யாழ்ப்பாணத்துக்கு முதற் தடவையாக வியட்நாம் நாட்டைசேர்ந்த ஊடகவியலாளர்கள் விஐயம் செய்துள்ளனர்.வியட்நாம் நாட்டின் கனோய் என்ற இடத்தில் வியட்நாம் அரசின் தகவல் திணைக்களத்தின் ஊடகப் பயிற்சி நிலையத்திலிருந்து பதினைந்து ஊடகவியலாளர்கள் வந்திருந்தார்கள்.
இவர்கள்
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் பயிற்சிகள் செயல்திட்டங்களில் பங்கு கொண்டு பயிற்சி பெறுவதற்காகவும். அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் யாழ்ப்பாணம் வந்திருநததாக வியடநாம் குழுவிற்கு தலைமை தாங்கி வந்துள்ள Tran Thi Khanh Hoa தெரிவித்தார்.
ஓகஸ்ட் 19,20 திகதிகளில் ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்துக்கு விஐயம் செய்த இவர்கள் தமது பயிற்சி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அதே வேளை ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தின் பதிப்பூடக செயற்பாடுகள் ,றேடியோ,ரி.வி செயற்திட்டங்கள் மற்றும் இணைய ஊடகச் செயற்பாடுகள், பயிற்சிகளை பார்வையிட்டும் கேட்டும் அறிந்து கொண்டனர். ஊடக வளங்கள் பயிற்சி மையம் மறுவன்புலோ சகலகலாவள்ளி மாணவர்களுடன் நடத்திய புகைப்படபயிற்சி மற்றும் கண்காட்சி செயற்பாடுகளின் காணொளியை பார்வையிட்டு தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர். இவ்வாறான புதிய வகையான செய்தி சேகரிப்பு பணிகளை தமது பயிற்சிகளிலும் சேர்த்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்குமென்றும் மேலும் தெரிவித்தனர்.
மேலும் ஊடக வளங்கள் பயிற்சி நிலைய மாணவர்களுடன் இணைந்து களநிலை ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.இந்த இணைந்த பயிற்சித்திட்டம் 19/20.09.2012 திகதிகளில் தொடச்சியாக நடைபெற்றன என்று ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தின் இயக்குனர் தே. தேவானந்த் தெரிவித்துள்ளார்.இந்த பயிற்சி நெறியை சுவீடன் நாட்டின் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நிலையமான போயோ(FOJO) நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட வியட்னாம் ஊடகப்பயிற்சி மையத்தின் இயக்குனர் Tran Thi Khanh Hoa ,
“நாம் 2007ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வர விரும்பினோம். ஆனால் அப்போது அதற்குரிய தகுந்த சூழல் காணப்படவில்லை. இப்போது தான் வர முடிந்துள்ளது. எங்கள் நாட்டில் ஊடகம் வளர்ச்சி அடைந்து உள்ளன. வியட்நாமில் 90 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். 700 ஊடகங்கள் நிறுவனங்கள் இயங்குகின்றன. 17,000 ஊடகவியலாளர்கள் பணிபுரிகின்றார்கள். நாம் ஐரோப்பிய நிறுவனங்களுடன் இணைந்து நவீன பயிற்சிகளைப் பெறுகின்றோம். யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். குறிப்பாக மாணவர்களுக்கு எல்லாவித ஊடகத் துறைகளிலும்; பயிற்சி அளிக்கப்படுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். சிறப்பாக இயங்குகின்ற இந்த நிறுவனத்தையும் அதன் பயிற்சி வழங்கல் முறையையும் பார்க்க விரும்பினோம். இப்போ அதனை இயக்குனர் தே.தோனந்துடன் கலந்துரையாடியும் மாணவர்களின் செயற்பாடுகளை பார்வையிட்டும் அவர்களுடன் கலந்துரையாடியும் அறிந்து கொண்டோம். மகிழ்ச்சியாக உள்ளது.’ என்று குறிப்பிட்டார்.