Thursday, January 12, 2012

மாற்றங்களையும் ஏற்படுத்திய கொழுப்பு நோக்கிய உள்ளக பயிற்சி பயனம்

0 comments
மாற்றங்களையும் புதிய புதிய அனுபவங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்திய
கொழுப்பு நோக்கிய உள்ளக பயிற்சி பயனம். ஆம் யாழ்ப்பான பல்கலைக்கழ
ஊடகவளங்கள் பயிற்சி மைய மாணவர்களுக்கான உள்ளகப்பயிற்சி பத்து நாட்கள்
கொழும்பில் 06.09.2011 அன்று ஆரம்பமாகியது  பாராளுமன்றம் பத்திரிக்கை
முறைப்பாட்டு ஆணைக்குழு நூதன சாலை மருத்துவபுPடக்கண்காட்சி மகேந்திரா
நிறுவணம் லேக் கவுஸ் போன்றபல இடங்கள் பல விடயங்கள்அறிய வாய்ப்பாக
இருந்தது.

பாராளு மன்றம் என்ற ஒன்று பாடத்திட்டத்தில் மட்டுமெ எம்மால் அறிந்து
கொள்ள முடிந்தது. நாம் நேரிலவ் சென்று அதன் அமைப்பு முறைகளை பற்றியும்
அதனுடைய செயற்பாடுகள் நடைமுறைகளை அறிந்து கொள்ள முடிந்தது. இது தொடர்பாக
பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர் மகேந்திரன் கிறிஸ்தோபர் விரிவாகவும்
விளக்கமாகவும் கருத்துரைகள் வழங்கினார். பாராளுமன்ற விவாதங்களையும்
நேரில் பார்க்க கூடியதாக இருந்தது.

