்கும் கருவியாக அந்தக்கால மக்கள் ஆடல்பாடல்களை நம்பினர்;. அந்தக் காலத்திலெல்லாம் வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்று பொழுதுபோக்கு கருவிகள் இருந்ததில்லை. கடின உழைப்பும் ஓய்விற்கென கிராமியக்கலைகளுமே அவர்களது மூச்சாக இருந்தது. மகிழ்ச்சிக்காக பயன்படுத்தப்பட்ட நாட்டார் கலைகள் ஒடுக்கப்பட்ட மக்களிற்கு விசை கொடுக்கும் கருவியாகவும் செயற்பட்டு வந்தது. அதிலே தப்பு இசையினை ஒடுக்கப்பட்ட மக்கள் தம்முடைய குரலாக, சக்தியாக உலகிற்கு வெளிக்கொணர்ந்தனர்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தினரது ஓங்குசக்தியாக இருந்த தப்பு(பறை) போர்ப்பறையாகவும் பயன்படுத்தப்பட்டது. தப்பு கருவியை அடிக்கும் போது மனதிலே வீரம் குடிகொள்ளும். தப்பு எனும் இசைக்கருவியை கையில் எடுத்து கால்களுக்கும் அசைவு கொடுத்தனர். உடலுக்குள் ஒரு விசை:  மனதுக்குள் வீரப்பசை பெருக்கெடுக்க தம் கருத்தினை எடுத்துச் சொன்னார்கள். தப்பு பிறந்தது இப்படித்தான்!

தப்பு கருவி மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிவமான சட்டகத்தில் புளியங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட பசையினைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்து ஒட்டி ஆக்கப்பட்டது. தப்பு கருவியினை  இசைக்க இருவிதமான  குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றது. இடதுகையிலுள்ள குச்சி ‘சிம்புகுச்சி’  என்றும் வலதுகையிலுள்ள குச்சி ‘அடிகுச்சி’ என்றும் அழைக்கப்படும். சுpம்புகுச்சி நீண்ட தடடையானதாகவும் அடிகுச்சி குட்டையாக பருத்ததாகவும் அமைந்திருக்கும்.
கட்டைவிரல், மற்ற விரல்களுக்கு இடையில் குட்டைக்குச்சியை பிடித்துக் கொண்டு கீழ்ப்புறத்தில் இருந்து அடிப்பர். இடதுகையின் கட்டைவிரல், ஆட்காட்டி விரல்களில் நீண்ட குச்சியை பிடித்துக் கொண்டு மேல் பகுதியில்  இருந்து அடிப்பர்.

அடிகுச்சியால் தப்பின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. தப்பினைப் பிடித்துள்ள இடதுகையில் வைத்துள்ள சிம்புகுச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகளாகும். இவற்றினை மாற்றி மாற்றி அடிப்பதன் மூலம் புதிய மெட்டுக்கள், சொற்கட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் தனித்தனி அடியென வைத்திருக்கின்றார்கள். சப்பரத்தடி, டப்பா அடி, பாடல் அடி, சினிமா அடி, ஜாய்ண்ட் அடி, மருள் அடி, சாமி சாட்டுதல், மாரடித்தல், வாழ்த்து அடி என ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ப தாளங்கள் மாறுகின்றன. எனினும் இசைக்கப்படும் இசைக்கருவி ஒன்றுதான்!
இந்திய நாட்டில் கலைகளுக்குப் பஞ்சமில்லை. அதிலும் இலங்கையை விட அங்கு நாட்டார்கலைகள் ஒவ்வொரு கிராமந்தோறும் வழக்கத்தில் இருந்து வந்துள்ளன. எனினும் காலமாற்றத்திற்கேற்ப கலைகளும் அழிவடைந்த நிலையை எய்திவிட்டன. அழிவடைந்து சென்று கொண்டிருப்பவற்றை தூக்கி நிறுத்த ஆர்வம் மிக்க கலைஞர்களாலேயே முடியும். அப்படியான கலைஞர்கள் தப்பாட்டத்தினை தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திண்டுக்கல்,  மதுரை போன்ற இடங்களில் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
முன்பெல்லாம் கோயில் நிகழ்வுகள், வாழ்வியல் சடங்கு, அரசியல் பிரச்சினை போன்றவற்றிற்கு இசைக்கப்பட்ட தப்பு, தற்போது கலை வாழ வேண்டும் என்ற வெறியோடு செயற்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் டிசம்ப் 05! மக்களிடையே சிறு ஆரவாரம். பத்திரிகைகளும் செவிவழிச் செய்திகளும் ‘தப்பு’ எனும் சொல்லைப் பற்றி கதைபேசின. தப்பு! யார் தப்புச் செய்து விட்டார்கள் என்று வியாக்கியானம் கேட்க ஆரம்பித்தவர்கள் காதுகளில் “தப்பாட்டம் ஆடுகிறார்களாம். அதுவும் இந்தியாவில் இருந்து வந்த ஆடலரசு செய்யிறாராம்” என ஒலித்தன.       என்னவென்று பார்க்க சிறு கூட்டம். அசுவாரசியமற்றுப் போனது பல கூட்டங்கள்.
செயல்திறன் அரங்க இயக்கத்தின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட தென்னிந்தி நாட்டார் கலைகளின் ஆற்றுகை நிகழ்வில் தப்பு இசை முக்கியப்படுத்தப்பட்டிருந்தது. தென்னியந்தியக் கலைஞர் வேணுகோபாலின் நெறிப்படுத்தலின் கீழ் தப்பாட்டம், ஒயிலாட்டம், சாட்டைக் குச்சியாட்டம, கும்மியாட்டம், ஆதிவாசி நடனம் போன்ற  மருவி வருகின்ற ஆட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
பார்வையாளர்களாக வந்திருந்த இளைஞர்கள் கரகோஷம் செய்தது மட்டுமன்றி  மேடையில் ஆடப்பட்ட ஆடல்களுக்கேற்ப தாமும் ஆடி, கலைஞர்கள் ஆடும் போது ஒலிப்பிய இசைச்சொற்களையும் வாயசைத்து தம்முடைய ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
முன்னைய காலத்தில் தாசி குலத்தவர்களால் மட்டும் பரதநாட்டியம் ஆடப்பட்டு வந்தது. ஆனால் இன்றோ எல்லோராலும் ஆடப்படுகின்றது. அதுபோல இந்த தப்பாட்டமும் ஒடுக்கப்பட்ட மக்களது என்றில்லாமல் இளைய சமுதாயத்தினரால் ஆடப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பலாலி ஆசிரியர் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, இருபாலை ஆசிரியர் கலாசாலை, இராமநாதன் கல்லூரி ஆகிய ஜந்து இடங்கள் நடத்தப்பட்ட இந்நிகழ்வைப் பார்வையிட்ட ஆசிரிய மாணவர்கள் தமக்கும் இந்த வகை ஆடல்களை கற்றுத் தரும்படி  கோரினர். அவர்களின் அந்த ஆர்வத்தைக் கண்ணுற்ற வேணுகோபாலும் அவர்களுக்கு தானறிந்த கலையை கற்றுத் தந்திருக்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் இந்தக் கலைகள் மறைந்து போவதற்கு சாத்தியப்பாடுகள் இனிமேல் வரப்போவதில்லை. இத்தனை மாணவர்கள் பழகிய இக்கலைக்கு அழிவில்லை.
தப்பு இனிவரும் காலத்தில் ஒடுங்கிய தப்பாக இருக்கப் போவதில்லை. பரந்து விரிந்ததாக எங்கும் கிராமிய மணம் பரப்பும் கருவியாக, ஓங்கி ஒலிக்கும் குரலாக, சக்தியாக இருக்கப் போகின்றது. ‘தப்பினைச’; சுட்டிக் காட்டும் இந்த ‘தப்பு இசையின்’  குரல் என்றும் மறைவதற்கில்லை.  

