இயல்பு நிலைக்கு திரும்புமா வசந்தபுரம் மக்களின் வாழ்வு நிலை??
அரியாலையில் வசந்தபுரம் கிராமமக்களுக்கான மீள்குடியேற்றம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
சொந்த இடங்களில் மீள் குடியேறிய மகிழ்ச்சியை மட்டுமே மூலதனமாகக் கொன்டு தமது இருப்பிடங்களுக்கு விட்ட மகிழ்ச்சியில் குடியேறிய அரியாலை வசந்தபுரம் மக்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.
1990களில் உள்நாட்டு யுத்தம் காரணமாக தமது இருப்பிடங்களைவிட்டு புலம் பெயர்ந்து; சென்ற மக்கள் இந்தியாவிலும் இலங்கையின் பல் வேறு பகுதிகளிலும் குடியேறினர் தமது சொத்துக்களில் பெரும் பகுதியையே இழந்த மக்கள் 20 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் குடியேறியுள்ளனர்.
குடியேறி 2 வருடங்கள் நெருங்கியுள்ள போதிலும் இன்னும் அடிப்படை வசதிகளே பூர்த்தி செ;யப்படாத நிலையில் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் தொடர்கிறது அவர்களது வாழ்க்கைப்பயணம்.
1990களில் இந்த இடத்தில் 350 குடும்பங்கள் வரையில் இருந்தனர் யுத்தம் ஏற்படுத்திய தொடர் இடப்பெயர்வுகள் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் நாடு கடந்தும் குடியேறிய மக்கள் கால மாற்றத்தால் அங்கேயே நிரந்தர வாசியாகவும் மாறிவிட்டனர் தற்போது சுமார் 38 குடும்பங்களைச்சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலானவர்களின் வாழ்வாதார தொழிலாக கடற்தொழில் உள்ளது. வார நாட்களில் மூண்று நாட்களே கடலுக்குச் செல்ல அனுமதி கொடுக்கப்படுகின்றது. அதில் வரும் வருமானத்தைக்கொண்டே அண்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் சுமார் 03 முதல் 06 அங்கத்தவர்கள் வரையில் உள்ளனர். பாடசாலை செல்லும் மாணவர்கள் உள்ளனர். கிணறு உட்பட அடிப்படை வசதிகளே இல்லாத நிலையிலும் அவர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை தெரிகின்றது. முக்கியமான விடயம் என்னவென்றால் அங்குள்ள மக்களில் பெரும் பகுதியான குடும்பங்கள் காணி உறுதியில்லாத நிலையிலேயே அங்கு குடியேறியுள்ளனர் ஆனால் அந்த இடங்களிலேயே 30 வருடங்களுக்க முன்பே பரம்பரையாக இருந்ததாக கூறுகின்றனர் .; தற்போது அரசாங்கத்தின் உதவிகளைப்பெற்றுக் கொள்ள காணியுறுதி தேவைப்படுகின்றது அது வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு வீதிகளும் சீர் அற்றநிலையிலேயே காணப்படுகின்றது. வெகு விரைவில் வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர். பாடசாலை செல்லும் சிறுவர்கள் அதிகளவில் உள்ள போதிலும் வசந்த புரத்திற்கு அண்மையில் பாடசாலை இல்லாத நிலை காணப்படுகின்றது. பாடசாலைக்காக யாழின் மத்திய பகுதிக்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது. முன்பு இவ்விடத்தில் இருந்த பாடசாலை முற்றாக அழிவடைந்த நிலையில் உள்ளது. இங்கே ஒரு பாடசாலை அமைக்கப்படுவதை எல்லா மக்களும் வரவேற்கின்றனர். ஆயினும் அதற்கான ஏற்பாடுகள் எவையும் ஏற்படுத்தவி;ல்லை. மக்கள் ,ன்னும் ஏக்கத்துடனே தமது வாழ் நாளை கழித்துக் கொண்டு ,ருக்கின்றனர்.