Thursday, March 1, 2012

அனுபவப்பகிர்வு

0 comments

அனுபவப்பகிர்வு

17ஃ10ஃ2011ஆம் திகதி காலை 11 மணியளவில் எமது பயனம் ஆரம்பமானது  எமது நிறுவனத்தில் இருந்து கொழும்பில் இருந்து விமானம் மூலம் நாம் இந்திய நோக்கி பயனம் ஆனாம்  எங்களில் பல பேருக்கு இது முதல் விமானப் பயனம் இதனால் அனைவரது முகத்திலும் கவலையும் சந்தோசமும் குடி கொன்டிரந்தது 18.10.2011 ம் திகதி காலை 9 மனியளவில் சென்னை சென்றடைந்தோம்




       சென்னை  பல்கலை கழகத்திற்கு சென்ற முதல் நாள் எம்மை பல பிரிவுகளாக பிரித்து ஒவ்வெரு  பிரிவினையும் ஒவ்வெரு குப்பம் அல்லது சேரி என்று அழைக்கப்படும் இடத்திற்கு அழைத்து சென்றனர் இதில் நாம் சென்றது நெடுச்செழியன் நகர் நாம் புகையிரத்தில் பயனம் செய்து சிறிது தூரம் நடந்து சென்றோம்   நாம்வீதியினால் நடந்து செல்லும் போதும் கண்ட காட்சி வீதியின் இரு பக்கமும் குடும்பம் குடும்பமாக மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை கானக்கூடியதாக இருந்தது இவர்கள் வீதியிலேயே ஆடை தோய்த்து கொன்டிருந்தனர் இவர்கள் தமது அன்றாட வாழ்க்கையினை வீதிகளிலோயே வாழ்ந்த கொன்டிருக்கின்றன் அவர்களின் குழந்தைகள் வீதிகளிலேயே விளையாடிக்கொன்டிருந்தனர்  அவர்கள் மேனிகள் அழுக்க படிந்து கானப்படுவதோடு அவர்களின் ஆடைகளும் கிழிந்தும் அழுக்கு படிந்து கானப்பட்டன
இவ்வாறன நிலையினை இலங்கையில் காணப்படாததனால் எனக்கு இது ஒரு புதிய அனுபவமாக  காணப்படுகின்றது இது போல் அடுத்து நெடுச்செழியன் நகறுக்கு சென்ற போது அங்கு நாம் முதலில் கன்ட காட்சி ஓர் வயதான பாட்டி நிலத்தில் சிறு விரிப்பு விரித்து தனது உணவுப்பண்டங்களை அதன்மோல் போட்டு வியாபாரம் செய்து கொண்டிருநதார் அந்த உணவுப்பண்டங்கள் மோல் இலையான்கள் குவிந்திருப்பதை கானக்கூடியதாக இருந்தது அதனைப் பொருட்படுத்தாது சிறுவர்கள் அவ் உணவுப்பண்டங்களை வாங்கி உண்கின்றனர்
 நொடுச் செழியன்  நகர் என்றால் பெரிய நகர் என்று எதிர்பார்த்த சென்ற எமக்கு அங்கு எமக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது அங்கு சிறிய வீதியின் இரு மருங்கிலும் சிறு சிறு குடில்களாக காணப்பட்டது வீயில் இருவர் ஓரோ நேரம் நடந்து செல்ல முடியாது இவ்வளவு சிறிய வீதியாக காணப்பட்டது வீதியின் இரு மருங்கிலும்   மக்கள் ஆடை தோய்த்த வன்னம் இருந்தனர்  சிலர் மரக்கறிகள் வெட்டிக்கொண்டிருந்தனர் ஒருவாறு வீதியினால் நடந்து சென்று கொன்டிருக்ரகையில்  வீடுகளின் முன் கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்தன  துர்நாற்றம் வீசியது  குப்பை மேடுகள்
சுற்றி சுற்றி காணப்பட்து சிறுமிகள்  கையில் குழந்தையுடன் இருந்தார்கள் இவர்கள் 18 வயது வருமுன்னர் திருமனம் செய்து குழந்தையுடன் கானப்படுகின்றனர் nhங்கள் சிறிது தூரம் சென்ற பின்னர் ஆடுகளின் கால்களை வெட்டி அதனை சுடு நிரில் அவித்து பின் நெருப்பில் வாட்டுகின்றனர் இதனை பாய செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றனர் எனத்தெரிவித்தனர் அவை நிலத்தில் போட்டு காய விடுகின்றனர்  அவற்றில் இலையான் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றது அவற்றிலிருந்து எவ்வளவு கிருமிகள் தொற்றும் என்று தொரியாமல் அவற்றை நிலத்தில் காய விடுகின்றனர்  அது எமக்கு புதிய அனுபவமாக இருந்தது
    கூவம் ஆற்றின் அருகில் அங்கிருந்து வெளிவரும் தூர்நாற்றத்தினையும் பொருட்ப்படுத்தாது  மக்கள் அதன் அருகில் இருந்து தமது வேலைகளை செய்து கொன்டிருந்தனர் இவர்களது வாழ்கை இப்படியா? என என்னத் தோன்றியது. அதற்க்கு அடுத்ததாக இவர்களது வீடு அது வீடு என்று செல்ல முடியாத அளவிற்கு அவ்வீடு காணப்பட்டது வீடுகளின் கூரைகள் விளம்பர சீலைகளினால் மூடப்பட்டு காணப்பட்டது  வீடுகளின் சுற்று சுவர்களும் சீலைகளினால் தான் கட்டப்பட்டது
அதன் பின் மெரீனா கடற்கரைக்கு சென்ற போது  கடற்கரையில் மக்கள் கூடி இருந்தனர் அவர்களது வீடு   அந்த கடற்கரை தான் அவர்கள் வாழ்கை நடாத்துகின்றனர் வானமோ கூரையாக தரையில் இவர்கள் படுத்திருந்தனர்  இவர்களது வாழ்கை எமக்கு புதிய அனுபவமாக இருந்தது


;









Leave a Reply