 ஆக்கம் - கௌசி.மு


Continue reading →

சொந்த வாழ்வுக்கு திரும்பியுள்ள மக்கள்

0 comments

21 வருடங்களின் பின்னர் தமது சொந்த இடங்களுக்கு தெல்லிப்பளை, மாவிட்டபுர மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுள் தெல்லிப்பளை J/230 பிரிவை கிராமசேவகர் பிரிவாகக் கொண்ட செல்வாபுரத்துக்கு சென்றிருந்தோம்.

அங்கு இப்பிரதேசவாசியான க.வரதராஜா அவர்களைச் சந்தித்து இக் கிராமத்தினைப் பற்றிக் கேட்ட போது, அவர் தற்போது மக்கள் வந்து குடியேறத் தொடங்கி 5 மாதங்கள் கடந்துள்ளன. நாம் பொருட்கள் வாங்குவதற்கான கடைகள் போதுமானதாக இல்லை நீண்ட தூரத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. மாணவர்களுக்கான பாடசாலை அண்மையில் உள்ளது. எமக்கு வீட்டுத்தி;ட்டம் அரைவாசியே தரப்பட்டிருக்கின்றது எனத் தெரிவித்தார்.

மேலும் பாக்கியம் என்ற 80 வயது மூதாட்டி ஒருவர் தாம் அன்று பிழைப்புக்காக திருகாணி பின்னுவதை தொழிலாக மேற் கொண்டதாகவும் இன்று அதனை விட முடியாமல் பொழுது போக்காக செய்து வருவதாக குறிப்பிட்டார்.
தெல்லிப்பளையில் ஒவ்வொரு பிரதேச மக்களும் தமது சொந்தக் வீடுகளையும் கிணறுகளையும் துப்பரவு செய்து வருகின்றார்கள். எனினும் ஆலயங்கள் இன்னமும் பாழடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

ஆக்கம் - ஹம்ஷா.எஸ்

Continue reading →

பாரம்பாரியத்தின் உணர்ச்சி

0 comments

பாரம்பாரியத்தை கட்டி காப்பது தமிழனின் மரபுரிமைப் பண்பு . அவ்வகையில் இக்கலையினை கற்று கொண்ட வீரர்களின் அனுபவத்திலிருந்து இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது. சமூகத்தில் இவ்வாற்றுகையானது ஒரு புதிய தேடலை தந்திருக்கின்றது. குறுகிய காலப்பகுதியில் நாம் கலந்து இவ்வாற்றுகை அரங்கேறியதென்பது “ஒரு எல்லையிலே நிற்கின்ற இராணுவ வீரனை விரட்டியடித்து அந்த இடத்தினை கைப்பற்றியபோது ஒரு போராளிக்கு இருக்கும் மகிழ்ச்சியை கொடுப்படுபோல் எனக்கும் இவ்வாறு மகிழ்ச்சியை தந்தது” என்கின்றார் இதனைப்பழகிய மாணவன் ஜெகன் மேலும் இப்பறையின் மூலம் பறைசார்ந்த தாளக்கட்டுக்கள் பலவகையான ஆட்டங்கள், குழுவாகச்செயற்படும் தன்மை போன்றவற்றையும் கற்றுக்கொண்டேன் என்கின்றார்.

இதைவிட மேலும் ஆயிரம் ஏக்கர் உள்ள நிலப்பரப்பில் ஒரு புதையலைக்கண்டு எடுக்கும் விவசாயியின் மகிழ்ச்சிக்கு ஒப்பானதாம் பர்iவையாளரின் கைகளில் இருந்து வந்துபோன கரகோசத்தில் இருந்து இந்த மகிழ்கச்சியை நாம் பெற்றுக்கொணN;டாம் என்கின்றார் உற்சாகத்துடனும் புன்சிரிப்புடனும் ;மேலும் இந்திய சுற்றுப்பயணத்தில் வெறும் பார்வையாளராக இருந்த என்னை குரு வேணு இன்று என்னை ஆடவைத்துள்ளார் என்கிறார் தட்சா ஊடக மாணவர்களுக்கு இக்கற்கையை கற்பதென்பது ஒரு வரப்பிரசாதமாகும். சக மாணவர்களுடன் ஆடும்போது அவர்களுடைய அசைவையும் கவனித்து ஆடவேண்டும் இதன்போது தொடர்பாடலும் விருத்தியடைந்தள்ளது எனவும் கூறுகின்றார்.
நீண்டகாலமாக வாழ்வியலோடு சம்மந்தப்பட்ட கிராமியக்கலை யாழ் மண்ணில் இல்லாமல் அழிந்து போயிடிச்சு இப்ப ஆடல் அரசு எங்கட யாழ்ப்பாணத்தில் இதைப் பழக்கி ஆடவைத்துள்ளார் என்கிறார் இந்து . இப்போ யாழ்ப்பா ணத்தில் பல்வேறு நவீனத்த வங்கள் நிகழ்ந்து வருகின்ற வேளையிலே இந்தக்க லையை நாம் கற்று ஆடுவதென்பது மிகவும் சிறப்பான ஒன்றே. என்னதான் சினிமாவில் பல்வேறு ஆட்டங்கள் கூத்து க்களை பார்த்தாலும் நாம் பயின்ற இந்தக்க லையானது புனிதமா னதாகவும் தமிழரின் பாரம்பரியத் தை எடுத்து விளக்கு வதாகவும் அமைந் துள்ளது என்கின்றார். மேலும் நாம் பார்வையாளருக்கும் அந்த பார்வைளாளர் கண்களுக்கும் சிறந்த விருந்து கொடுத்திருப்பதையே இதனை ஆடி முடித்தவுடன் எனக்கு தோன்றுகின்றது
பழகும்போது பயம்தெரி யவில்லை அரங்கேறப் போகின்றோம் என்பதும் ஒருவித பயம் அரங்கேறியதும் அந்தப்பயம் எல்லாம் பறந்து விடுகின்றது என பகிடியாகவும் கூறுகின்றார் சந்திரகுமார் தர்சன். நிறையக்கூத்துக்களையும் ஆடல்களையும் நாம் தொலைக்காட்சியில் பார்த்தோம் ஆனால் இப்போது நேரில் அதைப்பயின்று ஆடும்போது எங்களுக்குரிய வெட்கம் பயம் எல்லாம் இல்லாது போய்விட்டது எனவும் கூறுகிறார்
மேலும் பறை பழகிய மாணவனான சுரேஸ் இந்தியாவில் பார்க்கும்போது இந்தக்கலையை எப்படி ஆடுவது என ஏங்கினேன் ஆனால் அதை வேணுஅண்ணா இலகுவாக ஆடுவதற்கு பயிற்றுவித்தார் எனவும் கூறுகின்றார் . ஆடலும் மேடையில் அரங்கேறும்போது பார்வையாளர் முன்னால் இருக்கும்போது எனக்குள்ளேயே நான் நன்றாக ஆடவேண்டும் என உற்சாகம் தோன்றுகின்றது எனவும் கூறுகின்றார்.மேலும் பறையாட்டம் என்ப து பார்வையாளர்களுக்கு இலகுவானதொன்றாகும் ஆனால் அதனை செயலில் ஈடுபடுத்துவதென்பது மிகவும் கஸ்ரம் ஏனெனில் எல்லோருக்கும் கையும் காலும் சேர்ந்து வேலை செய்வது கடினம் அதை எங்களுக்கு எளிதான முறையில் முதலில் காலாட்டம் பின்பு கையில் பறையடித்துப்பழகுதல் பின்பு இரண்டையும் சேர்த்து செய்வது என படிமுறையாகப்பழகியது இலகுவாக இருந்தது என செயற்திறன் அரங்க இயக்கத்தில் பறை பழகிய மாணவர்கள் கூறுகின்றார்கள். அத்துடன் இவர்கள் கூறுவதெல்லாம் என்னவென்றால் இந்தக்கலையானது தொடர்ந்தும் வளரவேண்;டும் இதனை நாம் தொடர்ந்து செய்யவேண்டும் இத்துடன் இது முடிவடையக்கூடாது எனவும் கூறுகின்றார்.