அதனை விட கன்க முனொகரனின் சட்டத்துறை யில் தழிழ் எவ்வாறு பயன்படுகின்றது
என்பதனை கருத்துரை மூலம் அறிய முடிந்தது. இலங்கை ஊடகவியலாளர்களுக்கு
பாதுகாப்பினை வழங்கும் நிறுவணமான இலங்கை பத்திரிக்கை முறைப்பாட்டு
ஆணைக்குழுவின் கருத்துறைகளும் செயற்பாடுகளும் விரிவான விளக்கங்களும்
அனுபவங்களும் வழிகாட்டியாக அமைந்தன பத்திரிக்கை முறைப்பாட்டு
ஆணைக்குழுவின் நோக்கங்கள் செயற்பாடுகள் பற்றியும் அறிந்து கொள்ள கூடியதாக
அமைந்தது. ஊடகவியளாளர்கள் எதிர் நோக்கும் சவல்கள் பிரச்சினைகள்
தொடர்பாக்வும் அறிந்து கொள்ள கூடியதாக இருந்தது. இலங்கையில் தழிழர்கள்
உடகதுறையில்எதிர்நோக்கும் பிரச்சினைகள் போலவே சிங்களவர்களும்
எதிர்நோக்குகின்றனர். என்பதனை அறியகூடியதாக இருந்தது.
கல்விஅமைச்சர் திசாநாயக்காவுடனான சந்திப்பு புதிய அனுபவத்தினை பெற்றுத்த.
உயர்கல்வி திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கங்களை அளித்தார். புதிய
தொழில்கல்விகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. வெளிவாரிப்பட்டப்படிப்புக்கள்
நிறுத்தப்படவுள்ளன இக் பட்டப்படிப்புககள் ஒழுங்கான முறையில்
நடைபெறவில்லை. எனவும் தெரிவித்தார். பல்கலைக்கழக அபிவித்திக்காக
அனுப்பப்படும் நிதி மீளவும் திருப்பி அனுப்பபடுகின்றது .எனவும்
தெரிவித்தார்.
தெற்காசிய பெண்கள் அமைப்பு நடாத்திய கருத்தரங்கில் பங்குபற்றினோம்
தெற்காசியபெண்கள்  ஊடகதுறையின் பங்களிப்பு  தெற்காசிய பெண்கள்
ஊடகதுறையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக
ஆராயப்பட்து. சமுக கலாச்சாரம் அவர்களின் ஊடக பயனத்திற்கு
தடைவிதிக்கின்றது. தற்காலத்தில் கணிசமான பெண்ள் ஊடகதுறையில்
பிரவேசிக்கின்றனர். ;ஆயினும் பெண்கள் ஊடகதுறையில் நிலைத்து நிற்க
முடியவில்லை. இதற்கானகாரணங்கள் இதனை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து
ஆராயப்பட்டது. இந்த விடயங்கள் புதிய அனுபவத்தினை பெற்று கொடுத்தது.
கொழும்பு நூதன சாலையில் நாம் முன்பு கற்ற விடயங்களை பார்வையிட முடிந்தது.
இலங்கையின் வரலாறுகள் படையெடுப்புகளின் அடையாள சின்னங்களை பார்வையிட
முடிந்தது. கலை வர்ணம் கூடிய சிற்பக்கலைகள் பாரம்பரிய மன்னர்களின்சிலைகள்
பாவிக்கப்பட்ட பொருட்கள் போன்றவற்றையும் பார்வையட முடிந்தது.
யுத்தகாலத்தின் பின்னர் மோதலை எவ்வாறு தீர்ப்பது. பிரச்சினையின் போது
எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை அரங்க விளையாட்டின் மூலம் அறிய
முடிந்தது. பிரச்சனையை கண்டு ஓடி ஒழிய கூடாது. நின்று சிந்தித்து
செயலாற்ற வேண்டும்தனியாக நாம் மட்டும் போராடி பிரச்சினையில் இருந்து
விடுதலை பெற முடியாது எல்லோருடைய பங்களிப்பும் அவசியம் என்பதனை அறிய
முடிந்தது.
சிங்கள் முஸ்லீம் மாணவர்களுடன் சகஜமாக கலந்துரையாடவுமம் இது ஒரு
வாய்ப்பாக அமைந்தது யுத்தம் முடிவடைந்து  இரண்டு வருட ங்களின் பின்னரான
நடவடிக்கைகள் குறித்தும் சிங்கள் முஸ்லீம் தழிழ் மாணவர்களின்
கருத்தக்களையும் கேட்டிறிய கூடியதாக அமைந்தது.
களனி பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கண்காச்சி மிகவும்  பயனுள்ளதாக
அமைந்தது மனித உடல்களின் செயற்பாடுகள் உடல்  உறுப்புக்களில் ஏற்படும்
நோய்கள்அறிகுறிகள் விளைவுகள் குறித்தும் அறிந்து கொள்ள கூடியதாக
அமைந்தது. விபத்துக்கள் தொடர்பான விளக்கங்கள் வரைபடங்கள் ஊடாக அறிய
முடிந்துத. விபத்து ஏற்படின உடனடியாக செய்யவேண்டியது கொலை தொடர்பாகவும்
அறிய முடிந்தது.இந்த கண்காட்சி சகிப்பு தன்மையையும் பயஉணர்வினையும்
அகற்றுவதாய் அமைந்நது.
ஊடகவியலாளர்களுக்கு வாசிப்பு திறன் குறைவடைந்து வருகின்றது வாசிப்பு
அவசியம் எனதினக்குரல் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம் கூறினார். மகாராஜா
கூட்டுத்தாபனத்தின் நிறுவனங்களின் செயற்பாடுகளை பார்வையிட்டோம் செயதி
அறைகளின் செயற்பாடுகள் எவ்வாறு அவை இயங்குகின்றன என்பதனையும் அறிந்து
கொள்ள முடிந்நது. நிகழ்சி நிரல்கள் தயாரிப்புகள் அதனை எவ்வாறு பதிவு
செய்கின்றனர் ன்பதனை ரத்மலானை சென்று பார்வையிட்டோம் ஒளி ஒலி எவ்வாறு
கடத்தப்படுகின்றன என்பது தொடர்பாகவும் கேட்டு அறிச்து கொள்ள முடிந்தது.
வீரகேசரி என்ற பத்திரிக்கையின் நிறுவன செயற்பாடுகளை பார்வையிட முடிந்தது.
இந்த நிறுவணத்தின் வளர்ச்சிப்பாதைகள் கடந்து வந்த சவால்கள் தொடர்பாகவும்
அறிந்து கொண்டோம்.இ இனையத்தில் இயங்கி வரும் வீரகேசரி ஒன்லைன்
செயற்பாடுகள் எந்தெந்த முறையில் அவை வகைப்படுத்தப்படுகின்றன எனவும் அறிய
முடிந்தது.
குழுவாக சேர்ந்து செயற்படுவது குறித்தும் இந்த சுற்றுப்பயனம்
கற்றுத்த்நதது. விட்டுக்கொடுத்து எம்முள் இருந்த சிறு சிறு பிரச்சினைகளை
தீர்த்துக்கொள்ள இவ் சுற்றுப்பயணம் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...
Continue reading →
Wednesday, January 11, 2012

MRTC-UOJ's photostream

0 comments
Continue reading →

MRTC-UOJ's photostream

0 comments
Continue reading →

P1020128

0 comments
P1020128 by MRTC-UOJ
P1020128, a photo by MRTC-UOJ on Flickr.

