Thursday, March 1, 2012

கொழும்பு பயணம் பற்றிய ஓர் பார்வை…………

0 comments



2010- 2012களில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஊடகவழங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் இதழியல் டிப்ளோமா பயிற்சி கட்டமைவுகள் போன்;றவற்றிற்கு இணங்க ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் நான்காம் அணி மாணவர்களின் உள்ளகப்பயிற்சி -1 இற்கான விஜயம் 06.09.2011 – 14.09.2011 வரை கொழும்பில் இடம்பெற்றிருந்தது.




அதில் எமது பாடத்திட்டத்திற்கு இணங்க பல ஊடக நிறுவனங்களுக்கு சென்று  மாணவர்கள் ஊடக நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக அறிந்து கொள்வதனையும் மாணவர்கள் தமது ஆளுமையினை விருத்தி செய்துகொள்வதை நோக்கமாக கொண்டு இவ் உள்ளகப்பயிற்சி அமைந்திருந்தது. இதன்மூலம் பல செயற்பாடுகளைநேரடியாகப்பார்வையிட்டு எமது ஊடக அறிவை மேலும் வலுப்படுத்தியும் பெருக்கிக்கொள்ளவும் முடிந்தது. இப்பயணமானது ஊடக மாணவர்களாகிய எமக்கு மிகவும் பிரயோசனமாகவும், பயனுடையதாகவும் இருந்தது. அதில் நான் கொழும்புக்கு சென்றது இதுவே முதல்தடவையாகும்
அதில் முதலாவதாக பாராளுமன்றம் சென்றேன் பாராளுமன்றத்தில் நடைபெற்ற செயற்பாடுகளை நேரடியாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அதாவது பாராளுமன்றம் கூடும் முறை அங்கு நடக்கும் விவாதங்கள் போன்றவற்றையும் பாராளுமன்றம் பற்றிய தெளிவான விளக்கத்தையும் பெற்றேன்
சுதந்திர சதுக்கத்தை பார்வையிடச்சென்றேன். அங்கு பழைய வரலாறுகள், கதைகள் சிற்பங்களாகப்பொறிக்கப்பட்டிருப்பதை பார்வையிட முடிந்தது.
ளயமவாவை.எஇளசையளய வ.எஇ சயனழைஇ போன்றவற்றிற்கும் சென்று அங்கு நடைபெற்ற நிகழ்வுகளையும் பார்வையிட முடிந்தது. அங்கு எவ்வாறு செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றன மற்றும் ஒரு நிகழ்க்கி எவ்வாறு தயாரிக்கப்படுகின்றனு என்பதையும் பார்வையிட முடிந்தது.
பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிற்கு சென்றதன் ஊடாக ஊடகவியல் ஒழுக்கக்கோவை பற்றியும் அது மீறப்படும்போது ஏற்படும் விளைவுகள் பற்றியும் ஊடக ஒழுக்கத்தின் தற்போதைய நிலைபற்றியும் அறியமுடிந்தது.
முரண்பாடுகளை தீர்ப்பதற்கு மொழிபோன்றவை தடையாக இருந்தாலும் உடல் அசைவுகள் மூலமும், ஒற்றுமை மூலமும், விட்டுக்கொடுப்புகள் மூலமும் முரண்பாடுகளை தீர்க்கமுடியும் என்பது பற்றியும் அறியமுடிந்து.
டுயமந hழரளந நிறுவனத்திற்கு சென்றதன் மூலம் பத்திரிகை அச்சடிக்கும் முறைபற்றியும் அநணin வகைகள் போன்றவற்றையும் அவற்றின் செயற்பாடுகளையும் முழுமையாக பார்வையிட முடிந்தது. மற்றும் 3வகையான இயந்திரங்கள் பற்றியும் அவை எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது போன்ற பல்வேறுபட்ட விடயங்களையும் அறிந்து கொள்ள முடிந்தது.
விழுதுகள் ளநஅநயெச இல் கலந்துகொண்டு செய்தி என்றால் என்ன, செய்தியை எப்படி எழுதுவது என்பது பற்றியும் மேலதிகமாக கற்றுக்கொள்ளமுடிந்தது.
ஆநனiஉயட கயஉரடவலயின் கண்காட்சிக்கு சென்றபோது ஒரு மனிதனுக்கு தேவையான சகல விதமான முற்றுமுழுதான அறிவையும் பெறக்கூடியதாக இருந்தது.
அத்துடன் ஒரு செயலை செய்யமுன் ஒரு திட்டமிட்ட செயற்பாடு அவசியம் அதன்மூலம் வெற்றிகரமாக எதையும் செய்து முடிக்கமுடியும் என்பதையும் கற்றுக்கொண்டேன்.
பாராளுமன்றத்தில் இருந்த மரபுரீதியான முடி மற்றும் ஆசனங்கள் என்பவற்றையும் பழைய வரலாறுகளையும் அறிய முடிந்தது.
வேறுபட்ட மொழியை சேர்ந்த மாணவர்களுடன் உரையாடுவதில் ஆரம்பத்தில் சவால்களை எதிர்கொண்டேன் பின்பு அது மொழி பெயர்க்கப்படுவதன் மூலமும் ஓரளவு பொதுவான மொழியை பயன்படுத்துவதன் மூலமும் அதனை தீர்க்கமுடிந்தது. ஆத்துடன் உடல் அசைவுகள், சைகைகள் என்பவற்றின் மூலமும் தொடர்புகொண்டேன்.
















Leave a Reply