ஆக்கம் - என்.நிருஷாந்த்

Continue reading →

புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் மீள்குடியேற்றத்திற்காக அகற்றப்பட்டு வருகின்றன

0 comments
யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப்பிரிவில் தெல்லிப்பழைப்பிரதேசம் செயலாளர் பிரிவில் மாவிட்டபுரம், வீமன்காமம், வறுத்தலைவிளான் ஆகிய ஊர்களும் தெற்கில் மல்லாகம், ஏழாலை என்னும் ஊர்களும், மேற்கில் அளவெட்டி, பன்னாலை போன்ற ஊரும் உள்ளன, காங்கேசன்துறை வீதி இவ்வூரான வீமன்காhம் ஊடாகச்செல்கின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 8 மைல் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.


யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை பிரதேசத்தில் யுத்த காலத்தில் புதைக்;கப்பட்ட கண்ணி வெடிகள் மீள்குடியேற்றத்திற்காக அகற்றப்பட்டு வருகின்றன. கடந்த 20 வருட யுத்தத்தின் பின்னர் இப்போது தெல்லிப்பளை பிரேதேசத்திலே மக்களை மீள்குடியேற்றுவதற்காக விடப்பபட்டுள்ளனர். இந்தப்பிரதேசம் கடந்த 20 வருடங்களாக ராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அந்த வேளை ராணுவத்தினர் தமது பாதுகாப்பிற்காக அவர்களால் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் இப்போது டென்மார்க் கண்ணி வெடி அகற்றும் பிரிவினரால் அரச அனுமதியுடன் மக்களின் மீள் குடியேற்றத்திற்காக அகற்றப்பட்டு வருகிறது. இதிலே அகற்றப்பட்ட கண்ணி வெடிகள் எவ.; எம். Nஐ, பரட்கோயில், ஸ்ருன்கிராண்டர் ஆகிய கண்ணி வெடிகள் மீட்கப்பட்டன. ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தை அண்டி உட்பட்ட பிரதேசத்திற்கு நாம் பார்வையிட்ட போது இந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் 85 ஊழியர்கள் தமது பணியினை மேற்கொண்டனர்.
இங்கு பிரதான தொழிலாக மக்கள் விவசாயத்தினை செய்துள்ளார்கள். ஆனால் யுத்த காலத்திற்கு பின்னர் இந்தப்பிதேசம் மிகவும் பற்றைகளும் காடுகளுமாக காணப்படுகிறது. மக்களின் வீடுகளும் இடிந்த நிலையில் காணப்படுகிறது. இப்பிரதேசம் இப்போது மக்களின் மீள்குடியேற்றத்திறிகாக அரசினால் தீர்மானிக்கப்பட்டு கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. கண்ணி வெடிகள் இல்லை என்று இனங்காணப்பட்ட பகுதிகளில் மக்கள் சென்று தமது காணிகளையும் வீடுகளையும் பார்வையிடுவதோடு சிலர் தமது காணிகளில் வளர்ந்துள்ள பற்றைகளை அகற்றி மீண்டும் குடியேறுவதோடு விவசாயத்தினையும் செய்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளிகின்றனர், இன்னும் சிலர் உடைந்த தமது வீடுகளை மீண்டும் திருத்தி அமைத்து வருகின்றனர்.
இங்கு மக்களின் மீள்குடியேற்றத்திற்காக ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் ராணுவத்தினரின் முகாம்கள் இன்னமும் இருக்கின்றன. மக்களின் நடமட்டங்கள் குறைவாகவே காணப்படுகின்றது. வீதிகளும் புணரமைக்கப்பட்டு வருகின்றது. முழுமையாக மிதிவெடிகள் இன்னமும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்கம் - என்.நிருஷாந்த்
Continue reading →

நாகர் கோவில் மீள் குடியேற்றம் ஓரு பார்வை

0 comments
வடமாரட்சி கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தன் ஒரு பகுதி தற்பொழுது முழுமையாக கண்ணிவெடி அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளானர். J/424 கிராமசேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசமே இவ்வாறு கண்ணி வெடி அகற்றப்பட்டு மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளது.


 இப்பிரதேசம் 1995ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தினால் மக்கள் அகற்றப்பட்டு இடம்பெயர்க்கப்பட்டமையாகும். இவ்வாறு இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் வன்னி மற்றும் யாழ் மாவட்ட ஏனைய பிரதேசங்களில் வசித்து வந்தானர். யுhழ்ப்பாணம் படையினரால் கைப்பற்றப்பட்ட முதல் இப்பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடணப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறு காணப்பட்ட இப்பிரதேசம் கடந்த நவம்பர் மாதம் 24ம் திகதி மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டது. இவ்வாறு விடப்பட்ட மக்களுக்கு இதுவரை வீடுகள் அமைப்பதற்கான 12 தகரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர எந்த வித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கப்படவில்லை.என மக்கள் தெரிவித்தானர். இது பற்றி J/424 பகுதி கிராமசேவையாளரான சே. பாலசுந்தரம் அவர்களை கேட்டபோது நாங்கள் தற்போது மீளக்குடியமர்த்தப்பட்டவர்களின் விபரங்களை திரட்டுகின்றோம். மேலும் படையினருடன் இணைந்து வெடிப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வுகளை நிகழ்த்தி வருகின்றோம். இது தவிர மலசலகூடம் அமைப்பதற்கு சில நிறுவனங்களை கேட்டுகொண்டுள்ளதாகவும். ஆத்துடன் குடிநீர் வசதிக்கான ஏற்காடுகளையும் சேவலங்கா உதவியுடன் செய்து வருகின்றோம் மக்களின் பாதுகாப்பு மற்றும் அவாகளின் நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பாக முடிந்தளவு உதவிகளைச் செய்து வருகின்றேன் எனக் குறிப்பிட்டார் எனவே இப்பிரதேசத்தில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகளில் கூடியளவு அக்கறையுடன் செயற்பாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.