Sri lankan Education minister at University of Jaffna on 11.01.2012

Continue reading →

யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய நெசவு உற்பத்தி

0 comments


பாரம்பரியமாக ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகோலாக இருப்பது சுயதொழில் உற்பத்தியே ஆகும். இவ் உற்பத்திகள் யாழ்ப்பாணத்தில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் உற்பத்திகளில்; ஒன்றாக நெசவு உற்பத்தி காணப்படுகின்றது.  இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வந்த நெசவு உற்பத்தி  ஆனது; இலங்கைக்கு அன்னியரின் வருகையுடன் நெசவு உற்பத்தியும் எடுத்து வரப்பட்டது. அன்னியரின் படையெடுப்புகள் மூலம் இலங்கைக்கு பல பாதி;ப்புக்கள் ஏற்படினும் இது போன்ற ஒரு சில நன்மைகள் ஏற்படவும் இவர்களின் வருகை காணப்பட்டது.

இந்த வகையில் 1960களில் யாழ்ப்பாணத்தில் பூர்வீகமாக ஆரம்பிக்கப்பட்ட நெசவு உற்பத்தியானது பல நூற்றுக்கணக்கான கிளைகளைப் பரப்பி ஆலவிருட்சம் போல் பரந்து காணப்பட்டது. இதனால் அக் காலகட்டத்தில் பொருளாதார ரீதியிலும் பல மாற்றங்கள் ஏற்படவும் இது அடிப்படையாக காணப்பட்டது. இருப்பினும் பிற்பட்ட காலங்களில் ஏற்பட்ட சமூக,அரசியல் மாற்றங்கள் காரணமாக நெசவு தொழிற்துறை ஆனது ஒரு வீழ்ச்சி பாதையை நோக்கி நகரத் தொடங்கியது. இன்று இத் தொழிற்துறையானது முற்றாக அழிந்த விடும் தறுவாயை எட்டியுள்ளது. இதற்கு பல வித காரணங்கள் முன்வைக்கப்படுகின்றது.

இந் நிலையில் இவ் உற்பத்தியின் இன்றைய நிலை பற்றி கரவெட்டி நெசவு நிலையத்தின் பொறுப்பாளர் திருமதி. வைத்திலிங்கம் குறிப்பிடுகையில் இந்தியரின் வருகையினாலும் அவர்கள் தமது உற்பத்திகளை பல விதமான விளம்பரங்கள் விற்பனை தந்திரங்கள் என்பவற்றாலும் தமது உற்பத்திகளை இங்கு விற்பனை செய்யத் தொடங்கினர். குறிப்பாக எமது மக்களும் அதன் பால் கவரப்பட்டதானால் அவர்களும் பெருமளவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளையே வாங்கவும் தொடங்கினர். இதனால் எமது ஆடை உற்பத்திகளுக்கு வீழ்ச்சியடையத் தொடங்கி விட்டது என்றும் தற்போது இளம் சமூகத்தினர் நெசவு தொழிலில் ஆர்வம் காட்டுவதில்லை. முன்பெல்லாம் பல பிள்ளைகள் கஷ்டத்தின் மத்தியில் இங்கு வந்து தொழில் செய்தனர். ஆனால் இன்று வெளிநாட்டுப் பணத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளதுடன் இவர்களுக்கும் வேறு பல கல்வித்துறை வாய்ப்புக்கள் வந்ததனால் அதனை எல்லா பிள்ளைகளும் கற்கத் தொடங்கி; விட்டனர். இவை மாத்திரம் அல்லாது முக்கிய காரணமாக இத் தொழிலானது மிகவும் கஷ்டமான ஒரு தொழில் ஆகும். அதாவது உடம்பை வருத்தியே வேலை செய்ய வேண்டியுள்ளது. வேறு நாடுகளில் கஷ்டப்பட்டு செய்யும் தொழிலுக்கு அதிகளவு சம்பளம் கொடுக்கப்படும். ஆனால் இங்கு இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 200ரூபா படி மாதம் 4000ரூபா கொடுக்கப்படுகிறது. இதனாலும் இவர்கள் இத் தொழிலில் ஆர்வம் காட்டாது விட்டு விடுகின்றார்கள்.

