யாழ்ப்பாணத்தில் இருந்து வடக்கு பக்கமாக 34கிலோ மீற்ரர் தூரத்தில் அமைந்துள்ள ஆலயமே செந்தோமயர் ஆலயம்;. பருத்தித்துரை முனைபிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் பருத்தித்தரை முனைக்கடவலில்தான் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்றார்கள் இம்மீன்பிடிமூலம் தங்களது வாழ்வாதாரத்ழைத தேடிக்கொள்கின்றார்கள். இம் மீனவர்களுடைய குல தெய்வமாக செந்தோமையர் தேவாலயம் திகழ்கின்றது .
மீனவர்கள் தொழிலுக்கு செல்வதற்கு முன் இந்த ஆலயத்திலே வந்து தங்களுடைய முதல்வனக்கத்தை செலுத்திவிட்டு அதன்பின்னர் தான் கடலுக்குள் செல்கின்றார்கள். இப்பருத்துரைகடலின் முன்னே வீதிக்கு ஒரு புறமாக உள்ள ஆலயமே செந்தோமையர்.
பருத்தித்துரை கடலிலே கட்டுமரம் ,இழுவைப்படகு, படகுகளை கொண்டு மீனவர்கள் தொழிலில் ஈடுபடுகின்றார்கள். ஆழமான இந்த கடலில் குலதெய்வத்தினுடைய ஆசியுடனும் தங்கள் மீதுள்ள நம்பிக்கையுடனும் தொழிலை மேற்கொள்கின்றனர் இவர்கள் கடலுக்குள் சென்று திரும்பி வரும்வரை இவர்களுக்க துனை இந்த ஆலயமே.
மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...