ஆக்கம் - நிருஷாந்த்

Continue reading →

உலர் உணவுப்பொருள் நிறுத்தப்பட்டதனால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்

0 comments





    எமது நாட்டில் யுத்தம்  முடிவடைந்த நிலையில் வன்னியில் இருந்து இடம்பெயர்த  மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உலருணவுப்பொருட்களானவை தற்பொழுது அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது சொந்த இடங்களுக்கும் திரும்ப முடியாத நிலையில் உணவுக்காகத்திண்டாடும்  மக்கள் சிலரின் கருத்துக்கள் இங்கு பிரசுரமாகின்றது.      
வடிவேலு புஸ்பமலர் (வயது-46)
நாங்கள் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து இங்கு வந்து குடியேறியுள்ளோம். கணவர் மனநோயினால் பாதிக்கப்பட்;டவர் எனக்கு ஏழு பிள்ளைகள் அதில் இருபிள்ளைகள் திருமணம்முடித்து விட்டனர் ஒரு மகன் முள்ளிவாக்காலில் காணாமல் போய்விட்டார் மற்றொரு மகன் தடுப்புமுகாமில் இருக்கின்றார் மற்ற மூன்று மகள்களும் பாடசாலையில்படிக்கின்றனர் திருமணம் முடித்த மகனே எங்கள் குடும்பச்செலவுக்கு உதவிசெய்கின்றார் சிலவேளைகளில் தடுப்பில் இருக்கும் மகனை பார்க்கசொல்வதானால் அதிக பணம் செலவாகும் மகனின் உதவியுடன் உலர் உணவுப் பொருள்களும் கிடைத்தபடியால் ஏதோ உணவுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வாழ்கை சென்று கொண்டிருந்தது. ஆனால் கடந்த மூன்று மாதங்களாக உலர்உணவுப்பொருள்கள் நிறுத்தப்பட்டதனால் நாங்கள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளோம.;


Continue reading →

பண்பாட்டு மண்ணில் பாரம்பரிய கலை

0 comments

ஈழத்தில் பொதுவாக பாரம்பரிய கலைகள் மருவி வருகின்ற சுழ்நிலையில் யாழ் மண்ணில் தமிழர் தம் வாழ்வியலை பிரதிபலிக்கின்ற கலைவடிவங்களை இன்றைய இளம் சமுகம் மத்தியில் தெரியப்படுத்தும் நோக்கில் தென்னிந்தியாவின் ஆதித்தமிழர் இயக்கத்தின் கலைத்தலைவர் ஆடல் அரசு என்றழைக்கப்படுகின்ற வேணு அவர்கள் யாழ் மண்ணில் நிகழ்த்திய ஆற்றுகை எம் பாரம்பரிய கலைகளுக்கு மேலும் புத்துணர்ச்சி கொடுத்திருக்கிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையமும் செயற்திறன் அரங்க இயக்கமும் இணைந்து ஒழுங்கமைத்த பாரம்பாரிய கலைகளின் ஆற்றுகை என்ற நிகழ்ச்சி யாழ் மண்ணில் பல இடங்களில் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டுள்ளது.
முதலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றப்பட்ட இப்பாரம்பரிய கலை வடிவங்களின்;  ஆற்றுகை பார்வையாளர்களின் மனதில் பெரும் களிப்பினை உண்டு பண்ணியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது தடவையாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் அரங்கேற்றப்பட்ட போது அங்கு பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களின் அவாவாக இருந்தது இவ்வறான கலை வடிவங்களின் ஆற்றுகைகளை தமது பிரதேசங்களிலும் அரங்கேற்ற வேண்டும் என்பதே மேலும் அவர்கள் கூறுகையில் இவ்வறான கலைவடிவம் பற்றி பாடப்புத்தகம் வாயிலாகவே படித்திருந்த தமக்கு முதன் முறையாக தற்போதுதான் செயன்முறை வடிவில் பார்க்கின்ற வாய்ப்பை தமிழ்நாட்டு கலைஞன் வழங்கியிருக்கிறார் என்பதே பொதுவாக நோக்கும்போது இன்றைய காலகட்டத்தில் பரதம் என்கின்ற பரதநாட்டியத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதாவது மக்கள் அதன் மீது கொண்டுள்ள ஈடுபாடு அதை நிலைநாட்ட வேண்டும். என்பதில் காட்டுகின்ற ஆர்வம் எமது பாரம்பரிய கலைகள் மீது அவர்கள் வைப்பது இல்லை. இவ்வறான சுழ்நிலை நிலவுகின்றபோது தமிழ் நாட்டின் சென்னை பல்கலைக்கழகத்தினால்  நெறிப்படுத்தப்பட்டு வருகின்ற ஆடல் அரசு என்கின்ற வேணு அவர்களை கொண்டு சென்னைப் ;பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்த காலத்தில் இவ் முற்றம் கலைக்குழவை ஆரம்பித்து வைத்த தற்போதைய யாழப்பாண பல்கழைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையம் மற்றும் செயற்தி றன் அரங்க இயக்கத்தின் இயக்குனர் தே.தேவானந்; அவர்கள் இன்று முன் கொண்டு வந்துள்ளார்.
 புழுதியின் கீதங்கள, எல்லாம் சரிவரு ம், அக்கினி பெருமூச்சு, வண்டியும் தொந்தியும், எனப் பல்வேறு நாடகங்களை நெறியாள்கை செய்து வருகின்ற தே.தேவனாந் அவர்கள் தற்பொழுது பராம்பரிய கலைவடிவங்களை யாழ் மண்ணில் வளர்த்தெடுப்பதிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். இதன் ஆரம்ப கட்டமாகவே தமிழ்நாட்டின் கலையாக விளங்குகின்ற சாட்டைக்குச்சி தப்பாட்டம் ஓயில் கும்மி ஆதிவாசி நடனம் ஆகிய கலைவடிவங்களை யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவர்களையும் மற்றும் செயல்திறன் அரங்க இயக்கத்தின் நாடக மாணவர்களையும் கொண்டு இக்கலை வடிவங்களை அரங்கேற்றுவதற்கு திட்டமிட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார். இப் பாரம்பரிய கலைவடிவங்களை ஈழத்தழர் மத்தியில் கொண்டு வந்த பெருமை இவரையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்கம்-ஹம்சா.எஸ்


Continue reading →

மரக்கறிச்சந்தை

0 comments
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட சந்தைகளுள் பெரிய சந்தையாக விளங்குவதே திருநெல்வேலி சந்தையாகும் .இங்கு ஒவ்வொரு நாளும் அதிகமான மக்கள் வந்து மரக்கறி கொள்வனவு செய்வதைக் காணக்கூடியதாக உள்ளது.அதிகாலையிலே இச்சந்தை கூடி விடுவது வழைமயானது. அன்று காலை 9.00 மணியளவில் அச் சந்தையில் மரக்கறிக் கொள்வனவில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட படங்கள்.


ஆக்கம் - புவிதா.ப
Continue reading →

கண்ணில் வழியும் வேதனை

0 comments


வலிகளோடு ஏக்கங்களை சுமந்தபடி இருக்கின்றது மீள்குடியேறிய மக்கள் விழிகள்! சோந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததால் அப்பா என்ற ஒரு ஆறுதல். வேதனைகளை நெஞ்சுக்குள் மறைத்துக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள். 


நாகர்கோவில் மேற்குப் பிரதேச மக்கள் கடந்த வருடம் யூலை மாதம் தம் சொந்த இடம் திரும்பியிருக்கின்றார்கள். அவ்விடத்திற்கு களப்பயிற்சிக்காக சென்ற போது ஒரு குடும்பத்தினரை சந்தித்தேன்.


சந்தியோ சூரியமதி! முப்பது வயதேயான குடும்பப் பெண்.  விழிகளில் சூரியனையும் காணவில்லை: சந்திரனையும் காணவில்லை. அமாவாசைக் காடாய் அச்சம் நிறைந்த விழிகளுடன் தன் வாழ்க்கைப் பதிவுகளை என்னிடம் இறக்கி வைத்தார். 




இவர் மூன்று பிள்ளைகளுக்கு அம்மா. கணவன் யுத்தகாலத்தில் காணாமல் போய் விட்டார். அன்றிலிருந்து பிறந்த வீட்டுவாசம் தான்! “வீட்டில ரீ.வி இல்லையென்டு வாங்கிறதுக்குப் போனவர் திரும்பி வரவே இல்லை. எல்லாரும் அவர் செத்திட்டார் என்டு சொல்லிச்சினம். நான் நம்பேல்லை. நான் கண்ணால பார்த்தா தானே நம்ப முடியும். சின்ன வயசிலேயே இழந்துட்டன் என்டு… அவர் போகேக்க என்ர கடைசி கலைவாணி பிறந்து மூணு நாள் தான்” என்று விக்கிவிக்கி அழுகின்றார்.