1967களில் யாழ்ப்பாண பகுதியில் நூற்றுக்கணக்கான நெசவு உற்பத்தி நிலையங்கள் காணப்பட்டதாகவும் தற்போது 19 நெசவு உற்பத்தி நிலையங்களே காணப்படுகின்றது. குறிப்பாக யாழ்ப்பாண நெசவு தொழிற்சாலைகளை பொறுத்த வரையில் 6 மாத பயிற்சி நெறிக்காக சேர்க்கப்படுகின்ற மாணவர்களே இங்கு தொழில் செய்கின்றனர். ஒரு நெசவு நிலையத்தில் 10 அல்லது 11 பேர் ஒரு தரத்தில் இணைந்த கொள்வார்கள். பிற்பட பலர் நின்று கடைசியில் 5 அல்லது 6 பேர் இங்கு வருவார்கள். இவர்களுக்கு 6 மாத காலத்திலும் ஒரு நாளைக்கு 21ஃ2 ஆ துணி அடித்தால் 200ரூபா பணம் கொடுக்கப்படும். அத்தோடு இவர்களுக்கு பயிற்சியின் பின்  உறுதிப்படுத்தப்படக் கூடிய வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில்  இன்று இல்லாமல் போய் விட்டது. மேலும் 6 மாத காலப் பயிற்சியின் பின் ஒரு நெசவு நிலையத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு என்பதும் கொடுக்கப்படுவதில்லை.

தற்போது இங்கு உள்ள நெசவு நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் அதன் விற்பனை நிலை பற்றி மாலசந்தி நெசவு நிலைய பொறுப்பாளர் திருமதி. சோதிலிங்கம் கூறியதாவது இங்கு நாம் தற்போது பெர்சிட், ரவல், சேவியற், சாறி போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வருகிறோம். நாம் இவற்றை தயாரிப்பதற்கான நூலினை கைதடியில் அமைந்துள்ள தொழிற்துறை திணைக்களம் தருவதாகவும் இங்கு செய்யப்படுகின்ற பொருட்கள் ஒவ்வொரு வருடமும் கண்காட்சிக்காக வைக்கப்படுவதாகவும் இந்த வருடமும் யாழ் மத்திய கல்லூயில் கண்காட்சி இடம்பெற்றதாகவும் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் இங்கு உற்பத்தி செய்யப்படும் உடைகள் உள்ளுரிலும் வெளியூரிலும் விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பாக யு9 பாதை திறக்கப்பட்டதன் பின் இதன் விற்பனையும் சிறிதளவு அதிகரித்துள்ளதாகவும் கூறினார். இவர்கள் 8மூ வருட இலாபத்துடன் தான் இத் தொழிலையும் செய்து வருகின்றார்கள். இங்கு உள்ளுரில் உற்பத்தி செய்யப்படுகின்ற துணி வகைகள் குறைந்து 5 அல்லது 6 வருடங்கள் பாவிக்கும் தன்மை கொண்டவை. குறிப்பாக இதனை முதியோர்களே பெருமளவில் பாவிக்கின்றனர். ஏனெனில் கைதடி முதியோர் இல்லமானது வாடிக்கையாக இங்கிருந்தே துணி வகைகளை பெற்றுக் கொள்கின்றார்கள்;.

மேலும் இவர்கள் கூறும் போது தற்போது ஒரு வருட காலமாக நூல் அனுப்பப்படவில்லை என்றும் இதனால் பயிற்சிகளும் மாணவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. நாம் இது பற்றி பல தடவைகள் முறையிட்டு உள்ளோம். இது பற்றி அவர்கள் கூறும் போது இந்தியாவில் நூலின் விலையேற்றமே இங்கு நூல் பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்று கூறினார். இதன் காரணமாக தற்போது மாணவர்களிற்கான பயிற்சிகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் சென்ற வாரம் 14ஆம் திகதி நெசவு நிலையங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து சங்கானையில் ஒரு கூட்டம் இடம் பெற்றன. இதில் இந்தியாவில் இருந்து வருகை தந்த ஒரு ஆடை தயாரிக்கும் நிறுவனத்தினர் எம்மிடம் 2000ஆ துணி அடித்து தரும் படி கூறினார். அதற்கான நூலும் எமக்கு அனுப்பப்படுவதாக கூறினார். இதற்கு என ஒரு தொகுதி பணமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எமது நெசவு நிலையம் சார்பில் நாம் சம்மதம் தெரிவித்துள்ளோம்;. இதனால் நூலகள்; அனுப்பப்பட்டதன் பின்னர் எமது வேலைகள் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.


மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...
Continue reading →
Sunday, November 13, 2011
0 comments
tzf;fk;
Continue reading →