தரம் மூன்று படிக்கும் தனுசன் படிக்க வேண்டியது நான்காம் ஆண்டில். ஆனால் யுத்த காலத்தில் அவனது படிப்பு வீணாகிப் போய்விட்டது. கலைவாணி தலம் இரண்டில் படிக்கிறாள். இடையில் சூரியதீபன். இவன் தான் பிரச்சினைக்குரியவன். பாடசாலைக்குப் போவதில்லை. 




சூரியதீபனுக்கு அவனின் அப்பா ஞாபகம். அதனால் அவனது மூளையில் தாக்கம் என்கின்றார் அவன் தாயார். முனவியாதியா என்று தெரியவில்லை. வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறவர்களிடம் தினமும் அர்ச்சனைகள் வாங்காமல் இருப்பதில்லை. தினம்தினம் சண்டைகள்.


“விசரியின்ர பிள்ளையென்டு சனங்கள் திட்டுதுகள். அப்பன் இருந்தா இப்படி விடுவாரே. அண்டைக்கும் இப்படித் தான். சாமம் போல கடலுக்குள்ள விழப் போட்டான்” என்கிறார் தாய். 
பள்ளிக்கூடத்தில் அடிதடி. தாறுமாறான சிறுபிள்ளைத்தனப் பேச்சுக்கள். இதனால் பள்ளியில் இருந்து இவனை நீக்கி விட்டார்கள். 


தனக்கும் சின்ன வயசில் மலேரியா நோயம் வந்து மூலவருத்தம் இருக்கின்றது என்கிறார். வாய்க்குள் இருந்து இரத்தம் இன்றும் வந்து கொண்டு தான் இருக்கின்றது. சத்தான மா போக்ற பொருட்கள் கூட வாங்க வசதி இல்லை. 


“எங்களுக்கு என்ன கஷ்ரம் வந்தாலும் பரவாயில்லை. நான் கேட்கிறது என்ர சூரியதீபனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை தான். எல்லாரும் சொல்லுறாங்கள். எங்கேயோ ஒரு கொஸ்ரல் இருக்குதாம். அங்க கொண்டு போய் விடட்டாம் என்டுறாங்கள். எனக்கு அந்த இடங்கள் தெரியுமே: தெரியாது தானே” என்கிறார் கண்ணீரைத் துடைத்தபடி!


யுத்தத்தின் பிடியில் இருந்து தப்பித்து வந்தவர்கள் இன்று மனம் எனும் அரக்கனிடம் இருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கின்றார்கள். சூரியதீபனை சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்த்து விடுங்கோ என்று தவிக்கின்றார் இந்த தாய். இந்த சூரியதீபனைப் போல இன்னும் எத்தனை சிறுவர்களோ தெரியவில்லை.  

ஆக்கம் - கௌசி.மு

Continue reading →

என் பயண அனுபவம் தந்த சுகமும் துக்கமும்…

0 comments
கடந்த மாதம் தென்னிந்தியாவிற்கு ஊடகப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தோம். ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்பயணம் ஊடக அறிவினை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்டதாகும். ஓவ்வொரு பயணமும் ஏதாவது ஒரு அனுபவத்தை சொல்லிக் கொண்டே இருக்கும்.


Continue reading →

கொழும்பில் ஊடகப் பயிற்சிப் பயணம்

0 comments

அனுபவங்கள் தான் மனிதனை செம்மையாக்குகின்றது. எம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் எம்மை தூக்கி நிறுத்துகின்றன. வெற்றி தோல்வியை சமதளத்தில் வைத்து எம்மையே பூர்த்தி செய்ய வைக்கின்றது.

நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் முழுநேர இதழியல் கற்கைநெறி பயிலும் மாணவி. பரீட்சை முடிந்தவுடனேயே எமக்கான உள்ளகப் பயிற்சிப் பயணம் கொழும்பை நோக்கி ஆரம்பித்தது.


Continue reading →
Wednesday, February 15, 2012

மறக்கமுடியாத இந்தியப்பயணம்

0 comments





எமது ஊடகப்பயணமானது இரண்டாவது தடவையாக தமிழ்நாட்டுப்பயணம். இந்த ஊடகப்பயணத்தில் இந்தியா சென்று யாழ்ப்பாணம் வரும் வரை பல அனுபவங்கள் தோன்றியுள்ளது. கொழும்புப்பயணத்தின் அனுபவப்பகிர்வு யாழ்ப்பாணம் வந்தும் மறப்பதற்கு ஒரு வாரம் சென்றது. இது தமிழகப்பயணமல்லவா? அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா? யாழில் இருந்து கொழும்பு செல்லும் போது சாதரணமாக இருந்தது. ஆனால் 12.30 மணியளவில் விமான நிலையத்தில் இறங்கி  இருந்த இடங்களில் சின்னத்தூக்கம் போட்டது இன்றும் மறக்கமுடியாதது  காலை 04.00 மணியளவில் விமானநிலையத்தினுள் நுழைந்தோம்.  சென்றதும் விமானமா? எத்தனைபதிவுகள், எத்தனை சோதனைகளின் பின்னர் அங்கு விமானத்திற்கு செல்வதற்கென பதிவுகளை செய்து விமானத்தில் பயணித்தது புது அனுபவம். காலை 08.30 மணிக்கு எமது கால் சென்னை விமானநிலையத்தில்  பதிந்தது. சிறுது ரேம் என் கண்கள் அங்கும் இங்கும் அலைந்து சென்றது.  அங்கிருந்து சென்னை சாந்தோம் தங்குமிடத்திற்கு சென்றோம்.  எல்லோரையும் ஒரு மணிநேரத்தின் பின்னர் ஓய்வு எடுத்து விட்டு வருமாறு பணிக்கப்பட்டோம்.  எனக்கு  ஒரு மணி நேரம் போதாது போல் இருந்தது. என்ன செய்வது குட்டித்தூக்கம்  போட்டோம். அதிகாலைச் சூரியனில் கடற்கரை மணல் மீது நின்று மெரினாவில் உடற்பயிற்சி செய்த அனுபவம் புதியது. காது இனிக்க கேட்க கடலலை ஓசை உடலில் படும் உப்புக்காற்று உற்சாக மூட்ட நண்பர்களோடு இணைந்து செயற்பட்டோம்.
முதல் நாள் சேரிப்புறங்களுக்கு களப்பயிற்சிக்காக செல்வதற்கான ஏற்பாடு சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நாமும் சென்றோம் சேரிக்கு சென்றது எனக்கு புதிய அனுபவம்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொலைபேசி கதைப்பது என்பது மிகவும் கஷ்ரமாக இருந்தது. அவ்வாறான நிலையில் மூன்று தொலைபேசியைக்கொண்டு நாளுக்கு மூன்று நாள் கதைப்போம். அதுவும் நாங்களாக எடுக்க முடியாது. அவங்கள் எடுத்தால் மட்டும் 05 நிமிடம் பேசுவோம். எல்லோரிடமும்  கொடுத்து வாங்குவது மிகவும் கடினமாக இருந்தது.
சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து நாம் தங்கியிருந்த இடம் வரை நண்பர்களோடு இணைந்து ஒரு நாள் நடந்தே சென்றோம் இது ஒரு அனுபவம்.
சென்னை பல்கலைக்கழக மாணவர்களுடன் இனைந்து சென்னையின் நகர் பகுதிகளிற்கு பயணம் செய்து அவர்களுடனும் எமது மாணவர்களுடனும் சேர்ந்து நான் சினிமாவில் பார்த்த இடங்களை நேரில் பார்த்தேன். சினிமாவில் இந்த இடங்களை பார்க்கும்  போது ஆசையாக இருக்கும். இது வரைக்கும்  இலங்கையில்  கூட பல இடங்களுக்கு செல்லவில்லை. வரலாற்று இடங்களை பார்வையிட்ட இடங்கள் ஒவ்வொன்றுமே மிகவும் பயனுள்ள இடங்களாக அமைந்ததோடு புதுப்புது இடங்களாகவும் புதிய அனுபவங்களையும் தந்தது. ஆனால் சென்றவுடன் சென்னை இதழியல் கல்லூரி மாணவியான தர்மினி அக்கா எங்களிடம் சுநிழசவ கேட்பா அதனால் பஸ் ஓட ஓட எழுதியது மறக்கமுடியதாதது.
இறுதி நாளன்று இந்தியாவை விட்டு இலங்கை வருவதற்கு தயாராகி சென்னை பல்கலைக்கழகத்தில் இறுதி ஒன்று கூடல் இடம்பெற்றது. அந்த ஒன்று கூடலின் முன்னரே எமது இயக்குணர் தே. தேவானந் சேர் கூறினார் இன்று எமக்கு இலங்கை செல்வதற்கு 03.00 மணிக்கு விமானம் பதியப்பட்டுள்ளது நாம் அனைவரும் 12.00 மணிக்கு விமான நிலயத்திற்கு செல்ல வேண்டும் அதற்கு முன்னர் நாம் இந்தியாவிலிருந்து இலங்கை செல்வதற்கான விமானப்பதிவுப்பத்திரத்தை எடுக்கவேண்டும் அதனால் நாம் எல்லோரும் 11.00 மணியளவில் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து புறப்பட்டு விட என்று கூறினார்.
பழகினர்வர்களை பிரிவது என்பது எல்லோருக்குமே கஷ்டம் தான். அன்று எல்லோருமே பயணத்தை மறந்து தாம் பழகிய உறவுகளுடன் கூடிக்கதைப்பதுவும் தமது குறிப்புத்தகத்தில் ஓட்டோகிறாப் வாங்குவதுமாக நின்றதனால் ( நானும் தான் ) நாம் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து மீளப்பதிவு அலுவலகத்திற்கு செல்லும் நேரம் சென்று விட்டது. ஒரு வாறாக படிவங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட்டு 01..30 மணியளவில் அலுவலகத்தில் இருந்து இந்திய விமான நிலயத்திற்கு செல்ல புறப்பட்டு அங்கு 02.05 மணிக்கு போய் சேர்ந்தோம். சென்னைப்பல்கலைக்ழக மாணவர்கள் எம்முடன் கூடவே வந்து அனுப்பி வைத்தார்கள்.
அங்கு எமக்காக விமான நிலைய ஊழியர்களும் அவசர அவசரமாக எம்மை சோதனை செய்து உள்ளே அனுப்பினார்கள் உள்ளே அவசர அவசரமாக எமது பரிவுகளை மேற்;கொண்டார்கள். அந்த வேளை எனது பொதிப்பை பிரிந்து விட்டது. அதற்குள் இவ்வாறு ஆகிவிட்டதே என்று நான் மிகவும் வேதனைப்பட்டு 250.00 ரூபா செலுத்தி பதிவுகளை மேற்கொண்டேன். அந்த நிகழ்வு பற்றி நான் வீடு சென்றும் எல்லோருக்கும் சொல்லியது மறக்கமடியாதது.  எல்லாருமே பதிவுகளை முடித்து விட்டு  ஒரு வாறு விமானத்தினுள் ஏறிக்கொண்டோம்.  நாங்கள் சென்னை செல்லும் போது காதுகள் எல்லாம் அடைத்தன. ஆனால் இலங்கைக்கு வந்த சந்தோசத்தில் விமானப்பயணம் மாணவர்களுடன் சந்தோசமாக கழிந்தது. 04.30 மணிக்கு இலங்கை விமானநிலையத்தில் இறங்கினோம். ஆனால் யாழ்ப்பாணம் வருவதற்கு பஸ்ஸிற்கு காத்திருந்தது ஒரு மணிநேரம். 06.30 மணிக்கு பஸ்ஸில் ஏறினோம். யாழ்ப்பாணப்பயணம் மாணவர்களுடன் சந்தோசமாக கழிந்தது.

ஆக்கம்- சுபத்ரா.எம்





Continue reading →

கொழும்பு அனுபவம்

0 comments

ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் இருந்து 06.09.2011 இரவு 07.30மணிக்கு ஆரம்பித்த எம் பயணம் மறு நாள் காலை 06.30ற்கு கொழும்புத்தழிழ்ச்சங்கத்தை அடையும் வரை தொடர்ந்தது. பயணத்தின் அன்றைய இரவு முழுவதும் எமது சக மாணவர்களுடன் சந்தோசமாக கழிந்தது. மறு நாள் காலையில் 06.30 மணிக்கு கொழும்புத்தழிழ்ச்சங்கத்தை சென்றடைந்தோம்.          
ஒரு மணித்தியாலங்களில் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் உடனடியாக தயாராகுமாறு பணிக்கப்பட்டோம். குளிக்கச் சென்றவர்களை வெளியே அழைக்க பட்ட பாடு போதும் போதும் என்று ஆயிற்று. விரைவாக குளித்து விட்டு அரைகுறை தயார் நிலையில் பேரூந்தில் ஏறிக்கொண்டோம்.  காலைச்சாப்பாடு ஒடும் பேரூந்தில். தூக்கம் கலையாத கண்கள் தூக்கத்தை தேடியபடி பாராளுமன்றத்தை நோக்கிச்சென்றது..
பாராளுமன்றம் அமைந்துள்ள பத்தரமுல்ல பிரதேசத்தை அடைந்ததும் எல்லோரும்பேரூந்தில்இருந்துஇறங்கிகிக்கொண்டோம். பாராளுமன்றத்தினுள் நுழைய முன் எமக்கு பல ஆலோசனைகள்  பாராளுமன்றத்தில் போய் உட்காரும் போது காலுக்கு மேல் கால் போடக்கூடாது கதைக்காதீர்கள் என பல அறிவுறுத்தல்கள். அதனை விட தலையில் அணிந்திருந்த கிளிப் முதற் கொண்டு கீழே விழுந்தால் சத்தத்தை ஏற்படுத்தும் என்று நினைப்பவை அனைத்தும் களையப்பட்டது. உள்ளே நுழைந்தால் நான்கு இடங்களில் பொலிஸாரின் உடற்சோதனை. முதன் முதலில் பாராளுமன்ற அமர்வினை நேரடியாகப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. என்றும் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவம். அங்கு கட்சி அமைச்சர்களது பேச்சு கூட்டத்தின் போது தமக்குள் ஏதோ பேசிச் சிரித்தல் போன்ற அவர்களது செயற்பாட்டை அவதானிக்க முடிந்தது. அமைச்சர்களது பேச்சு ஒரு புறம் நடை பெற இங்கு அதை அவதானிக்க வந்த எம்மவர்களின் கண்களை தூக்கம் வருடியது  நாம் மட்டுமல்ல தூக்கத்தில் இருந்தது. ஒரு ஊடகவியலாளர் கூட தூங்கிற்றிருந்ததை நான் பார்த்தேன்.
      மறு நாள் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிற்கு சென்றோம். பல மூத்த பத்திரிகையாளர்கள் வருகை தந்திருந்த அம் மாநாட்டுக்கு நாமும் சென்றது மறக்க முடியாத மற்றுமொரு அனுபவம். அன்றைய நாள் மற்றுமொரு மறக்க முடியாத அனுபவம் என்னவெனில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாராளுமன்றம் சென்ற போது காணப்பட்ட சோதனைகள்இங்கும் இருக்குமோ என எதிர்பார்த்தோம். ஆனால் எவ்வித விசாரணையுமின்றி அமைச்சரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது மட்டுமன்றி உயர் கல்வி தொடர்பான பல விடயங்களை கலந்துரையாட முடிந்தது.
   அன்றைய தினம் பிற்பகல் காலிமுகத்திடலுக்கு செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு பார்க்கும் இடங்களில் எல்லாம் காதல் ஜோடிகள் தம்மை மறந்து காதலில் ஈடுபட எம்மோடு வந்த சகநண்பர் கூட்டம் அவர்களை நோக்கியபடி நின்றனர். நாம் கடலில் இறங்குவதும் பின் ஏறுவதுமாக விளையாடினோம். அன்றைய தினம் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.
          அடுத்த நாள் காலையில் கொழும்பு இதழியல் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து பங்குபற்றியமை மற்றுமொரு சிறந்த அனுபவமாகும். சிங்கள ஊடக மாணவர்களின் புதிய புதிய தோழமைகள் கிடைத்தமை மற்றமொரு அனுபவம்.
                     மகரகம களனிப் பல்கலைக் கழகத்திற்கு செல்லும் வாய்ப்பும் அங்கு இடம்பெற்ற மருத்துவ பீட மாணவர்களால் நடாத்தப்பட்ட கண் காட்சியை பார்க்கும் சந்தர்ப்பம்கிடைத்தது. அது மட்டுமின்றி அப்பல்கலைக்கழக சுப. றெஜினோல்ட் அவர்களை நேர்காணும் வாய்ப்பு கிடைத்தது.
           அத்துடன் மகாராஜா நிறுவனத்துக்கு செல்ல வேண்டும் அங்கு நடைபெறும் செயற்பாடுகளை நேரடியாகக் காண வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆவல். இப் பயணத்தின் போது அவ் ஆவலும் நிறைவேற்றப்பட்டது. நேறள கசைளவ கலையகம் மற்றும் செய்தியறையின் நிர்வகிப்பினைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அதுமட்டுமன்றி சக்தி T.V, M.T.V ருபவாஹினி கலையகங்களை நேரடியாக பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.  Spell masterஎனும்  M.T.V   நிகழ்ச்சியின் ஒளிப்பதிவினை நேரடியாகக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. தொலைக்காட்சி நிகழ்வினை நேரடியாகக் காண முடிந்தமை மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
     தினகரன்), வீரகேசரி போன்ற பத்திரிகை நிறுவனங்களுக்கு சென்றோம். பத்திரிகை அச்சிடல்இழடெiநெ நெறள பற்றிய தகவல் விநியோகம் அத்துடன் தொடர்பாக மேலதிக அறிவினைப் பெற முடிந்தது. அடுத்து டீடழழபநச தொடர்பான கலந்துரையாடல் உரையாடி பல முறையான அறிவினைப்பெற்றுக்கொண்டோம்.
               இத்தகைய ஊடகப்பயணத்தில் பல புதிய விடயங்களை அறிந்து கொள்ள முடிந்ததுடன் பல புதிய ஊடக வியலாளர்கள் ஊடகத்துறை நண்பர்களுடன் தொடர்பினை மேற்கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைத்தது. நல்ல மனப் பாங்குடையவர்களுடனும் சேர்ந்து பழகும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. என்றும் மறக்க முடியாத புதிய அனுபவத்தை இப் பயணம் பெற்றுத் தந்தது. எனவும் கூறலாம்.
 
ஆக்கம் - சுபத்ரா.எம்

Continue reading →

மீளாத நிலையில் மீள்குடியேற்றம்

0 comments


தொலைந்து போன வசந்தங்களை தேடி தெல்லிப்பளை கிராம மக்கள் நகர்வடைந்து கொண்டிருக்கிறார்கள் யாழ்ப்பாணத்திலிருந்து 8 கிலோ மீற்றர் வடக்கே அமைந்துள்ள தெல்லிப்பளை கிராமம் 21 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தின்கட்டுப்பாட்டிலிருந்து இன்று மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர் . 21 வருடற்களாக தாய் நிலத்தின் சுவாசக்காற்றை சுவாசிக்காத மக்கள் அலைகடல் போல் திரண்டு செல்கின்றனர்
இயந்திரப்பறவைகள் போட்ட குண்டுகளால் சிதைந்து போன சிதைந்து போன வீடுகளும் ஓங்கி வளர்ந்த மரக்கூட்டத்தையும் தவிர வேறு எதுவும் இல்லை.யாழ்பாணத்திற்கு பெருமை சேர்க்கும் பனக்கூட்டங்களும் வீடுகளின் எஜமானாய் வரவேற்க காத்திருக்கும் பாம்புகளின் ஆவலையும் காண முடியும் .
மிதி வெடிகள் முழுமையாக அகற்றப்படாமல் கால்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

தேர்தல் காலம் வந்ததும் வாக்குகளை பெறுவதற்காக உதவி என்ற பெயரிலே வாக்கு கேட்கும் வேட்பாளர் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது . இவர்களுக்கு இவ்வாறு சின்ன சின்ன உதவிகள் தேவையில்லை. 21 வருடங்கள் அகதி முகாம்களில் வாடகை வீடுகளில் வாழ்ந்த மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்யுங்கள் இவர்கள் அலைந்து திரிந்து ஓய்ந்த நிலையில் நிம்மதியான வாழ்வை வாழ வழி செய்யுங்கள்.

ஆக்கம் - சுபத்ரா.எம்
Continue reading →

பழமை வாய்ந்த நகுலேஸ்வரம்

0 comments


யாழ்ப்பாணத்தில் வடமேற்குத்திசையில் ஏறத்தாழ 15 கிலோமீற்றர் தொலைவில் மாவிட்டபுரம் அமைந்துள்ளது. அங்கே கோயில் கொண்டருளும் ஆலயம் மாவிட்டபுரக்கந்தசுவாமி ஆலயமாகும். இது மா என்றால் குதிரைமுகம் நீங்கிய தலம் என்றும் கி.பி 07ம் நூற்றாண்டில் இந்தியதிசையுக்கிய சற்சன சோழப்பெருமன்னனின் மகள் மாருதப்புரவீகவல்லியின் குதிரைமுகம் நீங்கிய தலமே மாவிட்டபுரம்.

அரச குடும்பத்தினர் இந்தியாவில் இருந்து தேடிவந்து தரிசித்தனர் என்பதானாலும், மாருதப்புரவீகவல்லியின் கொடிநோய் நிங்கியதனாலும் நன்றிக்கடனாக இக்கோயிலைக்கட்டினார் என்றும் வரலாற்றுரீதியாகவும், வைபவரீதியாகவும் கூறப்படுகிறது.

இத்தலத்தின் கட்டிடங்களும், சிற்பங்களும் மிகவும் பழமைவாய்ந்தாக காணப்பட்டது என்றும் 1990ம் ஆண்டில் வடக்கில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடிக்கப்பட்டது என்றும் தற்போது அதன் வேலைகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருப்பதாகவும் இன்னும் 03 மாதகாலங்களில் அனைத்து வேலைகளும் நிறைவடைந்துவிடும் என்றும் ஆலயப்பரிபாலசபையினரான ஆனந்தயோகேந்திரன் தெரிவித்தார்.
மாவிட்டபுர மகோற்சவக்காலம் ஆடியில் இடம்பெறும்.15 வது தினமாகிய ஆடிஅமாவாசை அன்று முருகன் திருவுலாச்சென்றருளி மாவிட்டபுரத்தில் இருந்து 05 கிலோமீற்றர்தூரத்தில் உள்ள கீரிமலை புனித தலத்தில் தீர்த்தஉற்சவம் நடைபெறும். யாழ்ப்பாணக்குடாநாட்டில் இறைபதம் அடைந்தவர்களின் அஸ்தி எனப்படுகின்ற திதி செய்யப்படுதல் இந்தத்தீர்த்தத்தில் ஆகம். அதுவே ஆடிஅமாவாசை சிறப்புமிக்க விரதமாகும். தினந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்புப்பூசைகள் இடம்பெற்று வருகின்றன.

ஆக்கம்-  சுபத்ரா.எம்
Continue reading →

சுகாதார சீர்கேட்டில் யாழ் உணவகங்கள்

0 comments




குடாநாட்டில்  தற்போதைய சனத்தொகைக்கு ஏற்ப உணவகங்களின் தேவையும் இருந்து வருகின்றன.தற்போது வெளிமாவட்டங்களிலிருந்து பெருமளவிலான மக்கள் குடாநாட்டுக்கு வருகின்றமையினாலும் இங்கு வந்து தங்ககின்றமையினாலும் மக்களுக்கு உணவகங்களின் தேவை முக்கியமானதொன்றாகிவிட்டது. ஆனால் இந்த உணவகங்கள் மக்களின் சுகாதாரத்தையும் பொருளாதாரத்தையும் முன்னிலைப்படுத்துகின்றதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.அத்துடன் இன்றைய உணவகங்களில் வேலை செய்பவர்கள் தேகஆரோக்கியம் உடையவர் என்பதை உறுதிப்படுத்திய அடையாள அட்டையை ஒவ்வொரு வருடமும் மாநகரசபையின் சுகாதாரப்பகுதியில் பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியமானது.ஆனால் இது கடைப்பிடிக்கப்படுகின்றதா?என்ற கேள்விக்கு இதுதொடர்பாக சுகாதாரப்பிரிவினர்அக்கறை செலுத்துவதில்லை என்பதே மக்களின் கருத்தாகின்றது.



அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் தகுந்த உடை அணிந்து வேலையில் ஈடுபடுவதில்லை. தடிமன்,சொறி சிரங்கு என்பவற்றுடன் இருப்பவர்களும்வேலையில் ஈடுபடுதல்,உணவகங்களை சுத்தம் செய்பவர்களே உணவுகளையும் பரிமாறுகின்றனர்,சில உணவகங்களில் உணவு பரிமாறுபவர்கள் சுகாதாரம் அற்ற முறையில் அழுக்கான ஆடைகளை அணிந்துகொண்டும் உணவு பரிமாறுகின்றனர்.முக்கிய பகுதியான சமையல் பகுதியை அவதானித்துப் பார்த்தால் அங்கு சுகாதாரம் இருப்பதில்லை.சமையலுக்குப்பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் முதற்கொண்டு சமையலில் ஈடுபடுவதைவிட சுகாதாரம் அற்றதாகவே காணப்படுகின்றது.சில உணவகங்கள் சைவம்,மாமிசம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் ஒரே பாத்திரங்களைப் பயன்படுத்தியே உணவுகளைத் தாயாரிக்கின்றன.இது தொடர்பாக யாழ் மாநகரசபையின் சுகாதாரப்பிரிவினரிடம் கேட்டபோது,தற்போது யாழ் குடாநாட்டில் உள்ள உணவகங்கள் பலவற்றில் சுகாதாரச் சீர்கேடுகள் பல இடம்பெற்று வருகின்றன.இதன் பிரதான காரணம் உணவகங்களை நடாத்தும் உரிமையாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமையே ஆகும்.உணவு நிலையங்களில் வேலை செய்யும் வேலையாட்களுக்கும் சுகாதாரம் தெடர்பான அறிவு காணப்படுவதில்லை உணவுச் சுகாதாரம் தொடர்பாக உணவக உரிமையாளர்களுக்கோ ஊழியர்களுக்கோ போதியளவு அறிவு இருப்பதில்லை 26 ஆம் பக்க உணவுச்சட்டம் பற்றிய ஒழுங்குவிதிகள் பற்றி உரிமையாளருக்கோ உற்பத்தியாளருக்கோ போதிய விளக்கம் இருப்பதில்லை.அவர்கள் அது பற்றிய அறிவினைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதில்லை. அசட்டயீனமாக இருக்கின்றார்கள்.

Continue reading →

21 ஆண்டுகளின் பின் சொந்த மண்ணில்.

0 comments

யாழ்ப்பாணம் வலிவடக்கு பிரதேசத்தில், தெல்லிப்பழை உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த கொல்லங்கலட்டி பிரதேசத்தில் இருந்து 1990இல்  இடம் பெயர்ந்து சென்ற மக்கள் மீண்டும் 2011 ஆவணிமாதம் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

தற்போழுது குறைந்தளவான மக்களே அடிப்படை வசதிகள் ஏதும் அற்ற நிலையில் வசித்து வருகின்றனர். அரசாங்கத்தினால் மீள் குடியமர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் எவ்வித உதவிகளும்  இப்பகுதிமக்களுக்கு சரிவர வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.

21 ஆண்டுகளுக்கு பின் தம் சொந்த மண்ணிற்கு திரும்பியிருப்பது  மகிழ்ச்சியளிக்கின்றது இருப்பினும் எம் மண்ணின் வளம் யுத்தம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீடுகள் எல்லாம் மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றது. அதனை மீண்டும் திருத்தி அமைத்து நாங்கள் தங்குவதற்கு பலநாட்கள் தேவை என்றும் ஓய்வுபெற்ற பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர் திரு.சண்முகம் இரத்தினசிங்கம் தெரிவித்தார்.



அத்துடன் இப்பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட இடத்தில் கண்ணிவேடியொன்று குப்பை எரிக்கும் போது வெடித்ததாகவும் அதனால் ஒருவர் காயப்பட்டதாகவும் தெரிவித்தனர். இத்தகைய நிலையில் தாம் பாதுகாப்புடன் இருக்கமுடியாது என்றும் தெரிவித்தார்.

தம் வாழ்விடங்களில் புனரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அப்பகுதி மக்களுக்கு அரசாங்கத்தினதும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் உதவிகள் உடனடியாக தேவைப்படுகின்றன என தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், தம்  வாழ்விடங்களில் முழுமையாக மீளக்குடியமர 2013 வரையான காலப்பகுதி தேவைப்படும் என்றும் தெரிவித்தனர்.
  தாங்கள் தமது சொந்தஇடத்தில் நிரந்தரமாக இருக்கமுடியாத நிலை காணப்பட்டாலும் இடையிடையே வந்து சிறிது சிறிதாக துப்பரவு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும். விறகுகள் வெட்டிச்செல்வாதாகவும் கூறினர். இருப்பினும் தாம் தமது சொந்த இடங்களில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 யுத்தம் முடிவடைந்து தமது சொந்த மண்ணிற்கு 21 ஆண்டுகளின் பின் மீளக்குடியேறியுள்ள கொல்லங்கலட்டி பிரதேச மக்கள் இவ்வாறான சிரமங்களை தொடர்ந்தும் எதிர்நோக்கி வருகின்றனர்.

ஆக்கம்- மறீன்.ஜெ

Continue reading →